How To Stop Overthinking: இன்றைய சமூகச் சூழலில் உள்ள இளைஞ்சர்கள் அளவுக்கதிகமாக யோனை (Overthinking) செய்யும் பழக்கத்திற்கு தள்ளப்படுகின்றன. இது இளைஞ்சர்களுக்கு ஒரு தொல்லையாக இருக்கிறது.
நாம் யாரும் வேண்டும் என்றே Overthinking செய்வது இல்லை. நம்மை சுற்றி நடக்கும் சில விஷயங்களோ, நம் வாழ்க்கையோ, நம்மை ஓவர் திங்க்கிங் செய்ய வைக்கிறது. இதனால் நாம் நிம்மதியை இழக்கிறோம். குறிப்பால இரவு தூங்கும் போது தான் நமக்கு பல விஷயங்கள் நினைவில் வரும். இதனால் தூக்கம் கெட்டுவிடும்.
முக்கிய கட்டுரைகள்

அதிகம் படித்தும் சமூகச் சிக்கலாம் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் விரக்தியின் உச்சத்தில் இருப்பர். இத்தகைய சூழலில் Overthinking நம்மை ஆட்டிப்படைக்கும். சில நேரங்களில் இது நம்மை தற்கொலை வரை தூண்டலாம். இது போன்ற சூழலில் நீங்கள் Overthinking-ல் இருந்து வெளிவர சில வழிகள் உள்ளது. அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: Mental Illness Types: மனநலப் பிரச்சனைகளில் உள்ள வகைகள்!
அளவுக்கதிகமாக யோசிப்பதை நிறுத்துவது எப்படி (How To Stop Overthinking):
நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிக்கொண்டு ஓவர் திங்கிங் செய்வது போல் உணர்ந்தால், உடனடியாக உங்கள் நினைப்பை திசை திருப்ப முயற்சிக்கவும். நீங்கள் உங்களை பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த வேலையை செய்வது, சமைப்பது, பாட்டு கேட்பது, நடனம் ஆடுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி காண்பது போன்றவற்றில் உங்களை ஈடுப்படுத்துங்கள்.
Overthinking செய்யவது போல் தோன்றினால், உடனடியாக தூக்கத்தை நாடவும். நல்ல தூக்கம் உங்கள் மனதை அமைதிப்படுத்தும். இதற்காக உங்கள் அறையை அமைதியாகவும், நல்ல வாசனை நிறைந்ததாகவும், விளக்குகளை டிம்மாகவும் வைத்துகொள்ளவும். மேலும் உங்களது கட்டிலில் மென்மையான பருத்தி துணியை விரித்துக்கொள்ளவும். இத்துடன் உங்கள் தலையணையும் மெமையாகவும், உங்களை உறுத்தாத வகையில் வைக்கவும். உங்கள் தூக்கம் கெடாதவாறு உங்கள் சூழலை உருவாக்கவும். இது உங்கள் தூக்கத்தை மேம்படுத்தவும், மனதை அமைதியாக்கவும் உதவும்.
Overthinking உங்கள் நேரத்தை வீணடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க ஏதோ ஒரு விஷயத்தை பற்றி யோசித்துக்கொண்டே இருந்தால், அது உங்கள் மன நிம்மதியை கெடுப்பதுடன், உங்கள் நேரத்தையும் வீணாக்கும். நமது நேரத்தை நம்மால் திரும்ப பெற முடியாது. ஆகையால் நமக்கு இருக்கும் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், நமது இலக்கை நோக்கி ஓட வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் Overthinking செய்வதால், உங்கள் மனநலம் மட்டுமல்லாமல், உடல் நலமும் பாதிக்கப்படும். உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுத்து, உங்கள் நேரத்தையும் வீணாக்கும் Overthinking-ல் இருந்து வெளி வர உங்களை பிஸியாக வைத்துக்கொள்ள முயற்சிக்கவும். உங்களுக்கு உதவி தேவப்பட்டால், உங்கள் நண்பரிடம் பேசுங்கள். மேலும் நீங்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. அவர்கள் உங்களை இதில் இருந்து வெளி கொண்டு வர உதவலாம்.
Image Source: Freepik