Anxiety Disorder: பதற்றம் அதிகமா இருக்கா?-இதை ஃபாலோ பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Anxiety Disorder: பதற்றம் அதிகமா இருக்கா?-இதை ஃபாலோ பண்ணுங்க!


Anxiety Disorder: ஆரோக்கியம் என்பது வெறும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மட்டும் கிடையாது. மனம் சார்ந்த பிரச்சனைகளும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது. வேலைப்பளு, வொர்க் லைப் பேலன்ஸ் போன்ற காரணங்களால் பெரியவர்கள் மட்டுமின்றி, ஹோம் வொர்க், ஒப்பீடு, மார்க் ரேஸ் போன்ற காரணங்களால் சிறுவர்கள் கூட மனச்சோர்வு, மன அழுத்தம், மனக்கவலை போன்ற மனப்பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக தேவையற்ற பதற்றம் ஏற்படும் போது நம்மை அது “ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்”(Anxiety Disorder) என்ற மனக்கோளாறு நிலைக்கு தள்ளுகிறது. பணியிடத்தில் டார்க்கெட்டை முடிக்க நேரம் நெருங்கும் போதில் இருந்து ஆள் இல்லாத தெருவில் தனியாக நடந்து செல்லும் போது யாரோ நம்மை பின்தொடர்வது போல் அஞ்சுவது வரை பதற்றம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சர்வசாதாரணமாக மாறிவிட்டது.

how-to-reduce- anxiety- immediately

இதையும் படிங்க: Black Cumin Seeds: தினமும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்!

இது நம்மை தீவிர மன அழுத்தத்தில் தள்ளும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், அதிலிருந்து மீள்வதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆன்சைட்டி டிஸ்ஆர்டரில் இருந்து விடுபடுவது எப்படி?

உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடிய இந்த ஆன்சைட்டி பிரச்சனையில் இருந்து விடுபடவும், பதற்றத்தை நிர்வகிக்கவும், சமாளிக்கவும் சில சக்தி வாய்ந்த வழிமுறைகள் உள்ளன.

பதட்டத்தின் அறிகுறிகள்

  • பதற்றம், அமைதியின்மை அல்லது தனிமையில் பதற்றமாக உணர்வது
  • ஏதாவது ஆபத்து நெருங்கி வருவது போன்ற உணர்வு
  • இதயத்துடிப்பு அதிகரிப்பது
  • வேகமாக சுவாசித்தல் (ஹைபர்வென்டிலேஷன்)
  • வியர்வை
  • நடுக்கம்
  • பலவீனமாக அல்லது சோர்வாக உணர்வது
  • பதற்றம் ஏற்பட்டால் வேலை அல்லது பிற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்றவற்றை சிந்திப்பது

பதற்றத்தை தணிக்கக்கூடிய உணவுகள்:

  • உணவு பதட்டத்திற்கு உதவுகிறது
  • சால்மன் மீன்
  • கெமோமில் பூ
  • மஞ்சள்
  • டார்க் சாக்லெட்
  • தயிர்
  • கிரீன் டீ
  • பாதாம்
  • கிரான் பெர்ரி
how-to-reduce- anxiety- immediately

பதற்றத்தை சமாளிப்பதற்கான வழிகள்:

  • பதற்றத்தை புரிந்துகொள்ளுங்கள்:

பதற்றத்தை சமாளிப்பதற்கான முதல் படி அதைப் பற்றி நன்றாக புரிந்துகொள்வது. உங்களுக்கு பதற்றம் ஏற்படுகிறது என்றால், அதற்கான தூண்டுதல், அறிகுறிகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் பதற்றத்தை கையாள்வது எளிமையானதாக மாறும். அதாவது பிரச்சனை என்ன என்பதை முழுமையாக அறிந்து கொண்டால் தானே தீர்வை தேட முடியும்.

  • தியான பயிற்சி:

மைண்ட் ஃபுல்னஸ் அல்லது தியான பயிற்சியானது மனக்கவலையை கட்டுப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் பயம், பதற்றம், அழுத்தம், மனக்கவலை போன்ற உணர்ச்சிகளை அமைதிப்படுத்தவும், எண்ணங்களை நேர்மறையாக்கி எதிர்மறையை குறைக்கவும் உதவுகிறது.

  • உடலை சுறுசுறுப்பாக வையுங்கள்:

மனக்கவலையை குறைக்க உடற்பயிற்சி சிறந்தது. வாக்கிங், ஜாக்கிங், எக்ஸ்சஎக்ஸ்சசைஸ் போன்ற உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய பயிற்சிக்ளை மேற்கொள்வது பதற்றம்,கோபம், கவலை போன்றவற்றை கட்டுபடுத்துகிறது. எனவே தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் நல்லது.

இதையும் படிங்க: Dark Chocolate Benefits:நம்புங்க!! இந்த சாக்லேட்-ல எக்கச்சக்க நன்மைகள் கொட்டிக்கிடக்கு!

  • தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்:

தூக்கமின்மை மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். ஒவ்வொரு இரவும் நீங்கள் போதுமான நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திசெய்ய வேண்டும்.

படுக்கை அறையில் தலையணை முதல் லைட் வரை ஆழ்ந்த உறக்கத்திற்கு ஏற்றார் போல் மனதிற்கு இதமானதாக மாற்ற வேண்டும்.மேலும் படுக்கைக்குச் செல்லும் முன்பு காபி, டீ போன்ற கஃபின் பானங்களை பருகுவது. டி.வி, செல்போன், லேப்டாப் போன்றவற்றின் ஸ்கிரீன் டைமை குறைப்பது அவசியமாகும்.

  • மனக்கவலையை பகிர்ந்து கொள்ளுங்கள்:

நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் அல்லது மனநல மருத்துவர் என யாரிடமாவது மனதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மனம் விட்டு பேசுங்கள்.

பெரும்பாலான மனநலப் பிரச்சனைகள் வெளிப்படையாக பேசுவதாலேயே குறையக்கூடும். இதன் மூலம் உங்கள் மனச்சுமை குறைவதோடு, அதனைக் கையாள்வதற்கான புதிய யுக்திகள் அல்லது பரிந்துரைகளையும் பெற முடியும்.

  • எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்:

பதட்டம் தொடர்ந்து எதிர்மறையான சிந்தனைகளை ஊக்குவிக்கிறது. எனவே உங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், கவலை அல்லது பதற்றம் நியமானதா? அல்லது தேவையில்லாத சுமையை மனதில் சுமக்கிறீர்களா? என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு பதற்றம் சம்பந்தமான சீரான கண்ணோட்டம் ஏற்படக்கூடும்.

Read Next

Mental Illness Types: மனநலப் பிரச்சனைகளில் உள்ள வகைகள்!

Disclaimer

குறிச்சொற்கள்