இந்திய சமையலறைகளில் சீரகம் வாசனை பொருளாக மட்டுமின்றி பல்வேறு உடல் உபாதைகளுக்கான மருத்துவ பொருளாகவும் கருதப்படுகிறது. சீரகத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொதுவான வெள்ளை சீரகம். இரண்டாவது கருஞ்சீரகம். ஆயுர்வேதத்தில் எப்போதுமா கருஞ்சீரகத்திற்கு மகத்தான நன்மைகள் உள்ளன்
இந்த கருஞ்சீரகத்திற்கு ஆயுர்வேதத்தில் தனி இடம் உண்டு. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கருப்பு சீரக தூள் பெரும்பாலும் ரொட்டி, பிஸ்கட், கேக், இட்லி, தேநீர் மற்றும் சூப்களில் பயன்படுத்தப்படுகிறது. பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்று பார்ப்போம்..

கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள்:
கருஞ்சீரகத்தில் வைட்டமின்-பி1, பி2, பி3 மற்றும் கால்சியம், ஃபோலிக் அமிலம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-சப்ளிமெண்டரி பண்புகள் நிறைந்துள்ளன.
இதையும் படிங்க: Low-Carb Breakfast: குறைஞ்ச கார்போஹைட்… ஆனா நிறைய எனர்ஜி தரக்கூடிய காலை உணவுகள் இதோ!
கருஞ்சீரகத்தில் என்னென்ன மாதியான நன்மைகள் உள்ளன என்பது குறித்து நிபுணர்கள் மற்றும் ஆய்வுகளின் துல்லியமான முடிவுகள் இதோ...
- சர்க்கரை நோய்:
கருஞ்சீரகத்தை தினமும் உட்கொள்வதால் இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் பார்மாசூட்டிகல் ரிசர்ச்சில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருஞ்சீரக விதைகளை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- இருமல், சளியை போக்கும்:
தேன், கருஞ்சீரகத் தூள், பூண்டு ஆகியவை மருந்தாகப் பயன்படுத்தினால் சளி, இருமல் குறையும். அத்துடன் ரத்த விநியோகத்தை சீராக்கி தசை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது கைகால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வையும் நீக்குகிறது.
- செரிமான மண்டலத்தை பாதுகாக்கும்:
தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, சமீபகாலமாக பலர் வயிற்று வலி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். கருஞ்சீரகம் ஊற வைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க: Protein Diet: 30 வயதை கடந்த பெண்கள் இதை கட்டாயம் கடைபிடியுங்கள்!
- நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:
உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. பருவகால நோய்கள் மற்றும் சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் இருக்கும் போது, கருஞ்சீரகத்தை உட்கொள்வதால் விரைவான நிவாரணம் கிடைக்கும். கருப்பு சீரகத்தை உட்கொள்வது சுவாச பிரச்சனைகள், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஒவ்வாமையும் நீக்குகிறது.
- தோல் பிரச்சனைகள்:
மழைக்காலத்தில் பல தோல் பிரச்சனைகள் ஏற்படும்.குறிப்பாக சொரியாசிஸ் அல்லது முகப்பரு பிரச்சனைகள் அதிகம். இருப்பினும் கருஞ்சீரகம் இந்த பாதிப்புகளை குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சரும பிரச்சனைகளை நீக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- தைராய்டு:
தைராய்டு சுரப்பி, வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களை உருவாக்கி வெளியிடுகிறது. அது சரியாகச் செயல்படாதபோது, ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் பிரச்னை ஏற்படுகிறது. உங்கள் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்வதுதைராய்டு சுரப்பி சரியாக செயல்பட உதவும் என பல்வேறு ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image Source: Freepik