தீராத தலைவலி மற்றும் கண் அழுத்தத்தால் அவதியா? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

How to get rid of headache due to eye strain: நாள் முழுவதும் பலமணிநேரக்கணக்கில் திரைகளைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் அதிகப்படியான திரை நேரம் தலைவலி, கண் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதில், திரைகளைப் பார்ப்பதால் ஏற்படும் தலைவலி மற்றும் கண் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தீராத தலைவலி மற்றும் கண் அழுத்தத்தால் அவதியா? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

How to get rid of eye strain headache fast: அன்றாட வாழ்வில் எங்கு பார்த்தாலும் மக்கள் அதிக நேரம் திரைகளின் மீது கவனம் செலுத்துவதைக் கவனித்திருப்போம். அதாவது செல்போன், லேப்டாப், கணினி போன்ற திரைகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலை, பொழுதுபோக்கு அல்லது சமூக ஊடகங்களின் பயன்பாடு என எதுவாக இருப்பினும் திரைகளின் மீதே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இது போன்று நாளடைவில் மணிக்கணக்கில் திரைகளை அதிகம் பயன்படுத்துவது தலைவலி மற்றும் கண் அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

ஆய்வு ஒன்றில், நீண்ட நாள்களுக்குப் பிறகு கண்களுக்குப் பின்னால் மந்தமான வலி அல்லது தலைவலியை உணர்ந்திருந்தால் அது பெரிய பிரச்சனையாகக் கருதப்படலாம். ஆய்வு ஒன்றில், ஸ்மார்ட்போன் பயன்பாடு ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் தலைவலியின் கால அளவு மற்றும் அதிர்வெண் அதிகரிப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் சில எளிய வாழ்க்கை முறை பழக்கங்களின் உதவியுடன் அசௌகரியத்தைக் குறைக்கவும், திரை வெளிப்பாட்டினால் ஏற்படும் மன அழுத்தம் அல்லது மோசமான பழக்கவழக்கங்களால் ஏற்படும் எதிர்கால தலைவலிகளைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் கண்களுக்கு நிவாரணம் அளிக்கவும், தலைவலியைத் தடுக்கவும் உதவும் குறிப்புகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Eye Strain Remedies: குழந்தைகளின் கண் சோர்வை நீக்க உதவும் சிறந்த ஆயுர்வேத வைத்தியங்கள் இதோ!

கண்வலி, தலைவலியைத் தடுக்க உதவும் பயனுள்ள வழிகள்

நீர்ச்சத்து குறைபாடு

பொதுவாக நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படுவது பொதுவான ஒன்றாகும். தலைவலிக்கு நீரிழப்பு ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாக உடலில் போதுமான நீர் இல்லாதபோது மூளை தற்காலிகமாக சுருங்கி, மண்டை ஓட்டிலிருந்து விலகிச் செல்லும் போது ஏற்படக்கூடியதாகும். எனவே உடலை நீரேற்றமாக இருக்க வைக்க தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க இலக்கு வைக்க வேண்டும்.

நீண்ட நேரம் வேலை செய்யும் போது, அருகில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அடிக்கடி சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். இது தவிர ஆரஞ்சு, வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீரேற்றம் தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சரியான நீரேற்றத்தின் மூலம் தலைவலியின் தீவிரம் மற்றும் அதிர்வெண்ணைக் கணிசமாகக் குறைக்கலாம்.

நீலநிற வெளிப்பாடை சரி செய்வது

திரைப்பிரகாசம் மற்றும் நீல ஒளி வெளிப்பாடு போன்றவை கண்வலி மற்றும் தலைவலிக்குக் காரணமாகலாம். டிஜிட்டல் சாதனங்களிலிருந்து வரக்கூடிய நீல ஒளி மற்றும் பிரகாசமான திரைகள் போன்றவை கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி உடலின் இயற்கையான தாளங்களைத் தொந்தரவு செய்து, தலைவலிக்கு வழிவகுக்கிறது.

இந்நிலையில் திரையின் பிரகாசத்தை வசதியான நிலைக்குக் குறைக்க வேண்டும். ஒரு திரையின் முன் நீண்ட நேரம் வேலை செய்தால், நீல ஒளியைத் தடுக்கும் கண்ணாடிகளை அணிவதைக் கவனிக்க வேண்டும். இந்த சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் கண் சோர்வைத் தடுக்கலாம் மற்றும் பதற்றத் தலைவலிக்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

20-20-20 விதியைப் பின்பற்றுவது

கண் சோர்வு, பதற்ற தலைவலியைக் குறைப்பதற்கான எளிமையான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக 20-20-20 விதியைப் பின்பற்றலாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் திரையிலிருந்து விலகி, 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளின் மீது 20 விநாடிகள் கவனம் செலுத்த வேண்டும். இந்த பயிற்சி செய்வது கண் தசைகளை ஓய்வெடுக்க வைக்கவும், சோர்வைக் குறைக்கவும், நீண்ட நேரம் பார்ப்பது தலைவலியைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் திரையைப் பார்க்கும் போது அடிக்கடி கண் சிமிட்டலாம் அல்லது கண்களை ஈரப்பதமாக வைக்க சில நொடிகள் மூடி வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Eye Strain Remedies: தீராத கண்சோர்வால் அவதியா? இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

மக்னீசியம், ஒமேகா-3 நிறைந்த உணவுகளை சாப்பிடுவது

தலைவலியைத் தடுப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் மெக்னீசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடு தலைவலியை மோசமாக்கலாம். நட்ஸ், இலை கீரைகள், பூசணி மற்றும் ஆளி விதைகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். ஒமேகா-3 க்கான கொழுப்பு நிறைந்த மீன், சியா விதைகள், வால்நட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தலைவலியைத் தூண்டும் அதிகப்படியான காஃபினைத் தவிர்க்க வேண்டும்.

மென்மையான கண் மசாஜ்

கண் சோர்வால் ஏற்படும் தலைவலியைப் போக்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் ஒரு எளிய கண் மசாஜ் அற்புதங்களைச் செய்கிறது. கண்களை மசாஜ் செய்வதற்கு ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல்களைப் பயன்படுத்தி, விரல்களை வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு புருவங்கள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதியாக லேசாக அழுத்த வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Eye fatigue remedies: சோர்வான கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் இதோ...!

Disclaimer