Eye Strain Remedies: தீராத கண்சோர்வால் அவதியா? இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Eye Strain Remedies: தீராத கண்சோர்வால் அவதியா? இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

இந்த கண் சோர்வு ஏற்படுவது பொதுவானதாக இருப்பினும், நீடித்த கண் சோர்வு மிகவும் தீவிரமான ஒன்றின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. தீவிர கண் சோர்வு ஏற்படும் சமயத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது. எனினும், பொதுவான அன்றாட பழக்கவழக்கங்கள் அல்லது சுற்றுச்சூழலில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், கண் அழுத்தத்தைக் குணப்படுத்தலாம். எனினும், சிலரின் அடிப்படை கண் நிலைமைக்குச் சிகிச்சைகள் தேவைப்படுகிறது. இதில் கண் அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் சில வழிமுறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mosquito Bites Remedies: கொசுக்கடி அரிப்பை ஆற்றும் சூப்பரான வீட்டுவைத்தியங்கள் இதோ!

கண் அழுத்தத்தைத் தடுக்க உதவும் எளிய வழிகள்

சரியான ஒளி கண்டறிதல்

சரியான ஒளியின் கீழ் உட்கார்ந்து ஒளியைப் பெறுவதன் மூலம், கண் சோர்வைத் தடுக்கலாம். மிகவும் மங்கலான அல்லது மிகவும் பிரகாசமாக இருக்கும் ஒளியானது, கண்களில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, படிப்பது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், வெளிச்சம் தங்களுக்கு பின்னால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போல, டிவி பார்க்கும் போது, விளக்குகளை டிம் செய்வது கண் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

20-20-20 விதி பின்பற்றுவது

எந்த இடைவெளியும் இல்லாமல், நீண்ட நேரம் ஒரே செயலில் ஈடுபடும் போது கண் சோர்வு ஏற்படுகிறது. இந்த நிலையில் 20-20-20 விதிகளைப் பின்பற்றுவது அவசியமாகும். அதாவது 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் கவனத்தை செலுத்தி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது 20 வினாடிகளுக்கு அதைப் பார்க்க வேண்டும். இது நீண்ட நேரம் பார்ப்பதிலிருந்து நம்மைத் தள்ளி வைப்பதுடன், கண் சோர்வைத் தடுக்கிறது.

காற்றின் தரத்தை மேம்படுத்துதல்

ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தி, வீசும் காற்றைக் குறைக்கலாம். இது தெர்மோஸ்டாட்டைச் சரிசெய்து, புகையைத் தவிர்ப்பதன் மூலம் கண்கள் வறண்டு போவதைத் தடுக்கிறது. எனவே இதற்கு சுற்றுச்சூழலைச் சுற்றி சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Stones Remedies: சிறுநீரகக் கற்களை விரைவில் அகற்ற இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!

அடிக்கடி கண் சிமிட்டுதல்

தொடர்ந்து வேலையில் மூழ்கி இருக்கும் போதோ அல்லது பிடித்தமான தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதோ பலரும் கண் சிமிட்டுவதை மறந்து விடுகின்றனர். இது கண்களை வறட்சியடையச் செய்து, கண் சோர்வுக்கு வழிவகுக்கிறது. எனவே கண் சிமிட்டுவதை அடிக்கடி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது கண்களை ஈரமாக்கவும், புத்துணர்ச்சியூட்டும் கண்ணீரை உருவாக்குவதாகவும் அமைகிறது.

சரியான கண்ணாடி அணிவது

தொடர்ச்சியாக, பொருத்தமில்லாத கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்திருப்பின், அது அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமையலாம். இந்நிலையில், எந்த வித அழுத்தத்தையும் குறைக்க நாம் பயன்படுத்தும் கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள், எவ்வாறு அதை குறைக்கின்றன என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவு உண்பது

கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்களைப் பாதுகாக்கும் உணவுகள் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் படி, இலை கீரைகள், மீன், சிட்ரஸ் பழங்கள், கொட்டைகள், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலே போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்தவையாகும். இதை உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இவ்வாறு கண்களின் ஆரோக்கியத்தை ஆரோக்கியமான வழிமுறைகளின் மூலம் பாதுகாக்கலாம். இவை கண் சோர்வைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Burning Eyes: காலை எழுந்த உடன் கண்ணெரிச்சல் தொல்லை செய்கிறதா.? தப்பிக்க சூப்பர் டிப்ஸ் இதோ..

Image Source: Freepik

Read Next

Constipation Remedies: மலச்சிக்கல்லை விரைவில் குணமாக்கும் சூப்பர் வீட்டு வைத்தியங்கள்!

Disclaimer