$
How To Naturally Get Rid Of Kidney Stones Permanently: உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் அமைகிறது. இது உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளையும், தேவையற்ற திரவங்களையும் வெளியேற்றி, உடலிலிருந்து நச்சுத்தன்மையை நீக்க சிறுநீரகம் உதவுகிறது. சிறுநீரகம் உடலிலிருந்து நச்சுக்களை சிறுநீர்பாதை வழியாக, சிறுநீர்ப்பையில் வெளியேற்றுகிறது. இந்த முக்கிய உறுப்பில் ஏற்படும் சில பிரச்சனைகள் உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் சிறுநீரகத்தில் காணப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்சனை இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது.
சிறுநீரகக் கற்களுக்கான காரணங்கள்
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று காரணமாக, சிறுநீரக் கற்கள் உருவாக முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக, உடலில் போதுமான அளவு நீர் உட்கொள்ளாத காரணமும், சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. எனவே உடலை போதுமான அளவு நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியமாகிறது. உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகத் தொற்றால் ஏற்படும் சிறுநீரகக் கற்களை அகற்ற முடியும். மேலும் சிறுநீரில் பல்வேறு கரைந்த தாதுக்கள் மற்றும் உப்புகள் உள்ளது. ஆனால், இந்த தாதுக்கள் மற்றும் உப்புகளின் உள்ளடக்கம் அதிகமாக இருக்கும்போது, அவையே சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mosquito Bites Remedies: கொசுக்கடி அரிப்பை ஆற்றும் சூப்பரான வீட்டுவைத்தியங்கள் இதோ!
இதில் சில கற்கள் சிறுநீரகத்தில் தங்கி எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. எனினும், மற்ற கற்கள் சிறுநீர்க்குழாய் வழியாக அதாவது சிறுநீரகத்திற்கும் சிறுநீர்ப்பைக்கும் இடையே உள்ள குழாயின் மூலம், சிறுநீர்ப்பையை அடைந்து, சிறுநீர் வழியாக உடலை விட்டு வெளியேறுகிறது. ஆனால், இந்த சிறுநீரகக் கற்கள் சிக்கிக் கொள்வதால் அது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கிறது. மேலும் இது இடுப்பு, கீழ் முதுகு அல்லது வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது. இதன் மற்ற அறிகுறிகளாக, குமட்டல், வாந்தி, சிறுநீரில் இரத்தம், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை, துர்நாற்றம் வீசும் சிறுநீர் போன்றவை ஏற்படுகிறது.

சிறுநீரகக் கற்களை அகற்ற உதவும் உணவுகள்
சிறுநீரகக் கற்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் இதை எளிதில் குணப்படுத்த முடியும். அதன் படி, சில உணவுகள் சிறுநீரகக் கற்களை நீக்க உதவுகிறது. இதில் சிறுநீரகக் கற்களை அகற்ற உதவும் உணவுகளைக் காணலாம்.
எலுமிச்சைச் சாறு
இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கால்சியம் மற்றும் ஆக்சலேட்டின் ஒருங்கிணைந்த படிகங்களை சிறுநீரின் மூலம் கரைக்க உதவுகிறது. மேலும் இது சிறுநீரகக் கல் அளவு வளரமால் தடுக்கிறது. எலுமிச்சைச் சாறு ஒரு திரவமாக இருப்பதால், இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதுடன், படிகங்கள் மோசமடையாமல் கற்களை அகற்றை உதவுகிறது.
எப்படி உட்கொள்வது?
புதிய எலுமிச்சை ஒன்றை பிழிந்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு நீர் சேர்த்து, ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையைச் சேர்க்கலாம். அதே சமயம், சர்க்கரையை அதிகம் சேர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரகக் கற்களைத் தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 கப் எலுமிச்சை சாறு குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Inflammation Reducing Tips: உடலில் வீக்கம் குறைய தினமும் நீங்க செய்ய வேண்டியவை
துளசி தேநீர்
சிறுநீரகக் கற்களுக்கு துளசி ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது. இது அசிட்டிக் அமிலத்தின் வளமான மூலமாக இருப்பதால், இவை சிறுநீரக கற்களை உடைக்க உதவுகிறது. மேலும், இது அதிக யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சிறுநீரகக் கற்களை அகற்றுகிறது.
எப்படி உட்கொள்வது?
தினமும் காலையில் ஒரு கிளாஸ் துளசி தேநீரை உட்கொள்ளலாம். இதற்கு ஒரு கப் அளவிலான கொதிக்கும் நீரில் சில துளசி இலைகளைச் சேர்த்துக் குடிக்க வேண்டும். இவை சிறுநீரகக் கற்களுக்கு இயற்கையான சிகிச்சையாக அமைகிறது. இது தவிர, துளசி இலைகளை காலையில் பல் துலக்கிய பிறகு மென்று சாப்பிடலாம். இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

பார்லி நீர்
சிறுநீரக கற்களுக்கு மிகவும் பொதுவான இயற்கை மருந்துகளில் ஒன்றாக பார்லி தண்ணீர் அமைகிறது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் சிறுநீரில் உள்ள கால்சியம் வெளியேற்றத்தை குறைக்கிறது. மேலும் இவை உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியேற்றி சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் சிறுநீரில் அதிக காரத்தன்மை இருந்தால், அது சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். இந்நிலையில் உடலில் pH சமநிலையை பராமரிக்க பார்லி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது சிறுநீரக கற்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
எப்படி உட்கொள்வது?
இது சிறுநீரக கற்களுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இதற்கு ஒரு கிளாஸ் கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் பார்லி விதைகளை சேர்க்க வேண்டும். இவ்வாறு குறைந்த தீயில் வைத்து தண்ணீர் பாதி அளவு குறையும் வரை தொடர்ந்து கொதிக்க வைக்க வேண்டும். இந்தக் கலவையை வடிகட்டி குளிர்விக்க வேண்டும். பிறகு இதை உட்கொள்வது சிறுநீரகக் கற்களை எதிர்த்துப் போராடவும், சிறுநீரகக் கற்களின் அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Foods for Migraine: தீராதா தலைவலியால் அவதியா? இவற்றை உட்கொண்டால் உடனே நிவாரணம் கிடைக்கும்!
மாதுளைச் சாறு
சிறுநீரகக் கற்களை நீக்க மாதுளைச் சாறு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும். இவை சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மாதுளைச் சாற்றில் உள்ள பாலிஃபீனால்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் தாக்குதலில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது சிறுநீரின் அமில அளவைக் குறைத்து, கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
எப்படி உட்கொள்வது?
மாதுளை ஒன்றை எடுத்து, அதை உரித்து, அதன் விதைகளை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அரைத்து பெற்ற கலவையை வடிகட்டி தெளிவான திரவத்தை எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றை தினமும் குடித்து வருவதன் மூலம் சிறுநீரகக் கற்களை நீக்கலாம். எனவே நல்ல பயனைப் பெற தினமும் புதிதாக தயாரிக்கப்பட்ட மாதுளை சாற்றை அருந்தலாம். இந்த சாற்றுக்குப் பதிலாக மாதுளையையும் உட்கொள்ளலாம்.

இந்த வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் சிறுநீரகக் கற்களை விரைவில் அகற்றலாம். அதே போல, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Kidney Stone Remedies: சிறுநீரக கற்களை அகற்றும் எளிய வீட்டு வைத்தியம் இங்கே..
Image Source: Freepik