How to get rid of eye strain naturally: நம் உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கண்கள் அமைகிறது. கண்கள் நாம் அனுபவிக்கக் கூடிய மிக அழகான காட்சிகளை நமக்குத் தருகிறது. ஆனால், கண்களைப் பராமரிப்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதாவது கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை கொடுப்பது, கண் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவை அடங்கும்.
அதிலும் போதுமான அளவு அல்லது நன்கு கவனித்துக் கொள்ளாதது சில நேரங்களில் கண்களைச் சோர்வடையச் செய்கிறது. நம் அன்றாட வாழ்வில் அதிகரித்து வரும் திரை நேரம் காரணமாக ஏற்படும் கண் சோர்வு ஒரு பொதுவான கவலையாக அமைகிறது. எனினும், ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், கண்களைப் புத்துணர்ச்சியுடனும், கூர்மையாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: அதிக ஸ்கிரீன் டைமால் கண்களுக்கு பாதிப்பா? எப்படி தவிர்ப்பது?
கண் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்
திரைநேரத்திற்கு இடைவெளி கொடுப்பது
நாம் பெரும்பாலும் தொடர்ந்து கணினி, மொபைல் போன்கள் என அடுத்தடுத்து திரைகளின் மீதே அதீத கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு தொடர்ந்து திரைகளின் மீது அதிக கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டே வருவது கண்களுக்குச் சோர்வை உண்டாக்கி, கண் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, வழக்கமான திரை இடைவெளிகள் மேற்கொள்வது அவசியமாகும். வெவ்வேறு தூரங்களுக்கு மாற்றுவதன் மூலம் எழுந்து நிற்கவும், நீட்டவும் மற்றும் கவனத்தை மாற்றவும் வேண்டும். இது நீண்ட நேரம் திரையை உற்றுப் பார்க்கும்போது ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க வழிவகுக்கிறது.
சாதனங்களைத் தூரமாக வைத்திருப்பது
நம் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய மற்றும் மூலக் காரணியாக அமைவது சாதனங்களைப் பயன்படுத்துவதாகும். எனவே, திரைக்கும் கண்களுக்கும் இடையிலான தூரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாக அமைகிறது. பொதுவாக, சாதாரண நபர்கள் ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 18 முறை கண் சிமிட்டுவர். ஆனால், கணினியில் வேலை செய்யும் போது இந்த கண் சிமிட்டும் விகிதம் 2 முதல் 3 மடங்கு வரை குறைகிறது. இதில் திரையின் மேல் விளிம்பில் கண் மட்டத்தில் கையின் நீளத்தில் திரையைப் பராமரிப்பதன் மூலம், கவனம் செலுத்தும் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தைத் தணிக்கலாம். இது கண் அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது.
கண்களை சிமிட்டுதல்
திரைகளின் முன் அமர்ந்திருப்பவர்கள், கண் சிமிட்டுவதையே மறந்து விடுகின்றனர். எனவே இவர்கள் மீண்டும், மீண்டும் கண் சிமிட்டுவதை உறுதிசெய்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு நிமிடத்தில் நிமிடத்தில் நாம் எத்தனை முறை சிமிட்டுகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். திரைகளை உற்று நோக்கும் சமயத்தில் இந்த கண் சிமிட்டும் விகிதம் குறைவாக இருக்கும் போது கடுமையானதாக இருக்கும். எனவே அடிக்கடி கண் சிமிட்டுவதை வழக்கத்தில் வைத்துக் கொள்வது கண்களில் ஏற்படும் வறட்சியைப் போக்க உதவுகிறது. மேலும், கண்களில் தொடர்ந்து வறட்சி அல்லது எரிச்சல் ஏற்பட்டால், கூடுதல் நிவாரணத்திற்கு மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Eyes rubbing causes: கண்களை அடிக்கடி தேய்ப்பவர்களா நீங்க? முதலில் இத கவனிங்க
கண் சொட்டுகளைப் பயன்படுத்துவது
பொதுவாக குளிர்கால மாதங்களில் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக, கண்களில் வறட்சி உண்டாகும். கூடுதலாக, இந்த சமயத்தில் நாள் முழுவதும் திரையின் முன் அமர்ந்திருப்பதும் கண்களில் வறட்சியை ஏற்படுத்தலாம். இந்த நேரத்தில் மருத்துவரின் பரிந்துரையில் சில வகையான கண்ணீர் சப்ளிமெண்ட்ஸ் அல்லது கண் சொட்டுகளைப் பயன்படுத்துவது கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
வெளியில் நேரத்தை செலவிடுதல்
இன்று குழந்தைகள் பலரும் மொபைல் போன், டிவி போன்ற திரைகளின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்நிலையிலிருந்து விடுபட பகலில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வெளியில் செலவிடுவதை வழக்கத்தில் கொள்ள வேண்டும். இந்த டிஜிட்டல் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீடியோ விளையாட்டுகள் போன்ற திரை நேர செலவிடுதலைத் தவிர்த்து வெளியில் சூரிய ஒளியின் வெளிப்பாட்டுடன் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
நன்றாக தூங்குவது
இன்றைய காலத்தில் பகல், இரவு என பாராமல் எப்போதும் திரை முன்னே அமர்ந்துள்ளனர். ஆனால், உடல் நன்றாக ஓய்வெடுக்க ஒரு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானதாகும். எனவே மொபைல் அல்லது பிற திரைகளைப் பார்ப்பது, தாமதமாக தூங்குவது போன்றவை கண் சோர்வை ஏற்படுத்துவதுடன், தூக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே கண்களின் ஆரோக்கியத்திற்கு இரவில் நன்றாக தூங்குவது அவசியம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Dry eyes remedies: வறண்ட கண்களிலிருந்து நிவாரணம் பெற உதவும் இயற்கை வைத்தியங்கள்
Image Source: Freepik