How to get clear eye vision naturally: இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதிலும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, நீண்ட நேரம் திரைப்பயன்பாடு, ஜங்க் ஃபுட் உட்கொள்வது உள்ளிட்டவை கண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் இன்று பலரும் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கும் மேலாக லேப்டாப், மொபைல், கணினி உள்ளிட்ட மின்னணுத் திரையைப் பார்ப்பதற்கு நேரம் செலவிடுகின்றனர்.
ஆனால் திரையைப் பயன்படுத்துபவர்களில் 90%-க்கும் அதிகமானோர் கணினி நோய்க்குறி அல்லது CVS என்றழைக்கப்படும் கண் அழுத்தத்தை அனுபவிக்கலாம். இதன் காரணமாக மங்கலான பார்வை போன்ற பார்வை குறைபாடு, ஒளிக்கு உணர்திறன், தலைவலி, கண்கள் எரியும் உணர்வு உள்ளிட்டவை ஏற்படலாம். எனினும், கண் அழுத்தத்தைக் குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. கண் அழுத்தத்தைக் குறைக்கவும், கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் சில ஆரோக்கியமான வழிமுறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தூங்கும் போது கண் மாஸ்க் அணிபவரா நீங்கள்? அப்ப நீங்க இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்!
கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வழிகள்
20-20-20 விதியைப் பயன்படுத்துவது
நீண்ட காலத்திற்கு கணினி அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்துவதால், கண் அழுத்தம் ஏற்படலாம். இதனைக் கட்டுப்படுத்த வழக்கமான இடைவெளிகளை எடுப்பது எளிமையானதாக இருக்கும். இதற்கு 20-20-20 விதியைப் பின்பற்றலாம். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், கணினியிலிருந்து விலகி, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்குப் பார்க்க வேண்டும். இது கண்களை மீண்டும் ஒருமுகப்படுத்த வாய்ப்பளிக்கிறது. அதன் படி, இரண்டு மணிநேரம் தொடர்ந்து கணினியைப் பயன்படுத்திய பிறகு கண்களுக்கு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
கண்களைச் சரிபார்ப்பது
சில சமயங்களில் சரி செய்யப்படாத பார்வை பிரச்சனைகள் காரணமாக கண் சோர்வு, தசைக்கூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தொலைநோக்கு பார்வை, கண்களை மையப்படுத்துவதில் அல்லது ஒருங்கிணைப்பதில் சிக்கல்கள், வயதானவுடன் தொடர்புடைய கண் மாற்றங்கள் போன்றவை ஏற்படுகிறது. சரியாக கணினியைப் பார்க்க முடியாத போது அதைத் தெளிவாகக் காண திரையை நோக்கி சாய்வது, தலையைச் சாய்ப்பது போன்றவை செய்ய வேண்டியது வரலாம். கண் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகில் உள்ள வலியைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க
அடிக்கடி கண் சிமிட்டுவது
பொதுவாக சாதாரண அன்றாடச் செயல்பாட்டின் போது மக்கள் நிமிடத்திற்கு 18 முறை கண் சிமிட்டுகின்றனர். ஆனால், கணினி பயனர்கள் 25% அடிக்கடி சிமிட்டுகின்றனர். இது உலர் கண் நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த ஆபத்தை குறைக்க அடிக்கடி கண் சிமிட்டலாம். கண் சொட்டுகள் மூலம் புதுப்பிக்கலாம். கண்களை சரியாக உயவூட்டுவதற்கான மற்றொரு வழியாக தூங்கும் போது படுக்கையறையில் ஈரப்பதத்தை 40% ஆக வைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு காற்றில் ஈரப்பதத்தை அதிகரிப்பது கண் வறட்சி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
திரை நேரத்தை வரம்பிடுதல்
டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து நீண்ட நேரம் கணினி, மொபைல் பயன்பாட்டில் இருப்பது அவர்களின் கண்களைப் பாதிக்கலாம். இதில் அடிக்கடி நாம் எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும் வினாடி வரை திரை நேரத்தைக் கோருவதாகத் தோன்றலாம். இந்நிலையில் சில எல்லைகளை அமைக்க முயற்சிக்கலாம். திரையில் இருந்து விலகிச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் லேப்டாப் அல்லது போனைப் பார்ப்பது கண்களுக்குக் கேடு விளைவிக்கலாம். எனவே தினமும் தூங்குவதற்கு முன்பாக, மொபைலை 30 நிமிடங்கள் ஒதுக்கி வைப்பதன் மூலம் தொடங்கலாம். அதன் பிறகு, நேரத்தை ஒரு மணி நேரம் வரை நீட்டிக்கலாம்.
இந்த வழிமுறைகளின் உதவியுடன் கண்களின் ஆரோக்கியத்தை நீண்ட நேர திரை பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Care Tips: அதிக திரை நேரத்தினால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik