Eye Care Tips: அதிக திரை நேரத்தினால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Eye Care Tips: அதிக திரை நேரத்தினால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

கண் அழுத்தத்தைத் தவிர்க்கும் முறைகள்

அதிக திரை நேரத்தினால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும் சில வழிகளைக் காணலாம்.

திரை அமைப்புகளைச் சரி செய்வது

திரையின் பிரகாசம் மற்றும் அதன் அமைப்புகளை வசதியான நிலைகளுக்கு ஏற்ப சரி செய்ய வேண்டும். ஏனெனில் திரை கண்ணை கூச வைப்பதால், கண்களை மங்கலான நிலைக்கு மாற்றலாம். கண்களைப் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும் போது கண்கள் அழுத்தம் ஏற்படலாம். இந்த சூழலில் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு திரை அமைப்புகளைச் சரி செய்வது கண்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Overthinking Control Tips: இரவு தூக்கத்தைக் கெடுக்கும் அதீத சிந்தனை. இதை எப்படி தவிர்ப்பது?

அடிக்கடி சிமிட்டுதல்

திரைகளை உற்றுப் பார்க்கும் போது, பலரும் குறைவாக கண்களை சிமிட்டுகின்றனர். சில சமயங்களில் நீண்ட நேரம் கண்களைச் சிமிட்டாமல் திரைகளைப் பார்த்துக் கொண்டிருப்பர். இது கண்களை வறட்சியடையச் செய்வதுடன், அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது. கண்களை ஈரமாக வைத்திருக்க அடிக்கடி சிமிட்ட முயற்சி செய்யலாம். எனினும் கண்கள் வறட்சி அல்லது எரிச்சலை உணர்ந்தால் அடிக்கடி கண்களை சிமிட்டலாம்.

20-20-20 விதியைப் பின்பற்றுவது

கண் அழுத்தத்தைத் தடுக்க, 20-20-20 விதியைப் பின்பற்றி வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 வினாடி இடைவெளி எடுத்து பிறகு 20 அடி தொலைவில் உள்ள ஒன்றைப் பார்க்க வேண்டும். இது கண்களை ஓய்வெடுக்க வைப்பதுடன், கவனம் செலுத்தவும் உதவுகிறது. நீண்ட நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதிலிருந்து சிரமத்தைக் குறைக்கிறது.

சரியான விளக்குகளைப் பயன்படுத்துவது

திரையை எந்த ஒளி மூலத்தையும் நேரடியாக எதிர்கொள்ளாதவாறு வைக்க வேண்டும். இது கண்களை கூசும் மற்றும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தலாம். கூடுதலாக அறையில் வெளிச்சம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிகப்படியான அல்லது மிகக் குறைந்த வெளிச்சம் கண்களுக்கு சிரமத்தை உண்டாக்கலாம். எனவே அசௌகரியத்தைக் குறைக்க சீரான விளக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health:இந்த 5 பழக்கங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்!

வழக்கமான இடைவெளிகள் எடுப்பது

20-20-20 விதியைத் தவிர, திரை நேரத்திலிருந்து வழக்கமான இடைவெளிகளை எடுக்க வேண்டும். இந்த நேரங்களில் புத்தகம் படிப்பது, யோகா அல்லது நடைபயிற்சி செய்வது போன்ற திரைகளை உள்ளடக்காத செயல்களில் ஈடுபடலாம். எனவே கண்களுக்குத் திரையிலிருந்து ஓய்வு கொடுப்பது கண் சோர்வைக் குறைக்கவும், அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

நீல ஒளி வெளிப்பாட்டைக் குறைப்பது

திரைகள் மூலம் வெளியிடப்படும் நீல ஒளியானது கண்களை சிரமப்படுத்தலாம். மேலும் தூக்க முறைகளை சீர்குலைக்கலாம். கண்களைப் பாதுகாக்க நீல ஒளி வடிகட்டிகள் அல்லது நீல ஒளியைத் தடுக்கும் லென்ஸ்களைக் கொண்ட கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும். இவை கண் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இவை அனைத்தும் அதிக திரை நேரத்தினால் ஏற்படும் கண் அழுத்தம் மற்றும் சோர்வைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: எந்த நிலையிலும் மனம் தளராமல் மனதை வலிமையாக வைக்க இத ஃபாலோப் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க

Disclaimer