Monsoon Eye Care: மழைக்கால தொற்றிலிருந்து கண்களை பாதுகாக்க இத கட்டாயம் செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Monsoon Eye Care: மழைக்கால தொற்றிலிருந்து கண்களை பாதுகாக்க இத கட்டாயம் செய்யுங்க!

அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் கண் தொடர்பான தொற்று நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. கான்ஜுன்க்டிவிடிஸ், கண் பார்வை, உலர் கண்கள் மற்றும் கார்னியல் அல்சர் போன்றவை மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய கண் தொற்று நோய்களாகும்.

கான்ஜுன்க்டிவிடிஸ் (இளஞ்சிவப்பு கண்) (Conjunctivitis):

கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது கண் இமைகளின் உட்புறம் மற்றும் கண்ணின் வெளிப்புற மேற்பரப்பை உள்ளடக்கிய வெளிப்படையான சவ்வில் ஏற்படக்கூடிய தொற்றாகும். மழையின் போது காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் தொற்று நோய் பரவுகிறது. கண் சிவத்தல், வீக்கம், கண்களில் இருந்து மஞ்சள் ஒட்டும் வெளியேற்றம், கண்களில் அரிப்பு, வலியுடன் தொடர்புடையது ஆகியவை கான்ஜுன்க்டிவிடிஸின் பொதுவான அறிகுறிகளாகும்.

கார்னியல் அல்சர்:

கார்னியல் அல்சர் என்பது கார்னியாவின் மேற்பரப்பில் ஏற்படும் காயமாகும்.இது பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதம் வைரஸ்கள் வளர்ந்து பெருகுவதற்கு சாதகமான நிலையை உருவாக்குவதால் வேகமாக பரவுகிறது. கண்களில் இருந்து நீர் வெளியேறுவது, தொடர் வலி, சிவந்த கண்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

கண்களில் வறட்சி:

மழைக்காலங்களில் தூசி மற்றும் மாசுக்கள் அதிகம் ஏற்படும். இவை கண்களில் படுவதால் ஏற்படும் பாதிப்பு வறட்சியை ஏற்படுத்துகிறது. எரிதல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வுகள், கனம், கண்களில் இருந்து நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

மழைக்காலத்தில் கண்களைப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்:

மழைக்காலத்தில் உங்கள் கண்களை நன்கு கவனித்துக்கொள்வது, கண்களை பாதிக்கப்படக்கூடிய பல தொற்றுநோய்களிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க உதவும். எனவே, மழைக்காலத்தில் கண்களை பராமரிப்பதற்கான சில குறிப்புகள் இதோ…

  1. கண்களை அடிக்கடி தொடாதீர்கள்:

நமது கைகள் பல வகையான கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே அதனைக் கொண்டு கண்களை அடிக்கடி தொடுவதோ அல்லது தேய்ப்பதோ தொற்று நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே, நம் கண்களுக்கு கிருமிகள் பரவாமல் இருக்க, அடிக்கடி கைகளை கழுவுவதும், சுகாதாரத்தை பேணுவதும் இன்றியமையாதது.

  1. கண்களை மழைநீரில் இருந்து பாதுகாக்கவும்:

மழையில் விளையாடுவது, நடனமாடுவது, நனைவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த செயலாகும். இருப்பினும், மழை நீர் காற்றில் உள்ள பல கிருமிகளையும் மாசுகளையும் உடன் எடுத்து வரக்கூடியது.

இது உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கண் தொற்றுகளை ஏற்படுத்தும். அதனால்வ்தான் கண் தொற்று ஏற்படாமல் இருக்க மழைநீரில் இருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டும்.

  1. கண் கண்ணாடிகளை சுத்தமாக வைத்திருங்கள்:

நீங்கள் கண்களுக்கு கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துபவராக இருந்தால், மழைக்காலத்தில் அவற்றை அதிக சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய ஈரப்பதத்தில் அதிக அளவிலான பூஞ்சை வளரும் வாய்ப்பு உள்ளது. எ

னவே உங்கள் கண்ணாடிகளை சுத்தமான, உலர்ந்த துணியால் அடிக்கடி துடைத்து சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அதேபோல், உங்கள் காண்டாக்ட் லென்ஸ்களையும் திறந்த வெளியில் வைப்பதைத் தவிர்ப்பதோடு, காண்டாக்ட் லென்ஸ் பெட்டியையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

  1. கண்களை காற்று, தூசியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்:

தூசி மற்றும் காற்றிலிருந்து கண்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே, தூசி துகள்கள் உங்கள் கண்களுக்குள் நுழைவதைத் தவிர்க்க பாதுகாப்புக் கண்ணாடிகளை அணியுங்கள்.

  1. கண் ஒப்பனைகளில் கவனம் தேவை:

கண் மேக்கப்பைப் பயன்படுத்தும்போது நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மழை நேரத்தில் வெளியே செல்லும் போது, அது கண்களில் கலப்பதற்கான ஆபத்து அதிகம். நீங்கள் நீர்ப்புகா (Water Proof) கண் ஒப்பனையைப் பயன்படுத்தினால், அதன் காலாவதி தேதியை உறுதி செய்துக் கொள்ள மறக்காதீர்கள்.

ImageSource: Freeepik

Read Next

Dry Eye Problems: கண் வறட்சி பிரச்சனை நீங்க என்ன செய்ய வேண்டும்?

Disclaimer

குறிச்சொற்கள்