How to protect children from fungal infections in the rainy season: மழைக்காலம் கோடைக்கால வெப்பத்திலிருந்து நிவாரணம் தரக்கூடியதாகும். ஆனால், இந்த காலகட்டங்களிலேயே பலரும் பல்வேறு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஏனெனில், இந்த காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக காணப்படும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மழைக்காலத்தில் பெய்யக்கூடிய தண்ணீருடன், வெப்பத் தடிப்புகள், தோலில் அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று போன்றவை ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.
இந்த வகை பிரச்சனையால் பெரியவர்களை விட குழந்தைகள் பூஞ்சை தொற்றுக்கு ஆளாகிறார்கள். உண்மையில், மழை காரணமாக, வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இது பூஞ்சை தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. மழைக்காலத்தில் குழந்தைகளின் மென்மையான சருமம் எளிதில் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியது. மழைக்காலத்தின் போது மழைக்காலங்களில் பூஞ்சை தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தகவல்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Baby Care In Monsoon: மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது? இதோ சில டிப்ஸ்!
மழைக்காலங்களில் பூஞ்சை தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள்
புது தில்லியில் உள்ள எலாண்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தோல் மருத்துவர் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர் சாந்தனி ஜெயின் குப்தா எம்.பி.பி.எஸ்., எம்.டி அவர்களின் கூற்றுப்படி,”பூஞ்சை தொற்று என்பது பூஞ்சையால் ஏற்படும் ஒரு வகை தொற்று ஆகும். இந்த பூஞ்சைகள் ஈரப்பதமான இடங்களில் விரைவாக வளரலாம். மேலும் மழைக்காலத்தில், காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, வியர்வை காரணமாக கால்விரல்கள், அக்குள் மற்றும் டயப்பர் பகுதியில் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. மழைக்காலத்தில் நீண்ட நேரம் வியர்வையில் விளையாடுவது, ஈரமான ஆடைகளை அணிவது பூஞ்சை தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளில் ஏற்படும் பொதுவான பூஞ்சை தொற்று வகைகள்
ரிங்வோர்ம்
இந்த வகை தொற்றுக்களால் சருமத்தில் வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும். இந்த தடிப்புகள் தீவிர அரிப்பு மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
கேண்டிடா தொற்று
இது குழந்தைகளின் டயபர் பகுதி, கழுத்து மற்றும் அக்குள்களில் ஏற்படுகிறது.
தடகள பாதம்
கால் விரல்களுக்கு இடையில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு காணப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் தடகள பாதப் பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது.
குழந்தைகளில் பூஞ்சை தொற்று அறிகுறிகள்
- வறண்ட சருமம் அல்லது தோலில் விரிசல்
- தோலில் சிறிய சொறி
- பூஞ்சை தொற்று ஏற்பட்ட இடத்தில் எரியும் உணர்வு
- தோலில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வட்டங்கள்
- நகங்களின் நிறமாற்றம் அல்லது தடித்தல்
குழந்தைகளை பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகள்
சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது
மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு, சருமத்தை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருக்க முயற்சி செய்யலாம். குறிப்பாக, குழந்தைகள் வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு, குழந்தைகளின் கழுத்து, அக்குள், டயபர் பகுதி போன்ற பகுதிகளில் ஒரு துண்டு கொண்டு துடைக்க வேண்டும். டாக்டர் சாந்தினியின் கூற்றுப்படி, சருமத்தை முறையாக உலர்த்துவது பூஞ்சை தொற்று அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Skin Allergies In Newborn: பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் நோய்கள்..! தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
வெதுவெதுப்பான நீரில் குளிப்பது
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு, தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும் என்று தோல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். வெதுவெதுப்பான நீரில் கிருமி நாசினி திரவம் அல்லது வேப்பிலையைச் சேர்த்து குளிப்பதன் மூலம் பூஞ்சை தொற்றுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
ஈரமான இடங்களிலிருந்து விலகி இருப்பது
குழந்தைகளை ஈரமான காலணிகள், சாக்ஸ் அல்லது டயப்பர்களில் நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. காலணிகள் நனைந்தால், அதை நன்கு உலர்த்திய பின்னரே மீண்டும் அணிய வேண்டும். ஏனெனில், ஈரமான இடங்களில் பூஞ்சை தொற்று வளரும் அபாயம் அதிகம் இருக்கலாம்.
லேசான பருத்தி ஆடைகளை அணிவது
மழைக்காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை உறிஞ்சுவதற்கு ஏற்ப, குழந்தைகளுக்கு தளர்வான பருத்தி ஆடைகளை உடுத்தலாம். ஏனெனில், இத்தகைய ஆடைகள் குழந்தைகளின் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கிறது. மேலும் வியர்வை விரைவாக வறண்டு போகலாம்.
நகங்களை குட்டையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது
பூஞ்சை தொற்றுகள் நகங்கள் வழியாகப் பரவக்கூடும். எனவே குழந்தைகளின் நகங்களை தவறாமல் வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே தான் மழைக்காலத்தில், நிபுணர்கள் வாரத்திற்கு 1 முதல் 2 முறை நகங்களை வெட்ட பரிந்துரைக்கின்றனர்.
பூஞ்சை தொற்றைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்
- மஞ்சள் கிருமிநாசினியாகவும் மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. பூஞ்சை தொற்று மீது மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது.
- கற்றாழையைப் பயன்படுத்துவது குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
- வேம்பு பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். எனவே, குழந்தைகளை வேம்பு நீரில் குளிப்பாட்டுவது பூஞ்சை தொற்றுகளிலிருந்து நிவாரணம் தருகிறது.
- கற்றாழையின் குளிர்ச்சி மிக்க பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவது பொதுவானதானது. அதே சமயம், அசௌகரியத்தைத் தரக்கூடியதாகும். எனவே பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இதை முற்றிலும் தடுக்கலாம். மேலும் குழந்தைகளின் சருமத்தை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருப்பது, அவர்களுக்கு முறையாக உடை அணிவது, சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது போன்றவை பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பதற்கான மிக முக்கியமான படிகள் ஆகும். குழந்தைகளின் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே பூஞ்சை தொற்றுக்கான எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்கக்கூடாது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் உங்க குழந்தைக்குத் தரும் உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொடுப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Image Source: Freepik