Doctor Verified

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்

  • SHARE
  • FOLLOW
மழைக்காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்


Tips To Protect Children From Monsoon Diseases: மழைக்காலம் தொடங்கியதும், நோய்களுக்கான சாதகமான சூழலும் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் தீவிரமாக நோய்களைக் கண்காணிப்பது அவசியம் ஆகும். சிறு அலட்சியமும் பெரிய பிரச்சனையை உண்டாக்கலாம். ஏனெனில், குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக உள்ளதால், இது அவர்களை எளிதில் பாதிக்கிறது. இந்த பருவத்தில் குழந்தைகளுக்கு சரியான உணவை வழங்குவதன் மூலமும், சில ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

இந்த காலகட்டத்தில், குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல், வயிறு வலி, சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தொற்று நோய்களால் ஏற்படும் இந்த நோய்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. இந்த நோய்த்தொற்றுக்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் கூடிய குறிப்புகள் குறித்து சாரதா கிளினிக்கின் மருத்துவர் டாக்டர் கே.பி.சர்தானா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: மாறிவரும் காலநிலையில் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?

மழைக்கால தொற்றிலிருந்து குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முறை

குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பது

பருவமழை காலத்தில் முடிந்தவரை குழந்தைகளை வெளியில் கொண்டு செல்லாதிருத்தல் வேண்டும். ஏனெனில், வெளியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி தெருக்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பல்வேறு நோய்க்கிருமிகள், குழந்தைகளுக்குத் தாக்கும் அபாயம் ஏற்படும். இதனைத் தவிர்க்க குழந்தைகளை வீட்டிலேயே விளையாட வைக்கலாம்.

சுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகள்

அழுக்கு நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களில் தொற்றுக்கள் காணப்படலாம். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, மழைக்காலங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து வந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்துக் கழுவ வேண்டும். மேலும், இந்த கலவையில் காய்கறிகள், பழங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின் எடுத்துப் பயன்படுத்தலாம்.

சரியான காலணிகளைத் தேர்ந்தெடுப்பது

மழைக்காலத்தில் குழந்தைகள் மிகவும் இறுக்கமாக இல்லாத காலணிகளை அணிய வேண்டும். அதே சமயம், காலணிகள் முற்றிலும் மூடப்படாததாக இருக்க வேண்டும். ஏனெனில், முற்றிலும் மூடிய காலணிகளால் கால் தொற்று பிரச்சனைகளைச் சந்திக்கலாம். வெளியில் இருந்து வந்த பிறகு, குழந்தையின் கால்களை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதில் தொற்றுநோயைத் தவிர்க்க பூஞ்சை காளான் தூளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Baby Care: குளிர்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!

முழு ஆடைகளை அணிவித்தல்

மழைக்கால நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க, குழந்தைகளுக்கு முழுக்கை ஆடைகளை அணிவிக்கலாம். ஏனெனில், வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரில் உருவாகும் கொசுக்கள் குழந்தைகளுக்கு நோய்வாய்ப்பை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் கொசு விரட்டிக்கான கிரீம் தடவுதல், கொசு வலை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை மட்டுமே அணியச் செய்யலாம்.

ஆரோக்கியமான உணவுமுறை

மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஆரோக்கியமான முறைகளைக் கையாள வேண்டும். சுத்தமான காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகள், சூப் வகைகள், வெதுவெதுப்பான பால் மற்றும் நட்ஸ் போன்றவற்றைக் கொடுக்கலாம். அதே சமயம், இந்த குளிர்ச்சியான காலநிலையில் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள் தருவதைத் தவிர்க்கவும். இவை தொற்றுக்களையும், வயிறு தொடர்பான உபாதைகளையும் ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cough Syrup For Babies: உங்க குழந்தைக்கு எப்போ இருந்து இருமல் மருந்து கொடுக்கணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Children Playing: குழந்தைகள் தினமும் 1 மணிநேரம் விளையாடினால் கிடைக்கும் பலன்கள்!

Disclaimer