$
Cough Syrup For Babies: பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் சிறிய குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாகக் காணப்படும். இதனால், குழந்தைகள் சளி, இருமல் போன்றவற்றால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். இது தவிர, பருவநிலை மாற்றம் அல்லது அதிகரித்த மாசுபாடால், குழந்தைகளுக்கு இருமல் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் போது இருமல் மருந்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் பலர் யோசித்திருப்பர்.
ஆனால், சிறு குழந்தைகளுக்கு இருமல் மருந்து (Cough Syrup) கொடுப்பதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இது பற்றித் தெரிந்து கொள்ள சி.கே.பிர்லா மருத்துவமையின் (குருகிராம்) நியோனாட்டாலஜி மற்றும் பீடியாட்ரிக்ஸ் முன்னணி ஆலோசகர் மருத்துவர் சௌரப் கன்னா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Carrot For Children: குழந்தைகளுக்கு கேரட் கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?.
குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பது சரியா?
நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு இருமல் ஏற்படுவதாக இருப்பின் இருமல் மருந்து கொடுப்பது சரியானது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மார்பு மற்றும் தொண்டையில் உள்ள சளியை அகற்றலாம். இவை விரைவில் நிவாரணம் அளிப்பதாக அமைகிறது. எனவே, இருமலுக்காக குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குழந்தைகளுக்கு எப்போது இருமல் மருந்து கொடுக்கலாம்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு இருமல் மருந்து கொடுக்கலாம். அதே சமயம், எந்த இருமல் மருந்து கொடுக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். குழந்தைகளுக்கு இருமல் ஆனது ஒவ்வாமை காரணமாகவோ அல்லது தொண்டை தொற்று காரணமாகவோ ஏற்படுகிறதா என்பதைப் பொறுத்து அமையும். இவற்றை மனதில் வைத்து குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Black Raisins For Child: குழந்தைகளின் நினைவாற்றலை டபுள் மடங்காக்கும் கருப்பு உலர் திராட்சை.! எப்போ கொடுக்கணும் தெரியுமா?
மனதில் கொள்ள வேண்டியவை
மருத்துவரின் கூற்றுப்படி, குழந்தைக்கு ஒரு கப் சிரப்பைக் கொடுப்பதாக இருப்பின், அந்த சிரப்பில் ஒரே ஒரு கூறு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் பல கூறுகள் கொண்ட சிரப்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். அதே சமயம், மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே குழந்தைக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான பக்க விளைவுகள்
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து இருமல் மருந்தை அதிகம் உட்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, குழந்தைகள் அதிகமாக தூங்குவதில் சிக்கல் உண்டாகலாம். இது இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள், வயிற்று வலி, அதிக வியர்வை மற்றும் இதயத்துடிப்பு பிரச்சனையும் ஏற்படுத்தலாம்.

இந்த கூற்றுக்களின் அடிப்படையில் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே இருமல் மருந்து கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Breakfast For Babies: உங்க குழந்தை ஹெல்த்தியா இருக்க காலை உணவாக இதெல்லாம் கொடுங்க
Image Source: Freepik