Symptoms Of Heart Attack In Child: இன்று பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான பழக்க வழக்கங்களே ஆகும். இதில் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், இது சிறு குழந்தைகளையும் என்பது ஆச்சரியமான ஒன்றாக இருந்தாலும் அதுவும் உண்மையே.
சிறு குழந்தைகளும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு இறக்கும் அபாயம் அதிகரிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாரடைப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் பற்றி டெல்லி சவுல் ஹார்ட் சென்டரின் இயக்குநர் மற்றும் இருதய நோய் நிபுணருமான டாக்டர் பிமல் சாஜ்ஜர் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Breakfast For Babies: உங்க குழந்தை ஹெல்த்தியா இருக்க காலை உணவாக இதெல்லாம் கொடுங்க
குழந்தைகளில் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்
மருத்துவர் பிமல் சாஜ்ஜார் அவர்களின் கூற்றுப்படி, “குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த உடனேயே இதயம் தொடர்பான நோய்கள் உண்டாகும். இது மரபு காரணமாக ஏற்படலாம். சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான நோய் இருப்பது கண்டறியப்படுவதன் மூலம் அவர்களைக் காப்பாற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.
மார்பு அசௌகரியம்
பெரும்பாலும் ஒரு வயதுடையான குழந்தைக்கு மாரடைப்பு ஏற்படுமாயில், அவர்கள் மார்பில் அசௌகரியத்தை அனுபவிப்பதைக் குறிக்கிறது. இது குழந்தைகளிடமும் காணப்படுகிறது. மருத்துவரின் கூற்றுப்படி, “குழந்தைக்கு வயிற்றின் மேல் பகுதி அல்லது மார்பைச் சுற்றி வலி ஏற்படுவது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். குழந்தைக்கு அசௌகரியம், மார்பு வலி அல்லது உடலில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
வியர்த்தல்
குளிர்காலத்திலும் குழந்தைக்குத் தொடர்ந்து வியர்த்தல் அல்லது அவரது தோல் மஞ்சள் நிறமாக மாறினால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவர் சாஜ்ஜர் அவர்கள் பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளின் தோல் நிறம் மற்றும் வியர்வையில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின், மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
மன அமைதியின்மை
குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த செயலில் ஆர்வமில்லாமல் இருப்பது, எரிச்சல், அமைதியின்மை போன்றவை குழந்தையின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களாகும். இது மாரடைப்பின் அறிகுறிகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Carrot For Children: குழந்தைகளுக்கு கேரட் கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?.
சுவாசக் கோளாறு
குழந்தைக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் அல்லது அதிக மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டால், அது மாரடைப்பு இருப்பதற்கான அறிகுறியைக் குறிக்கிறது.
சோர்வடைவது
குழந்தைக்குக் குறைவான உடல் செயல்பாடு அல்லது அசாதாரண சோர்வு ஏற்பட்டால், அது இதயம் தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம். இது பெரும்பாலும் குழந்தையின் இதயம் சரியாக வேலை செய்யாத போது இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு குழந்தை சோர்வடையலாம். பல சமயங்களில் குழந்தைகள் சிறு சிறு வேலைக்குப் பிறகு மூச்சுத் திணறலைச் சந்திக்கலாம். எனவே உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள் திடீரென விளையாடுவது அல்லது குதிப்பது நிறுத்தினால் அல்லது விளையாடிய பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் பெற்றோர்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
குடும்ப வரலாறு
பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இதயம் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பின், குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் உடைய குடும்ப வரலாற்றைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
குழந்தைகளை மாரடைப்பிலிருந்து பாதுகாப்பது எப்படி
இதயம் தொடர்பான பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு சில ஆரோக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என மருத்துவர் கூறியுள்ளார். இதில் மாரடைப்பு பிரச்சனையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.
- குழந்தையின் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.
- குழந்தை மருத்துவரிடம் தவறாமல் பரிசோதித்து, வழக்கமான உடல்நலப் பிரச்சனைகளைக் கையாள வேண்டும். இதன் மூலம் குழந்தைக்கு இதய பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.
- வழக்கமான உடற்பயிற்சியுடன் காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை வழங்குதல்
இந்த நடவடிக்கைகளைக் கையாள்வதன் மூலம் குழந்தைகளை மாரடைப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Milk With Banana Benefits: குழந்தைகளுக்கு பாலுடன் வாழைப்பழம் சேர்த்து கொடுப்பதில் இத்தனை நன்மைகளா?
Image Source: Freepik