$
Carrot Benefits For Child: குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக சாதாரண நேரத்தை விட, குளிர்காலத்தில் அதிக கவனிப்பு தேவை. ஏனெனில், இந்த குளிர்ச்சியான காலநிலையில் குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாகி சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் மருந்துகளை எடுக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இது பலவீனம் மற்றும் இரத்த சோகைக்கு வழிவகுக்கலாம்.
கேரட்டின் ஊட்டச்சத்துக்கள்
குழந்தைகளின் இந்த பிரச்சனைக்கு உதவும் வகையில் குளிர்காலத்தில் கேரட்டை உட்கொள்ளலாம். கேரட்டில் பொட்டாசியம், சோடியம், இரும்பு, புரதம், ஃபோலேட், நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உடல் வலிமையை அதிகரிப்பதுடன், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உதவும். இதில், குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கேரட் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Child Excessive Blinking: உங்க குழந்தை அதிகமா கண் சிமிட்டுதா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.
குழந்தைகளுக்குக் கேரட் தரும் நன்மைகள்
குளிர்காலத்தில் குழந்தைகளுக்குக் கேரட்டைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களைத் தருகிறது.
கண் ஆரோக்கியத்திற்கு
இன்றைய நவீன காலகட்டத்தில், குழந்தைகள் பலரும் செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிகம் பார்க்கின்றனர். இதனால், குழந்தையின் கண்கள் சிறுவயதிலேயே பலவீனமாகலாம். கேரட்டில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை நிறைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து உட்கொள்வது கண் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

செரிமான மேம்பாட்டிற்கு
கேரட்டில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை குழந்தைகளின் மலச்சிக்கல்லை எளிதில் போக்க உதவுகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறைகளால், குழந்தைகள் பலரும் பல நேரங்களில் மலச்சிக்கல்லால் பாதிப்படைகின்றனர். இந்த சூழ்நிலையில் கேரட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும், கேரட்டை எடுத்துக் கொள்வது மற்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
நினைவாற்றல் மேம்பாட்டிற்கு
குழந்தைகளின் உணவில் கேரட்டைச் சேர்ப்பதன் மூலம் அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தலாம். இதன் நுகர்வு குழந்தையின் கற்றல் திறனை அதிகரிக்கிறது. இதனை உட்கொள்வதன் மூலம் மூளை வீக்கம் நீங்கி, அது தொடர்பான பிரச்சனைகள் நீங்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Moringa Powder Benefits: குழந்தைகளுக்கு முருங்கைப் பொடி கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா.?
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
குளிர்காலத்தில் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படும் நோய்களாக சளி மற்றும் இருமல் அமைகிறது. இந்த சூழ்நிலையில், அவர்களின் உணவில் கேரட் சேர்ப்பது, பல்வேறு பருவகால நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், கேரட்டில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்துக்கள் நோய்த்தொற்றுக்களை எளிதில் நீக்குவதுடன், குழந்தைகள் நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க உதவுகிறது.

பற்களின் ஆரோக்கியத்திற்கு
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கேரட் தருவது, ஈறுகள் மற்றும் பற்களின் பிளேக்கை சுத்தம் செய்ய உதவுகிறது. அதிலும் குழந்தைகள் பெரும்பாலானோர் அவர்களது பற்களில் குழிவுகள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் கேரட் உட்கொள்வது, துவாரங்களின் பிரச்சனையைத் தடுப்பதுடன் வாய் துர்நாற்றத்தையும் நீக்க உதவுகிறது. மேலும் கேரட்டில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடு பற்களின் ஆரோக்கியத்திற்க்ம், சுத்தமாகவும் இருக்க உதவுகிறது.
கேரட்டை உணவில் சேர்ப்பதற்கான வழிகள்
கேரட்டை குழந்தைகளுக்கு சாறாக தயாரித்து அதை சீலா மற்றும் ரொட்டியில் கலந்து கொடுக்கலாம்.
கேரட் உடலுக்கு நன்மை பயக்கும். எனினும், குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின் மருத்துவரின் ஆலோசனையின் உதவியுடனே இதை உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Pomegranate For Children: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மாதுளை தரப்போறீங்களா? அப்ப இத பாருங்க.
Image Source: Freepik