Expert

Pomegranate For Children: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மாதுளை தரப்போறீங்களா? அப்ப இத பாருங்க.

  • SHARE
  • FOLLOW
Pomegranate For Children: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மாதுளை தரப்போறீங்களா? அப்ப இத பாருங்க.


குறிப்பாக குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மாதுளை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், குளிர்காலத்தில் மாதுளை கொடுக்கலாமா என்ற கேள்வி அனைத்து பெற்றோர்களும் எழும். குளிர்காலத்தில் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு மாதுளைக் கொடுக்கலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Excessive Blinking: உங்க குழந்தை அதிகமா கண் சிமிட்டுதா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மாதுளை தருவதால் கிடைக்கும் நன்மைகள்

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மாதுளை எடுத்துக் கொள்வது குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

டயட் என் க்யூர் என்ற உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி அவர்களின் கூற்றுப்படி, “பெரும்பாலானோர் குளிர்காலத்தில் அதிக உணவை எடுத்துக் கொள்வர். அதிலும் குறிப்பாக பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவர். ஆனால் இது வயிற்று வலி, செரிமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க மாதுளைகளைக் கொடுக்கலாம். மாதுளை இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

காய்ச்சலில் இருந்து மீட்பு

“மாறும் பருவத்தில் பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சல், சளியால் பாதிக்கப்படுகின்றனர். மாதுளையில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை காய்ச்சலில் இருந்து மீள உதவுகின்றன. காய்ச்சல் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு மாதுளை சாறு கொடுக்கலாம். ஆனால் சர்க்கரை அளவை சீராக இல்லாதவர்களுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது” என திவ்யா காந்தி கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: Child Tooth Decay: உங்க குழந்தைக்கு பற்சொத்தை வராமல் தடுக்க இதெல்லாம் செய்யுங்க.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

“மாதுளையில் பல வகையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் பி சத்துக்கள் உள்ளது. இந்த வைட்டமின் குழந்தையின் மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மாதுளையில் உள்ள ஃபோலேட், உடலில் புதிய செல்களை உருவாக்குகிறது. குழந்தைக்கு மாதுளை கொடுப்பது, அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய் ஏற்படாமல் தடுக்கிறது” என திவ்யா காந்தி கூறியுள்ளார்.

வாய் ஆரோக்கியத்திற்கு

மாதுளையில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், ஆன்டி வைரல் பண்புகள் நிறைந்துள்ளன. இவை வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகீறது. அதிலும், குழந்தைகள் இனிப்பு மற்றும் சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால், பற்களை சரியாகக் கவனிப்பதில்லை. இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி பல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் குழந்தைக்கு மாதுளையை குறைந்த அளவில் சாப்பிடக் கொடுப்பதன் மூலம் வாய்வழி ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மாதுளையைக் கொடுப்பதன் மூலம் மேலே கூறப்பட்ட நன்மைகளைப் பெறலாம். எனினும் குழந்தைகளுக்கு மாதுளை கொடுப்பதற்கு முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட். குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

Image Source: Freepik

Read Next

Moringa Powder Benefits: குழந்தைகளுக்கு முருங்கைப் பொடி கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா.?

Disclaimer