Sapota Benefits For Babies: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உணவுமுறைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். குழந்தைகளின் ஆரோக்கியமாக இருக்க பருவ கால பழங்களைக் கொடுப்பதை சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக பழவகைகளில் தர்பூசணி, மாம்பழம், முலாம்பழம், சப்போட்டா மற்றும் லிச்சி போன்ற இன்னும் சில பழங்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.
இவை ஊட்டச்சத்துக்கள் மிக்கது என்பதால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் குழந்தைகளுக்கு சப்போட்டா பழம் தருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் குழந்தைகளுக்கு எந்தெந்த உடல் நலப் பிரச்சனைகள் சரியாகும் என்பது குறித்து இதில் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Nail Polish Side Effects: உங்க குழந்தைக்கு நெயில் பாலிஷ் போடுறீங்களா.? இது தெரியாம போடாதீங்க.
குழந்தைகளுக்கு சப்போட்டா கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு சப்போட்டா கொடுக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி பெற்றோர்களின் பலரின் மனதிலும் எழும். குழந்தை 6 மாதங்களுக்கு மேல் இருப்பின், சப்போட்டா கொடுக்கலாம். அதிலும் சப்போட்டாவில் பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளதால் சிறு குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.
குழந்தைக்கு சப்போட்டா கொடுக்க நினைப்பவர்கள், முதலில் அதன் தோல் மற்றும் விதைகளை அகற்ற வேண்டும். அதன் பின் அதை நைசாக மசித்து, பின் குழந்தைகளுக்கு உணவளிக்கலாம். இது அவர்களுக்குத் திடமாக இல்லாததால், இதை அவர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு சப்போட்டா கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தைகளுக்கு சப்போட்டா தருவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
சப்போட்டாவில் நல்ல அளவிலான வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும், உடலில் நோய்த்தொற்றுக்கள் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு ஆற்றலைத் தர
சப்போட்டா பழத்தில் கால்சியம், தாமிரம், மக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவை அதிகளவில் உள்ளது. இதில் இயற்கை சர்க்கரையும் நிறைந்துள்ளது. இவை குழந்தைகளுக்குத் தேவையான உடனடி ஆற்றலைத் தரவும், குழந்தைகள் வலிமையுடன் இருக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sunlight Benefits: புதிதாக பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியம் தெரியுமா?
எளிதில் செரிமானம் அடைய
சப்போட்டா பழத்தை குழந்தைகளுக்கு மசித்து கொடுப்பது எளிதில் செரிமானம் அடைய வழிவகுக்கிறது. இதன் சுவை இனிமையானது என்பதால் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர். எனவே குழந்தைக்கு காலை உணவாக சப்போட்டா பழத்தைக் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை நீங்க
சிறு குழந்தைகள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையைச் சந்திப்பர். ஏனெனில் மலச்சிக்கல் காரணமாக, குழந்தைகள் வயிற்று வலி மற்றும் மலம் கழிப்பதில் சிரமம் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு சப்போட்டா கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்லில் இருந்து விடுபடலாம். சப்போட்டாவில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இவை குடல் இயக்கத்தை எளிதாக்கி நிவாரணத்தை அளிக்கிறது.
இருமல் மற்றும் சளியில் இருந்து பாதுகாக்க
குழந்தைகளுக்கு பொதுவாக நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அவர்கள் விரைவில் நோய்வாய்ப்படுவார்கள். இதனால், இருமல் மற்றும் சளியால் அடிக்கடி அவதிப்படுவர். இந்த சூழ்நிலையில் சப்போட்டாவை குழந்தைகளுக்குக் கொடுப்பது அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு சப்போட்டாவில் அதிகளவு வைட்டமின் சி இருப்பதே காரணமாகும்.
குழந்தைகளுக்கு சப்போட்டாவை மில்க் ஷேக், ஸ்மூத்தி, ஐஸ்கிரீம் அல்லது கஸ்டர்ட் போன்ற வடிவங்களில் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைக்கு சப்போட்டாவின் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதன் இயற்கையான இனிப்பு சுவையால் குழந்தைகளும் ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுவர். எனினும், குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருப்பின் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே சப்போட்டாவைக் கொடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Chamomile Tea Benefits: குழந்தைக்கு தீராத வயிற்று வலியா? கெமோமில் டீயை இப்படி கொடுங்க.
Image Source: Freepik