$
Almond Milk Benefits of Babies: குழந்தைக்கு ஆரம்பத்தில் தாய்ப்பால் கொடுப்பது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. நாளடைவில் படிப்படியாக குழந்தை வளரும் போது, அவர்களுக்கு பசு, எரிமை போன்றவற்றின் பால் கொடுக்கப்படுகிறது. இதில் சிலர் குழந்தைகளுக்கு பாதாம் கலந்த பாலைத் தருவர். குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதன் மூலம், அவர்கள் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் தெரியுமா?.
பாதாம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பாதாம் பால் குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. குழந்தைகளுக்கு பாதாம் பால் தருவது, அவர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாக அமையும். எனினும், பாதாம் பால் குழந்தைகளுக்குச் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கலாம். எனவே, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பாதாம் பால் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இதில், குழந்தைகளுக்குப் பாதாம் பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் உணவியல் நிபுணர் டாக்டர் சுகீதா முத்ரேஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாதாம் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள்
குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதற்கு பாதாமில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களின் கலவையே காரணமாகும். பாதாமில் மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் பாதாம் சுமார் 570 கலோரிகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் 19 கிரம் புரதம், 12 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகிறது. மேலும், பாதாம் பாலில் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இன்னும் பிற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகிறது.

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits Of Badam Milk For Babies)
பாதாம் பாலை குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
மூளை வளர்ச்சி
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பாதாம் பால் உதவுகிறது. இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு பாதாம் பால் அடிக்கடி கொடுக்கப்படுகிறது. இதில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் எல்-கார்னைடைன் போன்றவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Baby Neck Rash Prevention: மழைக்காலத்தில் குழந்தையின் கழுத்தில் ஏற்படும் சொறியிலிருந்து பாதுகாக்க இத செய்யுங்க
எலும்புகளை வலுவாக்க
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பாதாம் பால் உதவுகிறது. பாதாம் பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தையின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு நன்மை பயக்கிறது.
நீரிழிவு நோய் வராமல் தடுக்க
சர்க்கரையின் நோயின் முதன்மை அறிகுறிகளை இன்று பெரியவர்களிடம் மட்டுமல்லாமல், குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது. இதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம். இதில் உள்ள குறைந்த அளவிலான கிளைசெமிக்ஸ் இன்டெக்ஸ், நீரிழிவு நோய்க்கு சிறந்த நன்மைகளைத் தருகிறது. அதே சமயம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாதாம் பாலில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வாமை பிரச்சனை
பல குழந்தைகள், பால் பொருள்களை எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வாமை பிரச்சனையை சந்திப்பர். இந்த சூழ்நிலையில் பாதாம் பால் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையைத் தரும். குழந்தையின் சிறந்த வளர்ச்சிக்கு பால் முக்கியமானது என்பதால், பாதாம் பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைக்கு இந்த பிரச்சனை இல்லாமல் இருக்க, பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க
குழந்தைகளுக்கு பாதாம் பாலை எப்படி கொடுக்கலாம்
- குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்க விரும்புபவர்கள், குழந்தை பிறந்த 1 வருடம் கழித்தே கொடுக்க வேண்டும்.
- குழந்தைக்கு பாதாம் பாலை காலை உணவாக சேர்க்கலாம்.
- கஞ்சி, ஸ்மூத்தி போன்றவற்றிலும் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
- ஆனால் குழந்தை பாதாம் பாலை செரிமானம் நேரம் எடுத்துக் கொண்டால் அல்லது குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டாலோ, அதைக் குடிக்க விடாதீர்கள்.
பாதாம் பால் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால், குழந்தைக்குக் குறைந்த அளவில் மட்டுமே பாதாம் பால் வழங்குவது நல்லது. எனினும் பாதாம் பாலைக் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும், குழந்தைகளுக்கு சரியான அளவு பாதாம் பாலைத் தீர்மானிக்க மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா. அப்ப இப்படி கொடுங்க.
Image Source: Freepik