உங்க குழந்தைக்கு தினமும் ஊறவைத்த பாதாம் பருப்பு கொடுப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

Soaked almonds benefits for kids: குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளைக் கொடுப்பது அவசியமாகும். அவ்வாறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஊறவைத்த பாதாம் பருப்பைக் கொடுப்பது என்ன ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உங்க குழந்தைக்கு தினமும் ஊறவைத்த பாதாம் பருப்பு கொடுப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

Soaked almonds benefits for children: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் பல்வேறு வகையான நட்ஸ் வகைகளை நாம் பார்த்திருப்போம். முந்திரி, பாதாம், திராட்சை, வால்நட்ஸ் உள்ளிட்ட ஏராளமான நட்ஸ் வகைகள் உள்ளன. இந்த வரிசையில் பாதாம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது நம்பமுடியாத அளவிற்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக, இதை குழந்தைகளின் உணவில் சேர்ப்பது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. பாதாமை அப்படியே கொடுப்பதற்குப் பதில், தண்ணீரில் ஊறவைத்த பாதாமை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

ஊறவைத்த பாதாமை எடுத்துக் கொள்வது டானின்கள் மற்றும் பைடிக் அமிலத்தை நீக்கி, அவற்றை ஜீரணிக்க எளிதாக்குகிறது. மேலும், இது ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச அனுமதிக்கிறது. ஊறவைத்த பாதாமில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது செரிமானம், நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது. இதில் குழந்தைகளுக்கு தினமும் ஊறவைத்த பாதாம் பருப்பைக் கொடுப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.

குழந்தைகளுக்கு ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை மேலாண்மைக்கு

ஊறவைத்த பாதாம் பருப்புகளை உட்கொள்வது தசை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தை வழங்குகிறது. இது குழந்தைகளுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும், இது ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்கான ஏக்கத்தைக் குறைத்து சீரான உடல் எடையை ஆதரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaking Nuts: நட்ஸ்யை தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லதா? நன்மைகள் இங்கே!

இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க

பாதாமில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மேலும், இது ஆற்றல் வீழ்ச்சியைத் தடுக்கிறது. இது குழந்தைகளை நாள் முழுவதும் அதிக கவனம் செலுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, உடல் பருமன் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இது பெரிதும் நன்மை பயக்கும்.

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஊறவைத்த பாதாம் பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இது எளிதில் செரிமானம் அடையக் கூடியதாகும். இது குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இவை செரிமானத்தை ஆதரிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் வழிவகுக்கிறது. இது மென்மையான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இவை அனைத்தும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமாகும்.

இதய ஆரோக்கியத்திற்கு

பாதாமில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் நல்ல கொழுப்பின் அளவைப் பராமரிக்கவும், இதயம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது. சிறுவயது முதலே இதய ஆரோக்கியமான பழக்கங்களை சீக்கிரமாகத் தொடங்குவது நீண்ட காலத்திற்கு இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

நீடித்த ஆற்றலை வழங்குவதற்கு

ஊறவைத்த பாதாமில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. இது குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், குழந்தைகளை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது குழந்தைகளுக்கு பள்ளி அல்லது விளையாட்டு நேரத்திற்கு முன் ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: வால்நட்ஸ் Vs பாதாம்; மூளையை சும்மா கத்தி மாதிரி ஷார்ப் ஆக்க எது சிறந்தது?

எலும்பு வளர்ச்சிக்கு

ஊறவைத்த பாதாம் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். இவை வலுவான பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். இதன் தினசரி நுகர்வு எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை உறுதி செய்யவும் உதவுகிறது.

கண் ஆரோக்கியத்திற்கு

ஊறவைத்த பாதாம் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். குழந்தைகளின் கண்களுக்கு வயது தொடர்பான பார்வை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, இன்றைய காலத்தில் மொபைல் போன், லேப்டாப் போன்றவற்றின் பயன்பாட்டிலிருந்து கூர்மையான பார்வை மற்றும் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

சருமம், முடி ஆரோக்கியத்திற்கு

வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை ஊறவைத்த பாதாமில் நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், இது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், வறட்சியிலிருந்து விடுபடவும் வைத்திருக்கிறது. அதே சமயம் வலுவான, பளப்பான கூந்தலைப் பெறவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: மறந்தும் இவற்றை பாதாமுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது... உயிருக்கே ஆபத்து!

Image Source: Freepik

Read Next

வெறும் 30 நாளில் உங்க தொப்பை கரைந்து அழகான தோற்றம் வேண்டும்? அப்போ தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்க!

Disclaimer