Benefits Of Eating Soaked Almonds Everyday: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை உணவுகள், பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நட்ஸ் வகைகளான பாதாம் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்த தேர்வாக அமைகிறது. ஆனால் பாதாமை அப்படியே சாப்பிடுவது நன்மையா அல்லது ஊறவைத்து சாப்பிடுவது நன்மையா என்ற கேள்வி அனைவருக்கும் எழும் ஒன்றாகும்.
ஏன் பாதாம் பருப்பு?
பருப்பு வகைகளில் பொதுவாக புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கும், மாவுச்சத்து குறைவாக உண்பவர்களுக்கும் இந்த வகை ஊட்டச்சத்துக்கள் மிகவும் தேவைப்படுகிறது.
பாதாம் பருப்பு ஆனது சந்தையில் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுவதால், இது அடிக்கடி அனைத்து தரப்பினரும் உணவாக எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். பாதாம் பருப்பை உட்கொள்ள முடியாதவர்கள், தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்ட உணவுகள் மூலம் இந்த வகை ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Soaked Dry Fruits: ஹெல்த்தியா இருக்க ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுங்க
பாதாம் பருப்பை சாப்பிடும் முறை
பாதாம் பருப்பை பலரும் ஊறவைத்து சாப்பிட விரும்புவர். இதற்கு முந்தைய நாள் இரவில் தண்ணீரில் பாதாமை ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து வைத்து விட்டு ஊறிய பாதாமை உட்கொள்வர். இவ்வாறு ஊறவைத்து தண்ணீரை வடிகட்டிய பின்னர் சாப்பிடும் போது பாதாம் பருப்பில் இருக்கும் “பைட்டிக் அமிலம்” என்ற வேதிப்பொருள் இல்லாமல் போகலாம்.
பைடிக் ஆசிட் ஏன் இருக்கக் கூடாது?
பாதாம் பருப்பில் பைட்டிக் ஆசிட் நிறைந்திருக்கும். இது பாதாம் பருப்பில் உள்ள நல்ல சத்துக்களை உடல் கிரகிக்க விடாமல் தடுக்கும் வேதி பொருளாக செயல்படுகிறது. பல உணவுகளில் நியூட்டிரியன்ஸ் இருப்பது போலவே ஆன்டி நியூட்டிரியன்ஸ்களும் இருப்பது இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.
பாதாம் பருப்பு குறித்த ஆய்வுகள்
யூரோப்பியன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரீஷன் அமைப்பானது பாதாம் பருப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது.
நான்கு வழிகளில் பாதாம் பருப்பு மக்களிடையே ஆய்வுக்காக பிரிக்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அதன் படி, முழு பாதாம் பருப்பை அப்படியே கொடுத்தும், முழு பாதாமை ஊறவைத்தும், ஊற வைக்காமல் மற்றும் பாதமை துண்டு துண்டாக வெட்டி ஊற வைத்தும் மக்களுக்குக் கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அதன் சுவை மற்றும் சாப்பிட்ட பிறகு ஏற்படுத்தும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பைட்டிக் ஆசிட் நிலை போன்றவற்றை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுவையைப் பொறுத்த வரை ஊற வைக்காமல் பாதாம் பருப்பை சாப்பிடுவதையே பலரும் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக, பாதாமை துண்டு துண்டாக வெட்டி ஊற வைத்து சாப்பிடுவது சிலர் சுவையாக இருப்பதை உணர்கின்றனர். ஆனால், முழுமையாக ஊற வைத்து அப்படியே சாப்பிடுவதில் சுவையானது பலருக்கும் பிடிக்கவில்லை.
இந்த பதிவும் உதவலாம்: Soaked Walnuts Benefits: தினமும் ஒரு கைப்பிடி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?
ஊறவைத்த பாதாம் பருப்பு சாப்பிடுவதன் நன்மைகள்
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க
ஊறவைத்த பாதாம் பருப்புகளை உட்கொள்வது இரத்த சிவப்பணுக்களில் வைட்டமின் ஈ அளவை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அபாயத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் ஆக்ஸிஜனேற்றங்கள் உருவாகின்றன. இது செல்கள் கொழுப்பை அடைப்பதைத் தடுக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரையை சீராக்குவதற்கு
ஊறவைத்த பாதாம் பருப்பில் நிறைந்துள்ள மக்னீசியம் சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதாம் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இதன் அமிலங்கள் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கவும், உடலில் சர்க்கரையின் அளவு சரியாக வைக்கவும் உதவுகிறது.
உடல் எடை குறைய
பாதாமில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் இது குறைந்த கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இவை பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துவதுடன், தினசரி கலோரிகளின் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
நச்சுக்களை வெளியேற்ற
பாதாமில் உள்ள அதிகளவிலான வைட்டமின் ஈ, ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, செல்களை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுவதால், புற்றுநோய், இதய நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்றவை உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனினும், அதிகளவு வைட்டமின் ஈ உட்கொள்ளல் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே இதை மிதமானதாக உட்கொள்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
கண் ஆரோக்கியத்திற்கு
கேரட்டைப் போலவே, ஊறவைத்த பாதாமும் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது கண்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. எனினும், இதை அதிகளவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு ஊறவைத்த பாதாம் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Soaked Almonds Benefits : தினமும் ஊற வைத்த பத்தாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Image Source: Freepik