Which Soaked Dry Fruits Is Good For Health: நவீன காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த பலரும் மறந்து விடுகின்றனர். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமே அன்றாட செயல்களில் ஈடுபாட்டுடன் இருக்க முடியும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தமட்டில் உணவு முறைகளைக் கையாள்வது மிக முக்கியமாகும். உடல் ஆரோக்கியத்திற்கு உலர் பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உலர் பழங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த, சுவையான விருப்பமாகும். இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. மேலும் இது எந்த நேரத்திலும் சாப்பிடக்கூடிய திண்பண்ட வகையாகும். உலர் பழங்களை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது சிறந்த வழியாகும். அதிலும் பாதாம், முந்திரி அல்லது வால்நட் போன்ற உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிடுவது சிறந்ததாகும். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.
இந்த பதிவும் உதவலாம்: பால் குடித்த பின் இந்த உணவுகளை தவிர்க்கவும்.!
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஊறவைத்த உலர் பழங்கள்
அக்ரூட் பருப்புகள்
வால்நட்ஸில் தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியமான உடலை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. இவை நோய்களைத் தடுக்க உதவுகிறது.
பாதாம்
பாதாமை எடுத்துக் கொள்வது குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் என்ற கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், நல்ல உயர் அடர்த்தி கொழுப்புப் புரதத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் அதிகளவிலான பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது.
பிஸ்தா
இது சத்தான நட்ஸ் வகையைச் சேர்ந்ததாகும். மேலும், இதில் சுவையை அதிகரிப்பதற்காக உணவுகளில் சேர்க்கப்படுகிறது. புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகிறது. இவை இரண்டுமே பிஸ்தாவில் நிறைந்துள்ளது. மேலும் இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Summer Special: கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான ராகி கூழ் செய்வது எப்படி?
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழம் மிகவும் ஆரோக்கியமான உலர் பழங்களில் ஒன்றாகும். இதில் பல்வேறு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளது. மேலும் இதில் பைட்டோ நியூட்ரியன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நாள்பட்ட நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
திராட்சை
இது இயற்கையாகவே இனிப்பு மற்றும் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றை மிதமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இதன் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் பசியினைத் தடுப்பதுடன், உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது இதயத்தின் மீதான இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஊறவைத்து சாப்பிட வேண்டிய உலர் பழங்கள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Maha Shivaratri 2024: சிவனுக்குப் பிடித்த வில்வ இலைகள்! இதன் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik