Foods To Avoid After Drinking Milk: நாம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சமச்சீரான உணவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். இந்த வரிசையில், உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்க பலர் தினமும் ஒரு கிளாஸ் பால் குடித்து வருகின்றனர்.
பாலில் கால்சியம், வைட்டமின் ஏ, பி12, ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் , பால் பல உடல்நல பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்

இருப்பினும், பால் ஒரு ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அதை ஒருபோதும் குறிப்பிட்ட பொருட்களுடன் கலக்கக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு செய்தால் சில உடல்நலப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாலுடன் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பால் - மீன்
பால் குடித்த பிறகு மீன் சாப்பிடக்கூடாது. இது உடல் நலத்திற்கு சிறிதும் நல்லதல்ல. ஏனெனில் பால் குளிர்ச்சி விளைவைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மீன் வெப்பமூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. இவை இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொண்டால், இரசாயன மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு போன்ற செரிமானப் பிரச்னைகளும் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே பால் குடித்த பின் மீன் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
பால் - தர்பூசணி
தர்பூசணி நீங்கள் பாலுடன் சாப்பிடக்கூடாத மற்றொரு உணவு. இந்த கலவையானது சில உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தர்பூசணியில் பொதுவாக 90% நீர்ச்சத்து உள்ளது. மெலும் இதில் டையூரிடிக் குணங்கள் இருக்கிறது. பாலில் மலமிளக்கி குணம் உள்ளது. எனவே பால் குடித்த பின் தர்பூசணி சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் மற்றும் குமட்டல் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பால் குடித்த பிறகு இவற்றை எல்லாம் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது ஏன் தெரியுமா?
பால் - வாழைப்பழம்
பலர் செய்யும் தவறு என்னவென்றால், பால் குடித்துவிட்டு வாழைப்பழம் சாப்பிடுவதுதான். வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் இந்த உணவுக் கலவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் தலைசுற்றல், சோர்வு போன்றவை ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பால் - முள்ளங்கி
இந்த உணவு கலவையும் ஆரோக்கியமற்றது. எனவே நீங்கள் எப்போதும் பால் குடித்த பிறகு முள்ளங்கி சாப்பிடக்கூடாது என்பார்கள். ஏனெனில் முள்ளங்கி இயற்கையில் வெப்பமானது. இது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இவை இரண்டும் சேர்ந்தால் செரிமான செயல்முறைக்கு இடையூறு ஏற்படுகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பால் - புளிப்பு உணவுகள்
பால் குடித்த பிறகு புளிப்பு அல்லது சிட்ரிக் அமில உணவுகளை உண்ணக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக புளிப்பான தயிர், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. பால் பொதுவாக ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். பால் மற்றும் புளிப்புப் பொருட்களை ஒன்றாக எடுத்துக் கொண்டால் வாயு, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.