6 மாத குழந்தைக்கு சர்க்கரை கலந்த பாலை கொடுக்கலாமா? நிபுணர் தரும் விளக்கம்.

  • SHARE
  • FOLLOW
6 மாத குழந்தைக்கு சர்க்கரை கலந்த பாலை கொடுக்கலாமா? நிபுணர் தரும் விளக்கம்.


Disadvantages Of Milk With Sugar For Babies: பொதுவாக, உணவிற்கு இனிப்பு சுவை சேர்க்க சர்க்கரை அதிகம் பயன்படுகிறது. ஆனால், குழந்தைகளுக்குச் சர்க்கரை சேர்க்கலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவில் சுவை சேர்க்க சர்க்கரையை சேர்க்கலாம். ஆனால், இவை சில குழந்தைகளுக்குப் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இவை பெரியவர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகும். இதனால் பல்வேறு நோய்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

எனவே, குழந்தைக்கு கொடுக்கும் பாலில் சர்க்கரையைப் பயன்படுத்துவதைப் பெற்ரோர்கள் தவிர்க்க வேண்டும். இவை பற்சொத்தை, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 6 மாத குழந்தையின் உணவில் இனிப்புக்காக சர்க்கரையைச் சேர்ப்பது கீழே கொடுக்கப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது குறித்து, குர்கால் DLF ஃபேஸ் –ல் பணிபுரியும் குழந்தை நல ஆலோசகர் வாணி வஷீர் அவர்கள் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Sapota Benefits For Babies: இது தெரிஞ்சா இனி உங்க குழந்தைக்கும் சப்போட்டா கொடுப்பீங்க

குழந்தைக்கு சர்க்கரை கலந்த பால் கொடுப்பதால் ஏற்படும் தீமைகள்

சர்க்கரை நோய்

சிறு குழந்தைகளுக்குச் சர்க்கரை கலந்த பால் கொடுப்பது, டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம். இது படிப்படியாக இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, குழந்தை பருவத்தில் அல்லது அவர்கள் வளரும் சமயத்தில் நீரிழிவு நோயை உருவாக்கும். இவை தவிர, குழந்தைகளில் அதிக உடல் செயல்பாடுகளைச் செய்வதில்லை என்பதால், சர்க்கரை எடுத்துக் கொள்வது செரிமானத்தைக் கடினமாக்கி விடும்.

பற்சொத்தை

சர்க்கரை கலந்த பாலைக் குழந்தைகளுக்குத் தருவது பல்வலி, துவாரங்கள் ஏற்படலாம். சிறு குழந்தைகளுக்கு இனிப்பு தருவது பற்களை சேதப்படுத்தும் பாக்டீரியாக்களை வளர்த்து, அவை பற்கள் மற்றும் ஈறுகளை பலவீனப்படுத்தும். இது ஈறுகளில் வலியைத் தரும்.

மிக விரைவானது

சர்க்கரை இரத்தத்தில் மிக வேகமாக உறிஞ்சப்படுவதாகும். எனவே, அதிக சர்க்கரை கொண்ட பாலை குழந்தைகள் உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது அட்ரினல் அளவை அதிகரித்து, குழந்தைகளில் அதிவேகத் தன்மையை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: Sesame Oil Benefits: குழந்தைக்கு எள் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

உடல் பருமன்

சிறு குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த பாலைக் கொடுப்பது, அவர்களுக்கு அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வதாக அமைகிறது. இது உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. குழந்தைகள் சுறுசுறுப்பாக இல்லாவிடில், இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். மேலும், உடல் பருமன் குழந்தைக்கு வேறு சில பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்.

சோம்பல்

அதிக இரத்த சர்க்கரை அளவு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இந்த அதிகப்படியான இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைத் திடீரென குறைத்து, குழந்தைக்கு சோர்வு மற்றும் செயலற்ற தன்மையை ஏற்படுத்தலாம்.

சர்க்கரைக்கு பதிலாக குழந்தைகளுக்குத் தர வேண்டியவை

குழந்தைகளுக்குப் பாலில் சர்க்கரை சேர்ப்பதற்குப் பதில் தேன் அல்லது சர்க்கரை மிட்டாய் பயன்படுத்தலாம். தேனில் இயற்கையான இனிப்பு சுவை உள்ளதால் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் சீரான அளவில் தேனை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. இவை தவிர, குழந்தைகளுக்குப் பெரும்பாலும் இயற்கையான இனிப்பையேத் தர முயற்சிக்கலாம். இவை குழந்தை எளிதில் செரிமானம் அடைய உதவும். மேலும் இது உடலுக்கு நன்மை தரும். இதனுடன், உலர்ந்த பழங்களைப் பாலில் சேர்த்து குழந்தைகளுக்குத் தருவது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Child Stomach Cramps: குழந்தையின் வயிற்றுப்பிடிப்பு சீக்கிரம் சரியாக இதெல்லாம் செய்யுங்க.

Image Source: Freepik

Read Next

Baby Weight Gain Food: குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..!

Disclaimer