$
Newborn Neck Rash During Monsoon: மழைக்காலம் தொடங்கும் போது, பல்வேறு நோய்களும் பரவ ஆரம்பிக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபர்கள் நோய்த்தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான தோல் நோய்த்தொற்றுக்கள் மழைக்காலங்களிலேயே பதிவாகும். இதனால் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மழைக்காலத்தில் குழந்தையின் கழுத்தில் தடிப்புகள் ஏற்படுவது பொதுவான தோல் பிரச்சனையாகும். இந்த தடிப்புகள் காரணமாக, குழந்தைகளின் தோல் சிவந்து போவதுடன், அரிப்பு ஏற்படலாம். எரிச்சல் காரணமாக குழந்தைகள் அழத் தொடங்கும். இந்த தடிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும் போது, தொற்று தீவிரமான வடிவத்தை எடுக்கலாம். குழந்தையை சொறி பிரச்சனையிலிருந்து பாதுகாக்க, சில எளிய உதவிக்குறிப்புகளைக் கையாள வேண்டும். இது குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் அமைந்துள்ள பிராஞ்சல் ஆயுர்வேத கிளினிக்கின் டாக்டர் மணீஷ் சிங் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்
குழந்தையின் கழுத்தில் சொறி வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள்
மழைக்காலத்தில் குழந்தைகளின் கழுத்தில் ஏற்படும் சொறி ஏற்படாமல் தவிர்க்க சில பாதுகாப்புக் குறிப்புகளைக் கையாள வேண்டும்.
குழந்தைகளுக்கு சுத்தமான ஆடைகளைத் தேர்வு செய்தல்
மழைக்காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். இது பல தோல் நோய்களைத் தவிர்க்க உதவும். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், விரைவில் நோய்களால் பாதிக்கப்படலாம். எனவே இந்த காலகட்டத்தில் குழந்தைக்கு பருத்தி துணி ஆடைகளை உடுத்த வேண்டும். மேலும் குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் தூய்மையான ஆடைகளை அணிவதன் மூலம், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று அபாயத்தைக் குறைக்கலாம்.

சருமத்தை சுத்தமாக வைத்திருத்தல்
குழந்தையின் கழுத்தில் தடிப்புகள் ஏற்படுவது தோல் சுத்தமாக இல்லை என்பதைக் குறிக்கிறது. எனவே குழந்தையை தினமும் குளிப்பாட்ட முடியாவிட்டால், சருமத்தை சுத்தமாக வைத்திருக்க பஞ்சு வைத்து வெதுவெதுப்பான நீரில் துடைத்து சுத்தப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Premature Baby Care Tips: குறைமாத குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள்
நோய்த்தொற்றின் அறிகுறிகளை மருத்துவரிடம் பரிசோதிப்பது
குழந்தையின் தோல் மென்மையாக இருப்பதால், அதில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக தோல் நிபுணரை அணுகுவது நல்லது. குழந்தையின் சருமம் சிவப்பாக இருந்தால் அல்லது வலி இருந்தால், முதலில் தோல் நிபுணரை அணுக வேண்டும். பல சமயங்களில் பெற்றோர்கள் நோய்த்தொற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது பெரிய பிரச்சனையை உண்டாக்கலாம். குழந்தைக்கு எந்த வகையான கிரீம் அல்லது மருந்து கொடுப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அரிப்புகள் அல்லது தடிப்புகளை அகற்ற டால்கம் பவுடரின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் டால்கம் பவுடரில் அதிகளவு இரசாயனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளில் சரும ஈரப்பதத்தைத் தடுப்பது
மழைக்காலங்களில் ஏற்படும் அதிக ஈரப்பதம், சருமத்தில் ஒட்டும். இது குழந்தைகளில் தோலில் தெரியும். இதை பஞ்சு ஒன்றின் மூலமாக குழந்தையின் சருமத்தை சுத்தம் செய்யலாம். தோல் மிகவும் ஒட்டும் தன்மையுடன் இருந்தால், பாக்டீரியாக்கள் வளர்ந்து தொற்றுநோய உண்டாக்கலாம். இதன் காரணமாக தோலில் தடிப்புகள் உண்டாகும். எனவே, குழந்தையின் தோலை ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பது நல்லது.

குழந்தையைத் தொடும் முன் கைகளைக் கழுவுதல்
குழந்தையின் கழுத்தில் தடிப்புகள் ஏற்படுவதற்குக் காரணம், அவர்களை அழுக்குக் கைகளால் தொடுவது அல்லது எடுப்பது போன்றவை. எனவே குழந்தையைப் பிடிக்கும் முன் சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஏதாவது ஊட்டினால், அதற்கு முன் கைகளின் சுத்தத்தை கவனிக்கவும். எனவே அழுக்குக் கைகளால் குழந்தையைத் தொடுவதன் மூலம், உங்கள் கைகளில் உள்ள கிருமிகள் குழந்தையைத் தோலுக்கு மாற்றப்படலாம். இது தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
Image Source: Freepik