Sat Sep 12, 2026 | 03:12 AM IST

Lifting Newborn Baby: முதல் மூன்று மாதங்கள் வரை குழந்தையை எப்படி தூக்க வேண்டும்?

Lifting Newborn Baby: வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை பிறந்தால், குழந்தையைப் பராமரிப்பதில் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் ஈடுபாடோடு செயல்படுவார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடும்பங்களில் பலர் வாழ்கிறார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்முறையாக பெற்றோராக மாறுபவர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றி பெரிய புரதில் இருப்பதில்லை என்பதே உண்மை.

தன் காரணமாக, புதிதாகப் பெற்றோராக மாறுபவர்கள் சில தவறுகளைச் செய்கிறார்கள், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புதிதாகப் பிறந்த குழந்தையை சரியாகக் கையாளுவதும் பராமரிப்பதும் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.

பிறந்த குழந்தையை தூக்கும் வழிகள்

குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் குழந்தைகளை பராமரிப்பது என்பது மிக முக்கியம். இதற்கான வழிகளை குழந்தைகள் நல மருத்துவர் ஹெச்.பி.சிங் கூறியது குறித்து இப்போது பார்க்கலாம்.

3 மாதங்கள் வரை குழந்தைகளை எப்படி தூக்குது?

தனி குடும்பங்களில் வாழும் மக்கள் குழந்தைகளை வளர்க்கும் அனுபவம் இல்லாதவர்கள், குறிப்பாக முதல் மூன்று மாதங்களில். பிறந்த குழந்தையின் பல சமிக்ஞைகளை பெற்றோர்கள் தவறாக புரிந்துக் கொள்கின்றனர். குறிப்பாக தவறாக தூக்குவது. இப்படி செய்வதால் குழந்தையின் கழுத்து மற்றும் கைகளில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

மூன்று மாத வயதிற்குள் குழந்தையின் தோள்பட்டை மற்றும் கழுத்து அதன் உடல் எடையைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்காது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தையை தவறாக தூக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தையை தூக்கும் சரியான வழி

குறைந்தது பிறந்த குழந்தைகளை 3 மாத வயது வரை கழுத்து ஆதரவுடன் தூக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார். குழந்தையை உங்கள் மடியில் எடுத்துக்கொண்டு பிறகு உங்கள் மடியில் படுக்க வைக்கலாம்.

குழந்தையின் கழுத்தில் முழுமையான ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் கை குழந்தையின் முதுகு மற்றும் கழுத்தில் சேர்த்து பிடித்தப்படி இருக்க வேண்டும். . குழந்தையின் கழுத்தை ஆதரவின்றி வைக்கக்கூடாது. குறிப்பாக முதல் மூன்று மாதங்களில்.

குழந்தையை தூக்கும் போது, ​​அவரது கழுத்தை சரியான நிலையில் வைக்கவும். குழந்தை கழுத்தை அவரது முழு உடலுடன் நேர்கோட்டில் வைக்கவும். புதிதாகப் பிறந்த குழந்தையை முதல் 3 மாதங்களில் சரியாகக் கையாள வேண்டும் என்பது அவசியம்.

ஏனெனில் இந்த நேரத்தில் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்கும். எனவே இந்த காலக்கட்டத்தில் குழந்தையை சரியான முறையில் கையாள வேண்டியது மிக முக்கியம்.

குழந்தைகள் விஷயத்திலும் கர்ப்ப காலத்திலும் சமரசம் என்பதே வேண்டாம் ஏதேனும் அசௌகரியமோ சந்தேகமோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த முடிவாகும்.

Pic Courtesy: FreePik

Read Next

Baby Nose Massage: குழந்தையின் மூக்கை மசாஜ் செய்த பெற்றோர்.. அதிர்ந்து போன மருத்துவர்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content