AC Sleeping Tips: கொளுத்தும் வெயிலில் பெரியவர்களாலே தாங்க முடியவில்லை. குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என நினைத்து பலர் வீட்டில் ஏசி வாங்கி மாட்டுகிறார்கள். ஒரு வீடு என்பது முழுமையடைய டிவி, லைட், பேன் என்பது எப்படி முக்கியமோ அந்தளவிற்கு முக்கியமாக ஏசியும் மாறி வருகிறது.
சிலர் பிறந்த குழந்தையை ஏசியில் தூங்க வைக்கிறார்கள். சமயத்தில் இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏசி போடுவதற்கு முன் அறையின் வெப்பநிலை மற்றும் ஏசி கூலிங் ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
ACயில் தூங்க சிம்பிள் டிப்ஸ்
உண்மையில், குழந்தைகளின் தோல் சற்று உணர்திறன் கொண்டது, இது சில நேரங்களில் ஏசியின் நேரடி காற்றைத் தாங்குவதில் பயனுள்ளதாக இருக்காது. எனவே, குழந்தையை ஏசியில் தூங்க வைப்பதற்கு முன் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
குழந்தையை AC (Air Conditioner)ல் தூங்க வைக்கலாமா?
குழந்தைகளை ஏசியில் தூங்க வைப்பது முழுமையாக தீங்கு என்று கூறிவிட முடியாது. இந்த நேரத்தில் நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அறையின் வெப்பநிலை மற்றும் வெளிப்புற வெப்பநிலையை மனதில் கொள்ள வேண்டும்.
உங்கள் இருப்பிடத்தின் சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்தது இது. உங்கள் குழந்தையை ஏசியில் தூங்க வைக்கும்பட்சத்தில் ஏசியை 23 முதல் 27 டிகிரி செல்சியஸுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
குழந்தைகளை ஏசியில் தூங்க வைக்கும் போது, குழந்தையின் உடலை சில துணியால் மூடி வைக்கவும். நீங்கள் ஏசியின் நேரடி காற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தையின் முகம் மற்றும் தலையில் காற்று வீசக்கூடாது.
ஏசியில் இருப்பது குழந்தைக்கு ஈரப்பதத்தை ஏற்படுத்தும், எனவே குழந்தையின் உடலில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். அதேபோல் ஏசியை கவனமாக முறையாக தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலத்தில் சர்வீஸ் செய்ய வேண்டும். இப்படி செய்கையில் கூலிங் முறையாக இருக்கும் தூசி, அழுக்கு உள்ளே வராமல் இருக்கும்.
அதிக நேரம் ஏசியில் வாழ்வதால் ஏற்படும் தீமைகள்
ஏசியில் அதிகமாக இருப்பது சில சமயங்களில் நீரிழப்பு மற்றும் வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கும்.
ஏசியில் அதிக கூலிங் வைத்தால் குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமத்தையும் சந்திக்க வைக்கும்.
சில சமயங்களில் ஏசியின் நேரடி காற்று காரணமாக குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படலாம்.
எனவே ஏசியை பயன்படுத்துவது தவறில்லை, ஆனால் முறையாக பயன்படுத்த வேண்டியது அவசியம். குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் சமரசம் என்பதே வேண்டாம், அவர்கள் ஏதேனும் தீவிரத்தை உணர்ந்து தொடர்ச்சியாக அழுகும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik