$
Weight Lifting Benefits: தங்கள் சருமம் பொலிவுடனும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் மிக சொர்ப்பம். தோல் எப்போதும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் பல ஆரோக்கிய வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். முதுமை தடுப்பு, தோல் பளபளப்பு உள்ளிட்ட பல பெயர்களில் விற்கும் க்ரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் பலன் தராது, கூடுதலாக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
வயதானதை மெதுவாக்க, நல்ல உணவு மற்றும் தோல் பராமரிப்பு இரண்டும் அவசியம். கூடுதலாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்வதும் முக்கியம். பளு தூக்குதல் வயதான அறிகுறிகளைக் குறைக்கும் என் உங்களுக்கு தெரியுமா. இதுகுறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.
எடை தூக்குதல் வயதான அறிகுறிகளை குறைக்குமா?
நிபுணற்கள் கூற்றுப்படி, இயற்கையாகவே வயதானதை மெதுவாக்க இது ஒரு சிறந்த வழியாகும். பளு தூக்குதல் போன்ற பயிற்சி செய்வது தோல் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்கிறது. மேலும், சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

பளு தூக்குதல் சருமத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
அதிக எடையை தூக்கும் போது, அது சருமத்தில் புரோட்டியோகிளைகான் உற்பத்தியை அதிகரிக்கிறது. சொல்லப்போனால் இந்த கலவை தோலுக்கான கட்டுமானத் தொகுதிகள் போன்ற வேலை செய்கிறது. இது புதிய தோல் செல்களை உருவாக்குகிறது, இது சருமத்தை வயதானதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
வயதான எதிர்ப்பு தன்மைக்கு என்னென்ன பொருட்கள் தேவை?
உணவில் சிறப்பு கவனம்
வயதானதைத் தடுக்க உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். உங்கள் உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள் மற்றும் உலர்ந்த பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும். கூடுதலாக, இது சருமத்தை நச்சுத் தன்மையற்றதாக்க உதவுகிறது.
தோல் பராமரிப்பில் கவனம் தேவை
தோல் பராமரிப்பை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் இதுவும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். உங்கள் காலை தோல் பராமரிப்பில் சுத்தப்படுத்துதலுடன் சன்ஸ்கிரீனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். மேலும், கண்டிப்பாக இரவு தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றவும். க்ளென்சிங் உடன் நைட் க்ரீம் மட்டும் பயன்படுத்தி தூங்கவும்.
மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்
நீங்கள் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொண்டால், உங்கள் தோலில் வயது அறிகுறிகள் தோன்றக்கூடும். எனவே மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க, நீங்கள் தியானம் அல்லது மன அழுத்த மேலாண்மை நுட்பங்களையும் பின்பற்றலாம்.
உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கவும். எனவே, யோகா அல்லது லேசான உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் வியர்வை வெளியேறி உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். மேலும், உங்கள் விதிமுறைகளில் சில முக யோகாவைச் சேர்க்கவும்.
இவை அனைத்தும் தோல் பராமரிப்பு வழக்கத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும் உங்களுக்கு ஏதேனும் அசௌகரிய உணர்வு இருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik