Fri Sep 11, 2026 | 11:24 PM IST

Weight Lifting Benefits: வெயிட் லிஃப்டிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Health Benefits Of Weight Lifting: பளு தூக்குதல் ஆண்கள், பெண்கள் இருவரும் செய்யக்கூடிய பொதுவான உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது. இந்த பளு தூக்குதல் முதியவர்களும் செய்து சாதனை படைத்து வருகின்றனர். பளு தூக்குதல் போன்ற வலிமையான பயிற்சிகளில் தனிநபர்கள் ஈடுபடுவதால், அவர்களின் தசையை உருவாக்குவது மட்டுமல்லாமல், தசை வலிமையை மேம்படுத்தவும் உதவுகிறது. பளு தூக்குதல் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். சரும ஆரோக்கியத்திற்கு மேம்படுத்த இரத்த ஓட்டம், ஹார்மோன் சமநிலை மற்றும் சிறந்த தரமான தூக்கம் தேவைப்படுகிறது. இவற்றின் மூலம் சரும செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகம் அதிகரிக்கப்பட்டு சருமத்தை மேம்படுத்துகிறது. இந்த வகை நன்மைகள் அனைத்தும் பளு தூக்குவதன் மூலம் கிடைக்கப்படுகிறது. மேலும், பளு தூக்குதல் பயிற்சி எண்டோர்பின் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதில் பளு தூக்குதல் உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 8 Shape Walking: எட்டு போட்டு நடந்தா, 80 வயசுக்கு மேல வாழலாம்! எப்படினு பாருங்க

பளு தூக்குவதால் கிடைக்கும் நன்மைகள்

பளு தூக்குதல் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் பளு தூக்குவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்கும் பல்வேறு உடற்பயிற்சிகளில் பளு தூக்குதல் பயிற்சியும் அடங்கும். ஆனால் பலரும் குறைந்த நேரத்தில் உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றனர். அந்த வகையில், குறைந்த நேரத்தில் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியாக பளு தூக்குதல் பயிற்சி உள்ளது. இந்த கார்டியோ உடற்பயிற்சி உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், எடை பயிற்சி தசை திசுக்களை உருவாக்குகிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

பளு தூக்குதல் மூலம் சருமம் உட்பட உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. பளு தூக்கும் போது உடலில் ஏற்படும் சுழற்சியானது சரும செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்குவதை மேம்படுத்துகிறது. இது ஆரோக்கியமான நிறத்தை ஊக்குவிக்கிறது.

ஹார்மோன் சமநிலை

பளு தூக்குதல் உட்பட வழக்கமான உடற்பயிற்சி ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சமச்சீர் ஹார்மோன்கள் முகப்பரு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தொடர்புடைய பிற சரும பிரச்சனைகளைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Walking Backwards Benefits: நீங்க பின்னோக்கி நடந்துருக்கீங்களா? இத பார்த்தா கண்டிப்பா நடப்பீங்க

சரும நெகிழ்ச்சியை அதிகரிக்க

பளு தூக்குதல் உள்ளிட்ட வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள் தசை தொனியை அதிகரிக்க உதவுகிறது. இவை சருமத்தை ஆதரிக்கவும், அதன் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வு தோற்றத்தைக் குறைக்கிறது.

PCOS பிரச்சனைக்கு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது குறித்து மிகவும் கவலைப்படுவர். இவர்களுக்கு, எடை தூக்குதல் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இன்று பெண்கள் பலரும் பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்சுலின் அளவு சரியாக வேலை செய்யாததுக்கான காரணம், உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையற்று காணப்படுவதாகும். இந்த ஹார்மோன் சமநிலையின்மையை மேம்படுத்த பளு தூக்குதல் சிறந்த தேர்வாக அமைகிறது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த

பளு தூக்குதல் செய்யும் போது உடல் செயல்பாட்டின் காரணமாக சிறந்த தூக்க முறைகளை ஊக்குவிக்கலாம். அதன்படி, சரும பழுது மற்றும் புத்துணர்ச்சிக்கு தரமான தூக்கம் அவசியமாகிறது. இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகள்

பளு தூக்குதல் நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு மற்றும் சிறந்த இருதய செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே பளுதூக்குதல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்.

எனவே, சரும பராமரிப்பு முறை மற்றும் ஆரோக்கியமான உணவு முறையுடன் பளு தூக்குதலை ஒரு சீரான வாழ்க்கை முறையில் இணைத்துக்கொள்வது, காலப்போக்கில் தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Daily Exercise Time Limit: தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

கண் சோர்வு, கண் வலியை போக்க இந்த எளிய பயிற்சி போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content