Doctor Verified

Daily Exercise Time Limit: தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Daily Exercise Time Limit: தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா?


How Much Exercise Is Good For Health: உடற்பயிற்சி என்பது உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த தேர்வாக அமைகிறது. அதன் படி, தினந்தோறும் முறையான உடற்பயிற்சி செய்பவர்களின் உடல் ஆரோக்கியமாகவும், எந்த வித பாதிப்புகள் இல்லாமலும் இருக்கும். ஆனால், சரியான முறையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே ஒருவர் நல்ல பலனைப் பெற முடியும்.

அதே போல, தினமும் ஒருவர் அவர்களின் திறனுக்கு மேல் உடற்பயிற்சி செய்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஆம். பலரும் தங்கள் உடலை விரைவாகக் கட்டியெழுப்புவதற்காக, அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது தங்கள் உடல் திறனைத் தாண்டி உடற்பயிற்சி செய்யத் தொடங்குகின்றனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். இந்த சூழ்நிலையில் ஒருவர் தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Stretches: உடல் எடையைக் குறைக்க உதவும் சிம்பிளான ஸ்ட்ரெட்சஸ்!

ஒரு நாளைக்குத் தேவையான உடற்பயிற்சி

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை எனினும், உடல் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், உடல் திறனை மீறி நாம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகளுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

இது குறித்து மருத்துவர் சமீர் அவர்கள் கூறுகையில், “ஒவ்வொருவரின் உடல் திறன் மற்றும் உடல் நலனுக்கு ஏற்ப தினசரி உடற்பயிற்சியின் அளவு மாறுபடுகிறது. அதன் படி, ஒரு சாதாரண நபர் தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதுவே உடற்பயிற்சிக்கான சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. இது தவிர, உடற்பயிற்சியின் நேரம் உடற்பயிற்சியின் வகைகளைப் பொறுத்தது. தீவிர உடற்பயிற்சி அதிக நேரம் செய்வதைத் தடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Breathing Exercise: இந்த வகை மூச்சுப் பயிற்சியை செய்து பாருங்க! டக்குனு எடை குறைஞ்சிடும்

ஏன் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

  • வழக்கமான உடற்பயிற்சி செய்வது நாள்பட்ட நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை நிர்வகிக்க உதவுகிறது.
  • உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
  • குழந்தைகள் சிறுவயது முதலே வழக்கமான உடற்பயிற்சி செய்வது எலும்புகளை வலுவாக்க உதவும். இது பிற்காலத்தில் ஏற்படும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
  • உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலினை சிறப்பாக செயல்பட வைக்கவும் முடியும். மேலும் இது வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
  • விரைவாக மற்றும் நீண்ட நேரம் தூங்குவதை உறுதிப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. இதன் மூலம் சீரான தூக்கத்தை பெறலாம்.
  • உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது.
  • உடற்பயிற்சியின் போது வெளியிடப்படும் ஹார்மோன்கள் நல்ல மனநிலையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இவை மன அழுத்தத்தைச் சமாளிக்கவும், பதட்டம், மனச்சோர்வு போன்ற அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இவ்வாறு தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் நோயற்ற வாழ்க்கையையும் பெற முடியும்.

ஆனால், ஒருவர் உடற்பயிற்சியில் தீவிர ஆர்வமாக இருந்தால், அதுவும் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது. எந்தவொரு செயலையும், அது நன்மை தரக்கூடியதாக இருப்பினும், அளவுக்கு அதிகமாக செய்வது உடலுக்குக் கேடு விளைவிக்கலாம். எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Walking Backwards Benefits: நீங்க பின்னோக்கி நடந்துருக்கீங்களா? இத பார்த்தா கண்டிப்பா நடப்பீங்க

Image Source: Freepik

Read Next

Walking Backwards Benefits: நீங்க பின்னோக்கி நடந்துருக்கீங்களா? இத பார்த்தா கண்டிப்பா நடப்பீங்க

Disclaimer

குறிச்சொற்கள்