தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஒரு நபர் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் ஆரோக்கியமாகிறார். சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது வழக்கமான உடற்பயிற்சியின் நன்மைகளை விட அதிகமாக பெறலாம். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு என்பது மக்களிடையே பெரிதாக ஏற்பட்டு வருகிறது. ஏணையோர் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதில் பலருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம் என்னவென்றால் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்பதுதான். காலை உடற்பயிற்சி செய்வது நல்லதா, மாலை உடற்பயிற்சி செய்வது நல்லதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. உடற்பயிற்சி செய்வதற்கான சரியான நேரம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. சில ஆய்வுகள் மாலையில் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்று கண்டறிந்துள்ளன, மற்றவை காலையில் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்று கண்டறிந்துள்ளன.
மேலும் படிக்க: குறைவாக சாப்பிட்டும் எடை குறையவில்லையா? உடற்பயிற்சி செய்தும் பலன் இல்லையா? இதை பண்ணுங்க!
உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?
- காலை உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்
- இரவு நன்றாகத் தூங்கிய பிறகு காலையில் உடற்பயிற்சி செய்யும்போது, அதை அதிக சக்தியுடன் செய்வீர்கள், இது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
- எனவே, காலை நேரம் உடற்பயிற்சி செய்வது, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கும் சிறந்தது.
- எனவே, நீங்கள் முன்பு இரவில் உடற்பயிற்சி செய்திருந்தால், அந்த வழக்கத்தை மாற்றி, காலையில் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குங்கள்.

காலை உடற்பயிற்சி, மாலை உடற்பயிற்சி எது நல்லது? ஆராய்ச்சி சொல்லும் உண்மை
- ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின் படி, அதிக நன்மைகளைப் பெற உடற்பயிற்சி செய்வதற்கு காலை நேரம் சிறந்தது ஆகும்.
- இந்த ஆராய்ச்சியின் படி, நீங்கள் இரவில் நன்றாக தூங்கியிருந்தால், காலையில் உடற்பயிற்சி செய்வது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
- மேலும் உங்கள் மூளை நன்றாக செயல்படும். காலையில் உடற்பயிற்சி செய்தால், இரவிலும் நன்றாகத் தூங்க உதவும் என்பதையும் இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சி பலனை முழுமையாக பெறுவது எப்படி?
- உடலுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரம் என்பது 24 மணிநேர சுழற்சியின் அடிப்படையில் ஹார்மோன்கள் மற்றும் மனநிலை உட்பட அனைத்து உடல் செயல்பாடுகளையும் ஒழுங்குபடுத்துகின்றன.
- உடலில் நடக்கும் அன்றாட சுழற்சி பாதிக்கப்பட்டால் தூக்கம் சரியாக ஏற்படாது. இதனால் அல்ட்ராடியன் தாளங்கள் சமநிலையற்றதாகிவிடும்.
- நீங்கள் காலையில் உடற்பயிற்சி செய்தால் அது பாதிக்கப்படாது, மேலும் நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், இரவில் நன்றாக தூங்குவீர்கள்.
எனவே, தினமும் காலையில் 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள். குறிப்பாக உணவுப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது ஒரு மனிதரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமாகும்.
மேலும் படிக்க: Morning walk vs evening walk: எடை குறைய காலை நடக்கனுமா.? அல்லது மாலை நடக்கனுமா.?
மாலை நேர உடற்பயிற்சி யாருக்கு நன்மை பயக்கும்?
- காலையில் எழுந்திருப்பதில் சிரமப்படுபவர்களுக்கு மாலை நேர உடற்பயிற்சிகள் சிறந்தது.
- ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க முயற்சிப்பவர்கள் நாள் முழுவதும் சாப்பிடும் கலோரிகளை மாலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் குறைக்கலாம்.
- தசையை வளர்ப்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு இதுவே சிறந்த நேரமாகும்.
- ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள், மேலும் உடற்பயிற்சியின் போது உங்கள் உடலில் போதுமான ஆற்றல் இருக்கும்.
- அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளைப் பயிற்சி செய்ய இது சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது.
- இருப்பினும், மாலையில் மிகவும் தாமதமாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது உங்கள் உயிரியல் கடிகாரத்தை பாதிக்கும்.
- மாலையில் உடற்பயிற்சி செய்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனால் உங்கள் தூக்க முறை பாதிக்கப்படலாம்.
- அப்படியே உடற்பயிற்சி செய்ய விரும்பும் பட்சத்தில் மாலை 5 மணிக்குள் உடற்பயிற்சி செய்வது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.
image source: freepik