இன்றைய காலக்கட்டத்தில் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் என்ற பிரச்சனையை பலர் எதிர்கொள்கிறார்கள். உடல் பருமன் பிரச்சனை என்பது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த பலர் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள்.
உடல் எடையை குறைக்க பலர் செய்யும் முயற்சிகள் தோல்வியில் தான் முடிகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஏணையோர் உடற்பயிற்சி செய்தும், உணவுக் கட்டுப்பாடு செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை என்பதுதான். உணவு குறைவாக சாப்பிடுகிறேன் இருந்தாலும் ஏன் என் உடல் எடை குறைவதில்லை என பலர் கவலைக் கொள்கிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க: Morning walk vs evening walk: எடை குறைய காலை நடக்கனுமா.? அல்லது மாலை நடக்கனுமா.?
உடற்பயிற்சி செய்தும் உடல் எடை ஏன் குறைவதில்லை?
- உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வாக உணரக் கூடும். இதை கருத்தில் கொண்டு பலரும் உடற்பயிற்சி செய்த பின் பலரும் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
- அதேபோல் உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு சக்தி தேவை. என்னால் எடையை இயல்பாகவும் பிறரை போல் அதிகமாகவும் தூக்க முடியவில்லை என நினைத்து பலர் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
- மேலும் உடற்பயிற்சி செய்த பிறகு கலோரிகள் எரிந்துவிட்டதால், என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

உடலில் நீரின் அளவு அதிகரிப்பது
- எடை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நீர் அதிகமாக குடிப்பதாகும். உடலில் நீர் தேங்கும்போது, எடை அதிகரிக்கக் கூடும்.
- உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதும் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
- தண்ணீர் குடிப்பது முக்கியம், ஆனால் அதை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் குடிக்கவும்.
- உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்ற, வாழைப்பழம் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும், ஏனெனில் அவற்றில் அதிக அளவு சோடியம் உள்ளது.
- உடலில் நீர் சமநிலையை பராமரிக்க, லேசான உடற்பயிற்சி மற்றும் நீட்சி பயிற்சிகளை தவறாமல் செய்வது நல்லது.
தூக்கமின்மை எடை அதிகரிக்க முக்கிய காரணம்
- தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் நினைத்து தங்களது தூக்கத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். தூக்கத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் ஆழமான தொடர்பு உள்ளது.
- நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது, இது கலோரிகளை எரிப்பதைத் தடுக்கிறது.
- தூக்கமின்மை பசி ஹார்மோன்களை அதிகரிக்கிறது, இது விரைவான எடை அதிகரிப்பிற்கு காரணமாகிறது.
- தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் நல்ல தூக்கத்தைப் பெறுங்கள். படுக்கைக்கு முன் காஃபின் மற்றும் திரை நேரத்தைத் தவிர்க்கவும்.
- தூங்குவதற்கும் எழுந்திருப்பதற்கும் ஒரு வழக்கமான நேரத்தை உருவாக்குங்கள். யோகா மற்றும் தியானம் போன்ற முறைகள் மூலம் உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது தூக்கத்தை அதிகரிக்கக் கூடும்.

படிப்படியாக உடல் எடையை குறைக்கவும்
எடை இழப்பு செயல்பாட்டில் சரியான முன்னேற்றத்தைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். சிலர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததும், உணவுக் கட்டுப்பாட்டை ஆரம்பித்ததும் உடல் எடை சரசரவென குறைய வேண்டும் என நினைக்கிறார்கள். வேகமாக உடல் எடை குறைய வேண்டும் என நினைத்தால், அதே வேகத்தில் மீண்டும் உடல் எடை அதிகரிக்கக் கூடும்.
குறைவாக உணவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?
சிலர் குறைவாக சாப்பிட்டு உடல் எடையை குறைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இது சரியல்ல, நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. குறைவான உணவை சாப்பிட்டு உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக, ஆரோக்கியமான முறையில் உணவை சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவுதான் உடலுக்கும் நல்லது, உடல் எடையை குறைப்பதிற்கும் நல்லது. குறைவான அளவில் மோசமான உணவை சாப்பிட்டாலும் எந்த பயனும் இல்லை.
சாப்பிடாமல் இருந்தாலும் எடை அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
திசுக்களில் திரவம் குவிவதால் வீக்கம் அல்லது எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். அதேபோல் மாதவிடாய், இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, ப்ரீக்ளாம்ப்சியா போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுப்பதும் உடல் எடை அதிகரிக்க காரணமாகும்.
அதேபோல் புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும் படிக்க: Homemade hair oil: நீளமா, அடர்த்தியா, கருப்பான முடிக்கு வீட்டிலேயே தயாரித்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க! டாக்டர் தரும் டிப்ஸ்
விரைவாக எடை அதிகரிக்க காரணம் என்ன?
வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
விரைவான எடை அதிகரிப்பு என்பது தைராய்டு, சிறுநீரகங்கள் அல்லது இதயத்தில் உள்ள பிரச்சனை போன்ற அடிப்படை சுகாதார நிலையின் அறிகுறியும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
image source: freepik