Why does eating less not make you lose weight: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையும் அடங்குகிறது. எடை அதிகரிப்பு காரணமாக, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பிற நாள்பட்ட நோய்கள் உருவாகின்றன. எனவே தான் உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பலரும் பல தரப்பட்ட முயற்சிகளைக் கையாள்கின்றனர். அதில் ஒன்றாக டயட்முறையைக் கையாள்வது அடங்குகிறது. உணவுமுறையைப் பொறுத்த வரை பல வகைகள் உள்ளது.
உடல் எடையைக் குறைப்பதற்கான பெரும்பாலான உணவுமுறையில் உணவைக் குறைவாக சாப்பிடுவது அடங்குகிறது. ஆம். உண்மையில், எடையைக் கட்டுப்படுத்துவதற்கு பலரும் தங்கள் உணவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர். உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்துக்களைச் சேர்க்காமல் இருப்பது, தவறான உணவுமுறையைக் கையாள்வது உள்ளிட்ட தவறுகளைச் செய்வர். அதே சமயம், இது போன்ற உணவுமுறைகளைக் கையாள்வதற்குப் பின்னரும் தங்கள் உடல் எடையைக் குறைப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இதில் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறைந்த அளவு உணவு உட்கொண்ட பிறகும், உடல் எடையைக் குறைக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும், அதை சரிசெய்வதற்கான வழிகள் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: இரவில் சீக்கிரமாக உணவு உண்ணுவது உடல் எடையைக் குறைக்க உதவுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ
நிபுணரின் கருத்து
ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி அவர்கள் தனது பதிவில்,”வளர்சிதை மாற்றக் குறைவு என்பது உங்கள் உடல் கலோரிகளை எரிக்கும் மற்றும் செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறை போன்ற அடிப்படை செயல்பாடுகளைச் செய்யும் விகிதத்தில் ஏற்படும் மந்தநிலையாகும். இது பொதுவாக வயதுக்கு ஏற்ப நிகழ்கிறது, ஆனால் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன” என கூறியுள்ளார்.
காரணங்கள்
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம். ஆனால், உணவை குறைந்த அளவு உட்கொள்வது மட்டும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தாது. இவை பலதரப்பட்ட காரணிகளால் ஏற்படலாம்.
- பொதுவாக வயது சார்ந்த காரணிகளில் காரணமாக, உடல் எடையைக் குறைப்பது கடினமாக அமைகிறது. ஏனெனில், வயது அதிகரிக்கும் போது உடல் கலோரிகளை எரிக்கக்கூடிய வேகத்தையும் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது எடை குறைப்பை ஏற்படுத்தாது.
- நச்சு நீக்க முறைகள் சரியாக செயல்படாத போது, அவை உடலுக்குத் தீங்கு விளைவித்து உடல் எடையிழப்பு இலக்குகளை அடைவதைக் கடினமாக்குகிறது. உண்மையான நச்சு நீக்க முறைகள் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுவதாகக் கூறப்படுகிறது.
- ஹார்மோன் ஒழுங்குமுறை சீரற்றதாக இருக்கும் போது உடல் எடை குறைப்பு தாமதமாகலாம் அல்லது எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இயற்கையாகவே சரிசெய்ய உதவும் வழிகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்ப்பது
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை கைவிட வேண்டும். அதன் படி, வெள்ளை ரொட்டி, சர்க்கரை, மைதா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை இன்சுலினை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கிறது.
அதாவது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலில் வேகமாக சர்க்கரையாக மாறி, அதிக கலோரிகளை வழங்குகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைத்து, எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: வேக வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த மூச்சுப்பயிற்சிகள் இதோ.. டாக்டர் தரும் டிப்ஸ்
உடல் செயல்பாடுகள்
தினமும் குறைந்தது 1 மணிநேர உடற்பயிற்சி செய்வது, உடலில் வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது என நிபுணர் பகிர்ந்துள்ளார். உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது உடல் அதிகளவிலான ஆற்றலை செலவிடுகிறது. எனவே அன்றாட வாழ்வில் நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
View this post on Instagram
ஆழ்ந்த தூக்கம்
நல்ல தூக்கம் இல்லாதது உடல் எடை குறைப்பைத் தாமதப்படுத்தலாம். எனவே, தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே, 8 மணிநேர தரமான தூக்கம் ஹார்மோன்களை மீட்டமைத்து கொழுப்பை எரிப்பதை ஆதரிப்பதாக நிபுணர் பகிர்ந்துள்ளார்.
ஏனெனில், மோசமான தூக்கம் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீராக்குகிறது. இவை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளுக்கு உதவுகிறது. நல்ல, சீரான தூக்கத்தைக் கையாள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் டயட் இருக்கும் போது செய்யும் 5 தவறுகள் இதோ.. அதை சரி செய்ய உதவும் குறிப்புகள்
Image Source: Freepik