Expert

இரவில் சீக்கிரமாக உணவு உண்ணுவது உடல் எடையைக் குறைக்க உதவுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

How eating an early dinner helps in weight loss: உடல் எடையைக் குறைப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைப் பின்பற்றுவது அவசியமாகும். அதே சமயம், இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியமாகும். இதில் எடையைக் குறைக்க இரவில் சீக்கிரமாக உணவு உண்ணுவது எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காண்போம்.
  • SHARE
  • FOLLOW
இரவில் சீக்கிரமாக உணவு உண்ணுவது உடல் எடையைக் குறைக்க உதவுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ


Benefits of having an early dinner for weight management: இன்றைய நவீன காலத்தில், உடல் எடை அதிகரிப்பு மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இது போன்ற சூழ்நிலையில், எடை இழப்புக்கு மக்கள் பல வகையான உணவு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். ஆனால், சிறிய பழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம் சில நேரங்களில் எடை குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம். உண்மையில், எடை இழக்கும் முயற்சியில், மக்கள் பெரும்பாலும் கலோரி உட்கொள்ளலை எண்ணுகிறார்கள், உடற்பயிற்சி செய்வது அல்லது உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகின்றனர்.

ஆனால், அவற்றில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றைப் பற்றி சிந்திக்க மறந்து விடுகின்றனர். அது வேறு ஒன்றும் இல்லை. அது தான் சாப்பிடும் நேரமாகும். குறிப்பாக இரவில் இரவு உணவு சாப்பிடும் நேரம் உங்கள் எடையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், எடை இழக்க எத்தனை மணிக்கு இரவு உணவு சாப்பிட வேண்டும் அல்லது சீக்கிரம் இரவு உணவு எடை குறைக்க உதவுமா என்று பலருக்கும் அடிக்கடி கேள்வி எழுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்புக்கு Pu-erh Tea உதவுமா.? நிபுணர் விளக்கம்..

நிபுணரின் கருத்து

டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான ரக்ஷிதா மெஹ்ரா அவர்கள், “எடை இழப்பு என்பது குறைவாக சாப்பிடுவது மட்டுமல்ல. புத்திசாலித்தனமாகவும், உடல் நிலைக்கு ஏற்பவும் சாப்பிடுவதைக் குறிக்கிறது. இது ஆற்றல் தேவைகள், செரிமானம் மற்றும் இயற்கையான தாளத்தை பராமரிக்கக்கூடிய ஆரம்ப மற்றும் சீரான உணவை உட்கொள்வது நல்ல ஆரோக்கியம் மற்றும் எடை கட்டுப்பாட்டை பராமரிப்பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என கூறியுள்ளார். இதில் எடை இழப்புக்கு ஆரம்ப இரவு உணவின் நன்மைகள் என்ன என்பதைக் காணலாம்.

எடை இழப்புக்கு சீக்கிரம் இரவு உணவு சாப்பிடுவதன் நன்மைகள்

உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியமாக இருப்பதற்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரவு உணவு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இயற்கை கலோரி கட்டுப்பாடு

இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவதன் மூலம் இரவு நேர சிற்றுண்டி அல்லது உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுவதைத் தடுக்கலாம். பெரும்பாலான மக்கள் சலிப்பு அல்லது மன அழுத்தம் காரணமாக இரவில் அதிகமாக சாப்பிடுகின்றனர். அதில் பெரும்பாலும் குப்பை உணவு அல்லது இனிப்புகளையே அதிகம் சாப்பிடுகின்றனர். இது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது. மேலும் இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது, இரவில் தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை உடைக்க உதவுகிறது. மேலும் இது பசிக்கும் பழக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உடல் புரிந்துகொள்ள உதவுகிறது.

சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு

இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது உடல் உணவை எளிதில் செரிமானம் செய்யவும், கலோரிகளை எரிக்கவும் போதுமான நேரத்தை அளிக்கிறது. ஏனெனில், இரவில் வளர்சிதை மாற்றம் குறைகிறது. எனவே தாமதமாக சாப்பிட்டால், உணவு முழுமையாக செரிமானம் அடையாது. மேலும் உடலில் உள்ள பெரும்பாலான கலோரிகள் கொழுப்பாக சேமிக்கத் தொடங்குகிறது. எனவே, இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது உடலுக்கு உணவை ஆற்றலாக மாற்ற போதுமான நேரத்தைத் தருகிறது. மேலும் இரவில் உடல் செயல்பாடுகள் மெதுவாக இருக்கும், எனவே உணவை சீக்கிரமாக சாப்பிட்டால், அது கொழுப்பாக மாறாது. அது மட்டுமல்லாமல் இது உடல் கடிகாரத்துடன் பொருந்துகிறது. இதன் மூலம் உடல் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எடை குறைக்க ஜிம்முக்கு போவதற்கு முன்... இந்த 5 உணவுப் பழக்கங்களை மாற்றுங்கள்..

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலை

இரவு நேரத்தில் கல்லீரல் மெதுவாக குளுக்கோஸை வெளியிடுகிறது. இதனால், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ஆனால், தாமதமாக சாப்பிட்டால், இந்த அதிகப்படியான குளுக்கோஸ் உடலுக்குள் சென்று காலையில் உண்ணாவிரத சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். மேலும் இது இன்சுலின் உணர்திறனைக் குறைக்கிறது மற்றும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. இது தவிர, உடலில் அழற்சியின் சிக்கலை அதிகரிக்கிறது. எனவே இரவில் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் அதன் வேலையை சிறப்பாகச் செய்ய முடிகிறது. இதன் காரணமாக உடல் இயற்கையான முறையில் கொழுப்பை எரிக்க முடிகிறது.

ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கம்

இரவில் கனமான உணவை உட்கொள்வது அல்லது தாமதமாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக வாயு, அஜீரணம் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிரது. இரவில் தாமதமாக சாப்பிடுவது தூக்கத்தைப் பாதிக்கிறது. தூங்குவது, உடல் ஓய்வெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், பசியைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும், செரிமான செயல்முறைக்கும் மிகவும் முக்கியமானதாகும். கிரெலின் என்பது பசியைத் தூண்டும் ஹார்மோன் ஆகும். நல்ல தூக்கத்தின் மூலம் இந்த ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கலாம். ஆனால் சரியான தூக்கம் இல்லாதது, அதிகமாக பசியுடன் உணர வைக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்துகிறது.

முடிவுரை

எடையிழப்புக்கு என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியமாகும். இரவில் சீக்கிரமாக இரவு உணவு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கிறது மற்றும் கலோரிகளை எரிக்க நேரம் அளிக்கிறது. எனவே நாள்தோறும் இரவு 7 முதல் 8 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுவது அல்லது தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எளிதில் எடையைக் குறைக்க நிபுணர் சொன்ன இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்க..

Image Source: Freepik

Read Next

அடிவயித்துல மட்டும் கொழுப்பு தேங்குதா.? அப்போ இந்த விஷயத்த உடனே நிறுத்துங்க.! மருத்துவர் அறிவுரை..

Disclaimer