Expert

அடிவயித்துல மட்டும் கொழுப்பு தேங்குதா.? அப்போ இந்த விஷயத்த உடனே நிறுத்துங்க.! மருத்துவர் அறிவுரை..

வயிற்றுக் கொழுப்பு குறையாததற்கான காரணம் என்ன? இதனை சரிசெய்ய எந்த பழக்கங்களை தவிர்க்க வேண்டும்? இதற்கான விளக்கத்தை மருத்துவர் பகிர்ந்துள்ளார். 
  • SHARE
  • FOLLOW
அடிவயித்துல மட்டும் கொழுப்பு தேங்குதா.? அப்போ இந்த விஷயத்த உடனே நிறுத்துங்க.! மருத்துவர் அறிவுரை..


எடை குறைக்க பலர் உடற்பயிற்சியும், டயட்டும் கடைப்பிடித்தாலும், அடிவயிற்றில் மட்டும் கொழுப்பு குறையாமல் இருப்பது பெரும்பாலானோரின் கவலை. “இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறையில் உள்ள சில தவறான பழக்கங்கள் தான்” என்று வாழ்க்கை முறை ஆலோசகர், PCOS ரிவர்சல் மற்றும் எடை குறைப்பு நிபுணர் டாக்டர் கீர்த்தனா ராஜவேலு கூறுகிறார். மேலும் சில விஷயங்களை உடனே நிறுத்துமாறு அவர் அறிவுறுத்துகிறார்.  அவை பின்வருமாறு..

1. அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது

மீண்டும் மீண்டும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, உடலில் இன்சுலின் ஹார்மோன் அதிகரிக்கச் செய்து, கொழுப்பு எரிவதை தடுக்கிறது.

2. இரவு தாமதமாக சாப்பிடுவது

இரவு தாமதமாக சாப்பிடுவது Circadian Rhythm-ஐ பாதிக்கிறது. உடலின் இயற்கை மணிக்கூடு சீர்குலைவதால் அடிவயிற்றில் கொழுப்பு தேங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அதிகப்படியான கொழுப்பை எரிக்க நிபுணர் சொன்ன இந்த 5 எளிய வழிகளைப் பின்பற்றுங்க

3. கார்டியோ மட்டும் செய்வது

உடற்பயிற்சியில் கார்டியோ மட்டும் செய்து விட்டு, Strength Training-ஐ தவிர்ப்பது, தசைகளின் வளர்ச்சியை தடுக்கும். இதனால் கொழுப்பு எரிதல் குறையும்.

4. இரவில் தாமதமாக தூங்குவது

இரவு 12 மணிக்குப் பிறகு தூங்குவது கார்டிசோல் ஹார்மோனை பாதிக்கிறது. இதனால் வயிறு உப்புசம், பசி அதிகரிப்பு ஏற்பட்டு, வயிற்றுக் கொழுப்பு கூடுகிறது.

5. அதிக மனஅழுத்தம்

தொடர்ச்சியான stress மற்றும் overthinking காரணமாக ‘Cortisol’ ஹார்மோன் அதிகரித்து, நேரடியாக அடிவயிற்றில் கொழுப்பு தேங்கச் செய்கிறது.

View this post on Instagram

A post shared by Dr. Keerthana Rajavelu (@dr.keerthanas_wellnesswave)

நிபுணர் பரிந்துரை

அடிவயிற்றுக் கொழுப்பை குறைக்க, சீரான உணவு பழக்கம், ஒழுங்கான தூக்கம், Strenght Training மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு மிக அவசியம். “இந்த 5 பழக்கங்களை தவிர்த்தால், வயிற்றுக் கொழுப்பை குறைக்க சுலபமாகும்” என டாக்டர் கீர்த்தனா வலியுறுத்துகிறார்.

{Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டுதல்கள் மட்டுமே. ஒவ்வொரு நபரின் உடல்நிலை, மருத்துவ வரலாறு மற்றும் ஆரோக்கியத் தேவைகள் மாறுபடும். எனவே, வயிற்றுக் கொழுப்பு குறைப்பு தொடர்பான மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.}

Read Next

எளிதில் எடையைக் குறைக்க நிபுணர் சொன்ன இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்க..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்