Expert

அதிகப்படியான கொழுப்பை எரிக்க நிபுணர் சொன்ன இந்த 5 எளிய வழிகளைப் பின்பற்றுங்க

How to reduce body weight naturally at home: உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். எனினும், சில எளிய வழிமுறைகளின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதில் உடல் எடையைக் குறைக்க நிபுணர் பகிர்ந்துரைத்த சில குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
அதிகப்படியான கொழுப்பை எரிக்க நிபுணர் சொன்ன இந்த 5 எளிய வழிகளைப் பின்பற்றுங்க


Simple ways to reduce belly fat at home: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு உள்ளிட்டவை பிரச்சனை பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. உண்மையில், உடலில் அதிகரிக்கும் இந்த கொழுப்பு பிரச்சனையின் காரணமாக, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். எனவே தான் உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர்.

குறிப்பாக, மக்கள் பலரும் உடலில் அதிகரித்த கொழுப்பைக் குறைப்பதற்கு ஜிம் செல்வது, கடுமையான டயட் முறைகளைப் பின்பற்றுவது மற்றும் இன்னும் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். இது குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, “கொழுப்பு இழப்பு என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல - உண்மையில் முக்கியமானது இங்கே” என்று தொடங்கி தனது பதிவை ஆரம்பித்தார்.

இந்த பதிவும் உதவலாம்: எடையை மடமடனு வேகமாகக் குறைக்க ஈவ்னிங் டைம்ல இந்த பழக்கங்களைப் பின்பற்றுங்கள்

உடல் எடையைக் குறைக்க உதவும் எளிய வழிகள்

கலோரி பற்றாக்குறையைப் பின்பற்றுவது

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்களின் கூற்றுப்படி, “விரதம் இருப்பது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது மற்றும் மீண்டும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. எனவே பகுதி கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். எனினும், தீவிர கட்டுப்பாடு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, கலோரி பற்றாக்குறையைப் பின்பற்றுவது அவசியமாகும். இதை நிலையானதாக மாற்ற வேண்டும். அதாவது உடலுக்குத் தேவையானதை விட குறைவான கலோரிகளை சாப்பிடுவதன் மூலம் நாம் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிப்பதாகும். இது ஆரோக்கியமான எடை இழப்பிற்கு ஒரு அடிப்படை அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.

போதுமான புரதத்தை சாப்பிடுவது

நிபுணர் கூறியதாவது, “புரதம் நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும், தசை வெகுஜனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. எந்தவொரு கொழுப்பு இழப்பு பயணத்திலும் இது சிறந்த நண்பர்” என்று கூறியுள்ளார்.

உணவில் போதுமான அளவில் புரதத்தை சேர்ப்பதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் நிறைவாக உணரவும், தசைகளைப் பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக, காலை உணவில் புரதத்தைச் சேர்ப்பது நாள் முழுவதும் சர்க்கரை ஏக்கத்தைக் குறைத்து, எடையிழப்பை ஆதரிக்கிறது.

அதிக நார்ச்சத்தைச் சேர்ப்பது

“நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்திருக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும், தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவும். எனவே பழங்கள், காய்கறிகள், விதைகள் மற்றும் முழு தானியங்களை சேர்க்கலாம்” என நிபுணர் கூறுகிறார்.

அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முளைகள் போன்ற நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். அதே சமயம், காரமான மற்றும் மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். பழுப்பு அரிசி, முழு கோதுமை மாவு, பழுப்பு ரொட்டி போன்ற பதப்படுத்தப்படாத உணவுகளைச் சேர்க்க வேண்டும். உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க, கோதுமைப் பொருள்களை விரும்பலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Water Weight Loss: சரியான முறையில் தண்ணீர் குடித்தாலே எடை குறையும் தெரியுமா.? நிபுணர் விளக்கம் இங்கே..

தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது

“தூக்கமின்மை பசி ஹார்மோன்களை அதிகரிக்கிறது. மேலும் இது திருப்தியைக் குறைக்கிறது. 7–8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் ஆனது சிறந்த பசியின்மை கட்டுப்பாட்டிற்குச் சமம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, தூக்கமின்மை பசியைத் தூண்டுவதால் அதிகப்படியான உணவு உட்கொள்ளலுக்கு வழிவகுக்கக்கூடும். தூக்கமின்மையைக் குறைப்பதன் மூலம் பசியின்மையைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

அதிகமாக நகர்வது, குறைவாக உட்காருவது

“தினமும் உடற்பயிற்சி செய்தாலும், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருப்பது கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு மணி நேரம் எழுந்திருப்பது, கை, கால்களை நீட்டுவது மற்றும் நகர்வது” போன்றவற்றைச் செய்ய பரிந்துரைக்கிறார்.

இந்த முறை இயற்கையாகவே உடல் எடையைக் குறைப்பதற்கான எளிய மற்றும் சிறந்த வழியாகும். நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் முறையைத் தவிர்த்து, உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவடுது உடல் எடையைக் குறைக்கும் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

நிலைத்தன்மை மற்றும் முழுமை

“கொழுப்பு இழப்பு என்பது குறுக்குவழிகள் அல்லது பட்டினியைப் பற்றியது அல்ல. இது உணவு, இயக்கம், தூக்கம் மற்றும் சமநிலையைச் சுற்றியுள்ள அன்றாட பழக்கங்களைப் பற்றியது” என்று நிபுணர் பகிர்ந்தார்.

கொழுப்பு இழப்பை மேம்படுத்துவதற்கு பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே சீரான உணவுமுறை, போதுமான தூக்கம் போன்ற அன்றாட பழக்கங்களை நாள்தோறும் கையாள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: கடுமையான டயட் பின்பற்றினாலும்.. எடை மீண்டும் ஏன் கூடுகிறது தெரியுமா? – டாக்டர் விளக்கம்

Image Source: Freepik

Read Next

கடுமையான டயட் பின்பற்றினாலும்.. எடை மீண்டும் ஏன் கூடுகிறது தெரியுமா? – டாக்டர் விளக்கம்

Disclaimer