Expert

PCOS, PCODக்கு உதவும் Top 5 ஆயுர்வேத உணவுகள் - நிபுணர் பரிந்துரை

PCOS மற்றும் PCOD பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும் சிறந்த 5 ஆயுர்வேத உணவுகள் குறித்து நிபுணர் கூறிய தகவல் இங்கே. அந்த உணவு பட்டியலை அறிய பதிவை முழுமையாக படிக்கவும். 
  • SHARE
  • FOLLOW
PCOS, PCODக்கு உதவும் Top 5 ஆயுர்வேத உணவுகள் - நிபுணர் பரிந்துரை


இன்றைய பெண்களில் அதிகமாகக் காணப்படும் சுகாதார சிக்கல்கள் PCOS (Polycystic Ovary Syndrome) மற்றும் PCOD (Polycystic Ovary Disorder). ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance), மாதவிடாய் கோளாறுகள் (Irregular Periods), கருவுறுதல் சிக்கல்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த நிலைக்கு, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் இயற்கை உணவுகள் பெரிதும் உதவக்கூடும் என Health and Wellness நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா பரிந்துரைத்துள்ளார்.

மேலும், PCOS மற்றும் PCOD பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும் Top 5 ஆயுர்வேத உணவுகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவை என்ன உணவுகள் என்று இங்கே தெரிந்துக் கொள்வோம்.

which-is-the-best-exercise-for-pcos-main

PCOS மற்றும் PCOD-க்கு உதவும் முக்கியமான 5 ஆயுர்வேத உணவுகள்

1. அஸ்வகந்தா (Ashwagandha)

அஸ்வகந்தா உடலின் கார்டிசோல் ஹார்மோன் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. மன அழுத்தத்தைக் குறைத்து, PCOS-ன் முக்கிய காரணிகளில் ஒன்றான வீக்கத்தை குறைக்க உதவும். இதனால் ஹார்மோன் சமநிலை மேம்பட்டு, உடல் மீட்பு சுலபமாகிறது.

2. ஷட்டாவரி (Shatavari)

பெண்களின் ஹார்மோன் ஆரோக்கியத்திற்கான சிறந்த மூலிகை. மாதவிடாய் சுழற்சி ஒழுங்குபடுத்துதல், ஈஸ்ட்ரோஜன் சமநிலை மேம்படுத்துதல், கருவுறும் திறன் அதிகரித்தல் போன்ற பல நன்மைகளை தருகிறது.

3. மஞ்சள் (Turmeric)

மஞ்சளில் குர்குமின் (Curcumin) எனும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற (Antioxidant) தன்மைகள் உள்ளன. இது இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் போன்ற PCOS காரணிகளை குறைக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்சனைக்கு சிகிச்சை இருக்கா? - உடல் பருமன் குழந்தையின்மைக்கு காரணமா? - மருத்துவர் விளக்கம்!

4. இலவங்கப்பட்டை (Cinnamon)

இலவங்கப்பட்டை சர்க்கரை அளவு மற்றும் குளுக்கோஸ் கட்டுப்பாட்டிற்கு சிறந்த மருந்து. இன்சுலின் எதிர்ப்பு குறைந்து, மாதவிடாய் சுழற்சியும் சீராகும். இது PCOS, PCOD மீட்பிற்கு நேரடி ஆதரவாக உள்ளது.

5. ஆளி விதைகள் (Flax seeds) & வெந்தயம் (Fenugreek)

* ஆளி விதைகள் – ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் நிறைந்தவை. ஹார்மோன் ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

* வெந்தயம் – வளர்சிதை மாற்றத்தை தூண்டி, சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் எதிர்ப்பை குறைத்து, PCOS அறிகுறிகளைத் தணிக்கிறது.

View this post on Instagram

A post shared by Dimple Jangda (@dimplejangdaofficial)

கூடுதல் பரிந்துரை

ஆப்பிள், கிவி, பப்பாளி போன்ற பழங்கள் மற்றும் பசுமையான இலைக் காய்கறிகள், அதேபோல் நெய், வால்நட் போன்ற நல்ல கொழுப்புகளை உணவில் சேர்த்துக்கொள்ளும்படி டிம்பிள் ஜாங்க்டா பரிந்துரைத்துள்ளார். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஹார்மோன் சமநிலைக்கும் ஆதரவாக செயல்படும்.

இறுதிச் சொல்..

PCOS மற்றும் PCOD சிகிச்சையில் மருந்துகள் மட்டுமல்ல, ஆயுர்வேத உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அஸ்வகந்தா, ஷட்டாவரி, மஞ்சள், இலவங்கப்பட்டை, ஆளி விதைகள் மற்றும் வெந்தயம் ஆகியவை பெண்கள் ஆரோக்கியத்திற்கான இயற்கை சக்திவாய்ந்த ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன.

 

Read Next

விநாயகர் சதுர்த்தி பூஜையில் வைக்க வேண்டிய 21 இலைகள்! அதுக்கு முன்னாடி அதன் நன்மைகளைத் தெரிஞ்சிக்கோங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்