Doctor Verified

எலும்பு வலிமை முதல் ஹார்மோன் சமநிலை வரை.. பெண்கள் சாப்பிட வேண்டிய ஆயுர்வேத உணவுகள்

What are the best foods for women's health: பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வகையில் சில ஆயுர்வேத உணவுகள் பெரிதும் உதவுகின்றன. இதில் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஆயுர்வேத உணவுகள் உதவும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
எலும்பு வலிமை முதல் ஹார்மோன் சமநிலை வரை.. பெண்கள் சாப்பிட வேண்டிய ஆயுர்வேத உணவுகள்


Best ayurvedic foods for women's health: இன்றைய நவீன காலத்தில் அன்றாட வாழ்வில் பெண்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். நீண்ட கால உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகள், உணர்ச்சி வலிமை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல காரணங்களால் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இது போன்ற நிலையைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்த வரை பெண்ணின் உடல் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அவ்வாறு, ஹார்மோன் சமநிலை, உணர்ச்சி வலிமை மற்றும் நீண்டகால ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதத்தில் சில உணவுகள் தினமும் ஊட்டமளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதிகப்படியான பித்த தோஷத்தை குளிர்விக்கவும் மற்றும் மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்கவும் பெண்களின் ஆரோக்கியத்தில் 7 ஆயுர்வேத சூப்பர்ஃபுட்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள் குறித்தும், உற்சாகமாகவும், ஆதரவாகவும் உணர உதவும் நடைமுறை சமையல் குறிப்புகள் குறித்து தி யோகா இன்ஸ்டியூட் தளத்தில் டாக்டர் ஹன்சாஜி அவர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் தவிர்க்க வேண்டிய உணவு சேர்க்கைகள் பற்றிய விரிவான பார்வை இங்கே..

நிபுணரின் கருத்து

ஒரு பெண்ணின் உடல் என்பது வெளியே பல வேலைகளைச் செய்வது மட்டுமல்லாமல், அது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல், எலும்புகளைப் பாதுகாத்தல், தை ஆதரித்தல், தாய்மைக்குத் தயார்படுத்துதல் அல்லது மாதவிடாய் காலத்தில் உங்களை மெதுவாக வழிநடத்துதல் போன்றவற்றைச் செய்கிறது. எனினும், பல பெண்கள் சோர்வாக, வீங்கியதாக, சமநிலையற்றதாக அல்லது உணர்ச்சி ரீதியாக சோர்வாக உணர்கின்றனர்.

அடிப்படையில், ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் அவர்கள் பலவீனமாக இருப்பதால் அல்ல. இந்நிலையில், உண்மையில் ஆயுர்வேதம் வலிமை மற்றும் உயிர்ச்சக்தியை மீண்டும் பெற உதவுகிறது. ஆயுர்வேதத்தில் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய அவர்கள் தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 7 ஆயுர்வேத சூப்பர்ஃபுட்கள் குறித்து காண்போம். அவை ஹார்மோன்கள், உணவில் மற்றும் ஆற்றலுடன் செயல்படும் உணவுகள் ஆகும்.

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்

சதாவரி

இது ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மூலிகையாகும். இது இனப்பெருக்க ஆரோக்கியம், உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கிறது. இவை இயற்கையாகவே குளிர்ச்சியை தருகிறது. இது உடலில் வெப்பத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு, அதிக மாதவிடாய் அல்லது எரிச்சல் போன்ற உணர்வுகளை அனுபவிக்கும் பெண்களுக்கு உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது நரம்புகளை அமைதிப்படுத்தவும், கருப்பையை வலுப்படுத்தவும், கருவுறுதலை மேம்படுத்தவும் உதவுகிறது. இரவில் சூடான பாலுடன் ஷதுரி பொடியை எடுத்துக் கொள்ளலாம்.

கருப்பு எள்

இதில் கால்சியம், இரும்பு மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை எலும்புகளை ஆழமாக ஊட்டமளிக்கவும், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. குறிப்பாக, பிரசவத்திற்குப் பின் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு, பெண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். வாதம் அதிகரிக்கும் போது மற்றும் உடலில் வறட்சி மூட்டு வலி, பதட்டம் அல்லது தூக்கமின்மையை ஏற்படுத்தும் போது இதை எடுத்துக் கொள்ளலாம். 2 டீஸ்பூன் கருப்பு எள், 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு சிவப்பு மிளகாய் கலவையை உப்பு மற்றும் ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து, வேகவைத்த காய்கறிகள், கிட்டி அல்லது வெற்று அரிசியை நெய்யுடன் தூவி சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health Foods: குடல் ஆரோக்கியத்திற்கான சூப்பர் ஃபுட்ஸ்.!

ஆம்லா

ஆயுர்வேதத்தில் மிகவும் சிறந்து விளங்கும் சூப்பர்ஃபுட்களில் ஒன்று ஆம்லா ஆகும். இது முடி, சருமம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின் சி பெண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்காய் எடுத்துக் கொள்வது அதிகப்படியான பித்தத்தை குளிர்விக்கிறது. குறிப்பாக அதிக இரத்தப்போக்கு அல்லது முகப்பரு வெடிப்பு ஏற்படும் போது இதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு புதிய நெல்லிக்காயை சாப்பிடலாம். 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றில் சிறிது கல் சர்க்கரையைச் சேர்க்கலாம். இது முடி உதிர்தல் பிரச்சனை மற்றும் சரும நிறமியைக் குறைக்க உதவுகிறது.

விதாரி காண்ட்

இது இரு பாலினருக்கும் ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு ஆயுர்வேதத்தின் பயனுள்ள தீர்வாகக் கருதப்படுகிறது. கருவுறுதல் என்பது இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியது மட்டுமல்லாமல், அனைத்து திசுக்களின், குறிப்பாக இனப்பெருக்க திசுக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியது. இது இயற்கையாகவே அண்டவிடுப்பின் சமநிலை, ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனை ஆதரிக்கிறது. மேலும் கருப்பை அதன் தொனி மற்றும் உயிர்ச்சக்தியை மீண்டும் பெற உதவுகிறது. இது உடலில் அதிகப்படியான வெப்பம் மற்றும் மன அழுத்தத்தையும் அமைதிப்படுத்துகிறது.

ராகி

நவீன ஊட்டச்சத்தில் இது மிகவும் குறைவாக அறியப்படும் சூப்பர்ஃபுட்களில் ஒன்றாகும். இதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலம் போன்றவை தளர்வு மற்றும் சிறந்த தூக்கத்தைத் தருகிறது. மேலும் எலும்பு வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு கால்சியம் அவசியமாகும். இது தசை இயக்கம் மற்றும் மூளைக்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையே செய்தியைக் கொண்டு செல்ல உதவுகிறது. இது பாலை விட மூன்று மடங்கு அதிக கால்சியத்தைக் கொண்டதாகும். பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி இழப்பு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸைத் தவிர்க்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Diet for Diabetes: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

நெய்

நெய் என்பது சருமம் முதல் எலும்புகள் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு உணவுப்பொருள் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் பதட்டத்தைத் தணிக்க நெய் உதவுகிறது. மேலும் இது கருவுறுதலை ஆதரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உடலில் தண்ணீரை சமநிலைப்படுத்துகிறது. மேலும் இது வறண்ட சருமம் மற்றும் மலச்சிக்கலுக்கும் உதவுகிறது. ஒரு ஸ்பூன் நெய்யை சூடான அரிசி அல்லது புரதத்துடன் அல்லது படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காயுடன் சேர்ப்பது நிம்மதியான தூக்கத்திற்கு உதவுகிறது.

அசோகா

இது பெண்களுக்கு வலி, கனமான மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளிட்ட மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியைப் போக்க உதவுகிறது. அசோகா பட்டை இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், இதை உணவு சாப்பிட்ட பிறகு பொடியாக உட்கொள்ளலாம். இதன் சாறு அருந்துவது ஆரோக்கியமான சருமத்தை ஆதரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: உங்க ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலைப்படுத்த நீங்க சாப்பிட வேண்டிய சம்மர் ஃபுட்ஸ்

Image Source: Freepik

Read Next

நிற்காம உதிரும் முடிக்கு ஒரு சூப்பர் தீர்வு.. மருத்துவர் சொன்ன இந்த ஆயுர்வேத ஹெர்பல் ட்ரிங்க் உங்களுக்கு உதவும்

Disclaimer