Doctor Verified

நிற்காம உதிரும் முடிக்கு ஒரு சூப்பர் தீர்வு.. மருத்துவர் சொன்ன இந்த ஆயுர்வேத ஹெர்பல் ட்ரிங்க் உங்களுக்கு உதவும்

இன்று மக்கள் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் முடி உதிர்தல் பிரச்சனை அடங்குகிறது. இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற, மருத்துவ குணங்கள் நிறைந்த ஆயுர்வேத பானங்களை உட்கொள்ளலாம். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
நிற்காம உதிரும் முடிக்கு ஒரு சூப்பர் தீர்வு.. மருத்துவர் சொன்ன இந்த ஆயுர்வேத ஹெர்பல் ட்ரிங்க் உங்களுக்கு உதவும்


இன்றைய காலகட்டத்தில், தூசி, அதிகப்படியான மன அழுத்தம், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை அல்லது பிற காரணங்களால் முடி உதிர்தல், மெலிதல், நரைமுடி, முடி வறட்சியடைவது மற்றும் வேர்கள் பலவீனமடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், மக்கள் முடியின் நல்ல வளர்ச்சி மற்றும் முடி உதிர்தலைத் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றனர். அதன் படி, புரதம், இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

இது தவிர, உடலை நீரேற்றம் செய்யவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், போதுமான தூக்கத்தைப் பெறவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும் மக்கள் பெரும்பாலும் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் மருத்துவ குணங்கள் நிறைந்த பானங்களை உட்கொள்வதும் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. அதன் படி, நொய்டாவின் செக்டார் 12 இல் உள்ள அர்ச்சிட் ஆயுர்வேத கிளினிக்கின் டாக்டர் அனந்த் திரிபாதி அவர்கள் முடி உதிர்தலைத் தடுக்க ஆயுர்வேத பானத்தை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: அதிகரித்த Hair fall மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறதா.? இந்த Magic Drink இருக்க கவலை எதுக்கு.!

கூந்தலுக்கு ஆயுர்வேத பானம் தரும் நன்மைகள்

முடிக்கு வலிமை தர

வெந்தயம், நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி போன்றவை நிறைந்த ஆயுர்வேத பானமானது வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்ததாகும். இந்த பொருள்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியை வேர்களிலிருந்து வலுப்படுத்தவும், வேர்களிலிருந்து முடிக்கு ஊட்டமளிக்கவும், முடி உடைவதைத் தடுக்கவும் உதவுகிறது.

உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த ஆயுர்வேத பானங்கள் நல்ல அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க

இந்த ஆயுர்வேத பானத்தில் ஏராளமான வைட்டமின் சி, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த பானத்தை உட்கொள்வது முடியை வேர்களிலிருந்து வலுப்படுத்தவும், அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் இது முடி உதிர்தலைத் தடுக்க உதவும் ஒரு சிறந்த பானமாகும்.

தலைமுடியை பளபளப்பாக்க

இந்த ஆயுர்வேத பானத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதை உட்கொள்வது இயற்கையாகவே முடியை ஈரப்பதமாக்குவதற்கும், முடியின் வறட்சியை நீக்குவதற்கும், ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Drinks: முடி கொட்டாமல் இருக்க காலையில் இந்த பானங்களை முயற்சிக்கவும்.!

முடி உதிர்வதை நிறுத்த ஆயுர்வேத பானம் தயாரிப்பது எப்படி?

  • இந்த பானம் தயார் செய்ய, 1 டீஸ்பூன் வெந்தயம், 10-12 கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 4 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளலாம்.
  • இவை அனைத்தையும் 2 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • இப்போது காலையில் அதை நன்கு கலந்து, பாதி தண்ணீர் இருக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு இதை வடிகட்டி சிறிது ஆறியதும் உட்கொள்ளலாம்.
  • நீங்கள் விரும்பினால், இதில் தேன் சேர்த்தும் குடிக்கலாம்.

எனினும், இதில் உள்ள ஏதேனும் பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது இந்த பானத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

முடிவுரை

வெந்தயம், கறிவேப்பிலை, செம்பருத்தி பூக்கள் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றிலிருந்து தயார் செய்யப்படும் ஆயுர்வேத பானங்களை உட்கொள்வது முடி உதிர்தல் அல்லது உடைப்பைத் தடுக்க உதவுகிறது. மேலும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேர்களிலிருந்து முடியை வலுப்படுத்தவும், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், முடியை இயற்கையாகவே பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. எனினும், அதிகப்படியான முடி உதிர்தல் இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், இது வேறு சில உடல்நலப் பிரச்சனைகளால் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Drinks: வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவும்.. சந்தேகமே வேண்டாம்.. முடி சூப்பரா வளரும்..

Image Source: Freepik

Read Next

கண் வறட்சிக்குத் தீர்வு.. நெய் தரும் அற்புத நன்மைகள்! ஆயுர்வேத நிபுணர் விளக்கம்..

Disclaimer