உங்க ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலைப்படுத்த நீங்க சாப்பிட வேண்டிய சம்மர் ஃபுட்ஸ்

Which foods are good for hormonal imbalance: கோடைக்காலத்தில் ஹார்மோன் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் பலரும் சோர்வாக உணர்கின்றனர். எனினும் சில உணவுகளின் மூலம் இந்த பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம். இதில் உடலுக்கு மென்மையான, ஆரோக்கியமான பருவத்திற்குத் தேவையான, ஹார்மோன் பிரச்சனைகளைச் சமாளிக்கக் கூடிய சில உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உங்க ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலைப்படுத்த நீங்க சாப்பிட வேண்டிய சம்மர் ஃபுட்ஸ்

Which foods are good for hormonal imbalance: நமது உடலில் வளர்ச்சிதை மாற்றம் முதல் மனநிலை வரை அனைத்தையும் பாதிக்கும் விதமாக ஹார்மோன்கள் அமைகின்றன. ஹார்மோன்கள் உடலை சீராக இயங்க வைக்கும் தூதர்கள் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், இவை சமநிலையில் இல்லாத போது அது எல்லாவற்றையும் ஒத்திசைவிலிருந்து வெளியேற்றக்கூடிய சோர்வு, மனநிலை மாற்றங்கள், திடீர் எடை அதிகரிப்பு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் உதவியுடன் ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்கலாம்.

நாம் சாப்பிடுவது, குறிப்பாக வானிலை வெப்பமாக இருக்கும் காலநிலையில் நமக்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். சில குளிர்ச்சியான உணவுகளை கோடைக்காலத்தில் நாம் உட்கொள்வதால், அவை நமக்கு புத்துணர்ச்சியைத் தருவதாகவும், ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கூறுகின்றனர். PCOS அல்லது தைராய்டு பிரச்சினைகள் போன்ற நிலைமைகளைக் கையாள்பவர்களாக இருப்பின், உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா அவர்கள் ஹார்மோன் ஆரோக்கியத்தை இயற்கையாகவே ஆதரிக்க உதவும் சில உணவுகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: சம்மர் சீசன் ஸ்டார்ட் ஆயிடுச்சி! ஹெல்த்தியா இருக்க கட்டாயம் நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இயற்கையாகவே ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கக்கூடிய கோடைக்கால உணவுகள்

ஹார்மோன் ஏற்ற தாழ்வுகளை சரிசெய்ய முயற்சிப்பவர்கள், கோடைக்கால உணவில் சில உணவுகளைச் சாப்பிடுவது உடலை நன்றாக உணர வைக்க தேவையான சிறிய மாற்றங்களாக இருக்கலாம்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீரை அருந்துவது கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது ஹார்மோன் சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள காரமயமாக்கல் விளைவுகள், உடலில் அமிலத்தன்மையைக் குறைக்கவும், உட்புறமாக விஷயங்களை நிலையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கோண்ட் கதிரா

தாவரத்தின் பிசின் என்றழைக்கப்படும் ஒரு வகையான மூலிகை கோந்து கதிரா என்றழைக்கப்படுகிறது. இது இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிபுணரின் கூற்றுப்படி, இது வீக்கத்தைக் குறைத்து உயவுத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மூட்டுகளை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

ஜல்ஜீரா

கோடைக்காலத்திற்கு மிகவும் பிடித்தமான ஜல்ஜீரா ஆனது வயிற்றை இலகுவாக வைக்க உதவுகிறது. அவ்வாறு புதினா, சீரகம் மற்றும் கருப்பு உப்பு போன்றவற்றின் கலவையானது வாயு மற்றும் வயிற்று உப்புசத்தைக் குறைப்பதில் நன்றாக வேலை செய்கிறது. இது குடல் மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சோளம்

சோளம் ஆனது பசையம் இல்லாத ஒரு தானியமாகும். இதில் நல்ல அளவிலான புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீண்ட நேரம் நிரம்பியதாக உணர உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு அல்லது தைராய்டு கவலைகள் உள்ளவர்களுக்கு இது முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சம்மரில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாக உங்க டயட்ல சேர்க்க வேண்டிய ஒரு சூப்பர் ஃபுட் இதோ

மோர்

இந்த புரோபயாடிக் பானமானது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறை ஒன்றாக இணைந்திருப்பதால், ஒரு கிளாஸ் மோர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தி, உடலுக்கு மிகவும் தேவையான குளிர்ச்சியைத் தருகிறது.

தர்பூசணி

தர்பூசணி பழமானது 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். குறிப்பாக, வெப்பம் அதிகமாக இருக்கும் போது இது ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை செல்லுலார் மட்டத்தில் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடி, உடலை குளிர்விக்க உதவுகிறது. மேலும் இவை சிறந்த ஹார்மோன் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.

துளசி விதைகள்

துளசி விதைகளில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை மென்மையாக்குவதன் மூலம் மலச்சிக்கலை எளிதாக்குகிறது. ஹார்மோன் முகப்பரு அல்லது PCOS நோயைக் கையாள்பவர்கள், அவர்களின் ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கக் கூடிய மற்றும் வீக்கத்தைத் தணிக்கக்கூடிய தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை துளசி விதைகள் கொண்டுள்ளது.

மாம்பழம்

மாம்பழம் சுவையானது மட்டுமல்லாமல், வைட்டமின் ஏ நிறைந்த பழமாகும். இது ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை ஆதரிக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்க உதவுகிறது. எனினும், இதை அதிகளவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஜாமுன்

ஜாமூன் அல்லது இந்திய ப்ளாக்பெர்ரி ஆனது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. இதில் உள்ள சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை இரண்டுமே பெரும்பாலும் ஹார்மோன் கோளாறுகளுடன் தொடர்புடையவையாகும்.

குல்கந்து

இனிப்பு ரோஜா இதழைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் குல்கந்து வெறும் சுவையானது மட்டுமல்லாமல், இது அமைப்பை குளிர்விக்க உதவுகிறது. இவை நரம்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது. நிபுணரின் கூற்றுப்படி, இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுகிறது. இது சிறந்த ஹார்மோன் சமநிலைக்கு ஒரு இயற்கை துணைப் பொருளாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சம்மரில் தயிருடன் மக்கானாவை சேர்த்து சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

இந்த காரணங்களுக்காக நீங்கள் கிவியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..

Disclaimer