What breakfast is good for hormone balance: நம் அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். குறிப்பாக, காலை உணவில் நாம் மிகவும் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில், சரியான காலை உணவுடன் நாளைத் தொடங்குவது நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக ஹார்மோன் சமநிலையைப் பொறுத்தவரை, சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காலையில் ஊட்டச்சத்து நிறைந்த, அழற்சி எதிர்ப்பு உணவுகளை உட்கொள்வது இன்சுலின், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முக்கிய ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே சமயம், ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுவதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்மோன் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும் மூன்று காலை உணவு விருப்பங்களைப் பகிர்ந்துள்ளார். இவை சுவையுடன் கூடிய பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான குடல் வேண்டுமா? அப்படியெனில் இந்த காலை உணவுகளை தவிர்க்கவும்! நிபுணர் அறிவுரை..
ஹார்மோன் சமநிலைக்கு உதவும் அழற்சி எதிர்ப்பு நிறைந்த காலை உணவுகள்
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஹார்மோன் சமநிலைக்கான சிறந்த 3 அழற்சி எதிர்ப்பு காலை உணவு யோசனைகள்” என்று தொடங்கி வீக்கத்தைக் குறைக்க உதவும் உணவுகளைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு கப் நட்ஸ் மற்றும் விதைகளுடன் கூடிய ராகி (Ragi Bowl with Nuts and Seeds)
ராகியில் உள்ள இரும்புச்சத்துக்கள் (சோர்வை எதிர்த்துப் போராட), கால்சியம் (மாதவிடாய் ஆரோக்கியத்தை ஆதரிக்க), இயற்கையாகவே மனநிலையை உயர்த்தும் ஒரு அமினோ அமிலமான டிரிப்டோபானையும் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் நிறைந்த பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகளைச் சேர்க்கலாம். இந்த ஊட்டச்சத்துக்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜனுக்கு இடையிலான முக்கியமான சமநிலையை பராமரிக்க உதவுகின்றன.
செய்முறை
முதலில் கால் கப் ராகியை அரை கப் தண்ணீரில் மென்மையாகும் வரை வேகவைக்க வேண்டும்.
இதில் விரும்பினால் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை மற்றும் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
பின்னர் வறுத்த நட்ஸ் மற்றும் விதைகளை மேலே சேர்ப்பது சுவை மற்றும் கூடுதல் ஊட்டச்சத்துக்களைத் தருகிறது.
ஆம்லா சட்னியுடன் முருங்கை தினை அடை (Moringa Millet Chilla with Amla Chutney)
நிபுணர் கூறிய ரெசிபிகளில் அடுத்ததாக ஆம்லா சட்னியுடன் முருங்கை தினை அடை அமைகிறது. இது மற்றொரு லேசான மற்றும் சக்திவாய்ந்த தேர்வாகும். முருங்கையில் குர்செடின் மற்றும் ஐசோதியோசயனேட்டுகள் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைத்து இன்சுலின் சமநிலையை மேம்படுத்தும் சேர்மங்கள் ஆகும். முருங்கையை நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ள குறைந்த கிளைசெமிக் தானியமான தினையுடன் இணைப்பது, தைராய்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில், நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
மேலும், இதற்கு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து ஆம்லா சட்னி தயார் செய்யலாம். இதன் மூலம் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் கிடைக்கப்பெறும். இவை அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஈஸ்ட்ரோஜனை நச்சு நீக்கவும் உதவுகிறது.
செய்முறை
சட்னியைக் கலந்து, பஜ்ரா மற்றும் மோரிங்காவுடன் ஒரு மெல்லிய மாவை உருவாக்கி, அதை ஒரு பான்கேக் போல சமைத்து சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் உங்க பிரேக்ஃபாஸ்டில் ஓட்ஸ் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - இலவங்கப்பட்டை பான்கேக்குகள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பான்கேக்குகள் திருப்திகரமானதாகவும், ஆரோக்கியமான தேர்வாகவும் அமைகிறது. இதில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். இது PCOS போன்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உள்ள பெண்களுக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.
View this post on Instagram
செய்முறை
வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை மசித்து அதில் பாதாம் பால், ஓட்ஸ் மாவு மற்றும் இலவங்கப்பட்டை போன்றவற்றைச் சேர்க்கலாம். பின் இதில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை பான்கேக்கை சமைக்கலாம்.
நிபுணர் தனது பதிவில் இறுதியாக “இந்த உணவுகள் பசியைப் பூர்த்தி செய்வதை விட அதிக நன்மைகளைத் தருகின்றன. இவை வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன. காலையில் சிந்தனையுடன் முடிவுகளை எடுப்பது பெண்கள் தங்கள் ஆற்றல், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நாள் முழுவதும் பொது நல்வாழ்வைப் பராமரிக்க உதவும்” என்று கூறியுள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: வயிறு உப்புசத்தை ஏற்படுத்தாத காலை உணவுகள் என்னென்ன தெரியுமா? மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ
Image Source: Freepik