Doctor Verified

மாதவிடாய் வலி தாங்க முடியலையா? நிபுணர் கூறும் இயற்கை தீர்வுகள் இதோ..

பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று period cramps. மாத்திரை இல்லாமல் இதை குணப்படுத்தும் இயற்கை முறைகளை டாக்டர் பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பரிந்துரையை அறிய பதிவை முழுமையாக படிக்கவும். 
  • SHARE
  • FOLLOW
மாதவிடாய் வலி தாங்க முடியலையா? நிபுணர் கூறும் இயற்கை தீர்வுகள் இதோ..


பெண்கள் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் முக்கிய சிரமங்களில் ஒன்று வயிற்று வலி (period cramps) ஆகும். பலர் உடனடி நிவாரணம் பெற மருந்துகள் எடுப்பது வழக்கம். ஆனால், மருந்துகளை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதைத் தவிர்த்து, சில எளிய இயற்கை முறைகள் மூலம் வலியை குறைக்கலாம் என மருத்துவர் பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் நேரத்தில் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது தெரிஞ்சிக்கோங்க..

மாதவிடாய் வலியை குறைக்கும் இயற்கை வழிகள்..

மக்னீசியம் நிறைந்த உணவுகள்

மாதவிடாய் நேரத்தில் மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, வயிறு வலி மற்றும் பிடிப்பை குறைக்க உதவும். இதற்கு வாழைப்பழம், பூசணி விதைகள், கீரைகள் போன்ற வற்றை உட்கொள்ளலாம். இவை தசைகளை தளரச் செய்து வலியை குறைக்கும்.

home-remedies-to-reduce-periods-pain-in-tamil-01

மூலிகை டீ

மாதவிடாய் பிடிப்பில் இருந்து நிவாரணம் பெருவதற்கு, மூலிகை டீ, ஒரு சிறந்த தேர்வு என்றே சொல்லலாம். மேலும் இவை மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கலாம். இதற்காக நீங்கள் சீமை சாமந்தி டீ (Chamomile Tea)மற்றும் இஞ்சி டீ போன்றவை குடிக்கலாம். இதில் anti-inflammatory பண்புகள் உள்ளன. இவை மாதவிடாய் வலியை தணிக்கின்றன.

ஒமேகா-3

மாதவிடாயின் போது ஒமேகா 3 நிறைந்த உணவுகள் கட்டாயம் உங்கள் தட்டிக் இடம்பெற்றிருக்க வேண்டும். மீன், ஆளி விதைகள், அக்ரோட் போன்றவை ஒமேகா 3-ன் சிறந்த மூலங்கள். இவை ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தி மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.

ஹீட் பேட் (Heat Pad)

ஹீட் பேட் என்பது மின்சாரம் மூலம் சூடேற்றப்படும் அல்லது சூடான நீர் நிரப்பப்படும் ஒரு கருவியாகும். இது தசைகள், மூட்டுகள் மற்றும் மாதவிடாய் பிடிப்புகள் போன்ற பல்வேறு வகையான வலிகள் மற்றும் அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. மாதவிடாய் நேரத்தில், வலிமிகுந்த இடங்களில் இவற்றை வைத்தால், இரத்த ஓட்டம் சீராகி வலி விரைவில் குறையும்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் சந்திக்கும் இந்த பிரச்சனைகளுக்கு நிபுணர் சொன்ன சிம்பிள் ரெமிடி இதோ

இடுப்பு தசைகளுக்கான பயிற்சி

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, யோகா, லேசான உடற்பயிற்சி ஆகியவை இடுப்பு தசைகளை தளரச் செய்து மாதவிடாய் வலியை கட்டுப்படுத்த உதவும்.

what-causes-a-period-to-come-early-02

அத்திப்பழம்

மாதவிடாயின் போது பெண்கள் சோர்வாக உணர்வது வழக்கம். இது போன்ற சூழ்நிலையில் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சுறுசுறுப்பாக உணர வைக்கும். மேலும் மாதவிடாய் இரத்த போக்கை சீர்படுத்தும். இதற்காக நீங்கள் அத்திப்பழத்தை தேர்வு செய்யலாம்.

பெருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை

மாதவிடாய் நேரத்தில் அதீத வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், பெருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை நீர் அல்லது டீ குடிக்கலாம். மேலும் இவற்றை உணவில் சேர்க்கலாம். இவை தசை வலியை குறைத்து, வீக்கத்தையும் குறைக்கும்.

View this post on Instagram

A post shared by Dr. Pal's NewME (@dr.pals_newme)

இறுதியாக..

“period cramps-ஐ மருந்துகளின் மீது மட்டும் சார்ந்து விடாமல், இந்த இயற்கை முறைகளை முயற்சி செய்தால் பெண்களுக்கு அதிக நிம்மதி கிடைக்கும். அதே சமயம், வலி மிக அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பெறுவதும் அவசியம்” என்று டாக்டர் பால் குறிப்பிட்டுள்ளார்.

{Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான உடல்நலம் தொடர்பான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகள் எல்லோருக்கும் பொருந்தும் என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவரின் உடல்நிலை வேறுபடும் என்பதால், தொடர்ச்சியான அல்லது கடுமையான மாதவிடாய் வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.}

Read Next

இளமையாக இருக்க வீட்டிலேயே தயார் செய்த இந்த வயதான எதிர்ப்பு பானத்தை குடிங்க.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்