Expert

இளமையாக இருக்க வீட்டிலேயே தயார் செய்த இந்த வயதான எதிர்ப்பு பானத்தை குடிங்க.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

How to make anti aging drink at home: நவீன வாழ்க்கைமுறையில் கடைபிடிக்கும் பழக்கங்கள், எடுத்துக் கொள்ளும் உணவுகள் போன்றவை நமக்கு பாதிப்புகளையே தருகிறது. இதில் நாம் சீக்கிரம் வயதாவதும் அடங்கும். இவ்வாறு சீக்கிரம் வயதாவதைக் குறைக்க, நாம் வீட்டிலேயே தயாரிக்க வேண்டிய பானம் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
இளமையாக இருக்க வீட்டிலேயே தயார் செய்த இந்த வயதான எதிர்ப்பு பானத்தை குடிங்க.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ


What to drink to look younger naturally: இன்றைய பிஸியான காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆம். உண்மையில், போதிய ஊட்டச்சத்து இல்லாமை, போதுமான பராமரிப்பு இல்லாதது போன்றவற்றால் சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பலருக்கும் சிறிய வயதிலும் சருமம் முதுமை வயது போலத் தோற்றமளிக்கிறது. இது போன்று விரைவாக வயதான தோற்றம் பெற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

முன்கூட்டிய வயதானதற்கான காரணங்கள்

ஹெல்த்லைன் தளத்தில் குறிப்பிட்ட படி, முன்கூட்டியே சருமம் பொலிவிழந்து வயதான தோற்றம் பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. புகைபிடிப்பது, சூரிய ஒளி கதிர்வீச்சு, மோசமான உணவுமுறை, தூக்கமின்மை, ஆல்கஹால் அருந்துவது, காஃபின் உட்கொள்ளல், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளால் நாம் முன்கூட்டியே வயதாவது போல தோற்றமளிக்கக் காரணமாகிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்த வயதான செயல்முறையை மெதுவாக்க பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அதில் ஒன்றாக, சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பானமாகும். Anti aging பானம் என்றழைக்கப்படும் இந்த வயதான செயல்முறையை மெதுவாக்கும் ரெசிபி குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நீண்ட நாள் இளமையா வாழணுமா? இயற்கையாகவே கிடைக்கும் இந்த சப்ளிமெண்ட்ஸ் ட்ரை பண்ணுங்க

நிபுணரின் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் கூறியதாவது, “அனைவருக்குமே முதுமை என்பது தவிர்க்க முடியாததாகும். ஆனால், வயதாகும் வேகம் அப்படி அல்ல. நெல்லிக்காய், மாதுளை, கருப்பு திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பழங்களின் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு வயதான செயல்முறையை மெதுவாக்கலாம்” என தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “தினமும் போதுமான பழங்கள் அல்லது காய்கறிகளை உட்கொள்ளாதவர்களுக்கு இந்த சாறு மிகவும் உதவியாக இருக்கும்” எனக் கூறி வயதான செயல்முறையை மெதுவாக்குவதற்கு வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய பானம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் பானம் தயாரிப்பதற்கான செயல்முறையைக் காணலாம்.

வயதான செயல்முறையை மெதுவாக்கும் பானம்

தேவையான பொருள்கள்

  • ஆம்லா - 1 (சிறியது)
  • கருப்பு திராட்சை - 1 கப்
  • மாதுளை - 1 கப்
  • சாட் மசாலா - சுவைக்காக
  • கருப்பு உப்பு - சுவைக்காக

தயாரிக்கும் முறை

  • முதலில் நெல்லிக்காயிலிருந்து விதையை நீக்கி, நறுக்கி, அதன் சாற்றை வடிகட்ட வேண்டும்.
  • பின்னர், கருப்பு திராட்சை மற்றும் மாதுளையை ஒரு ஜூஸரைப் பயன்படுத்தி சாறு தயார் செய்து கொள்ளலாம்.
  • இந்த இரண்டு சாறுகளையும் சேர்த்து, சுவைக்காக ஒரு சிட்டிகை சாட் மசாலா மற்றும் கருப்பு உப்பு சேர்த்து குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த எளிய உணவுகள் உங்களை பல வருடங்கள் இளமையாக வைத்திருக்கும்.. உங்கள் முகத்தில் ஒரு சுருக்கம் கூட வராது.!

நிபுணரின் டிப்ஸ்

நிபுணர் இந்த பானம் செய்முறை மட்டுமல்லாமல், அதிகபட்ச நன்மைகளைப் பெற, இந்த சாறு தயாரித்த 20 நிமிடங்களுக்குள் இதைக் குடிக்க பரிந்துரைக்கிறார்.

மேலும் இது போன்ற அடர் நிற பழங்கள் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. இவை செல்களை வளர்க்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வயதான அறிகுறிகளை தாமதப்படுத்தவும் உதவுகிறது என நிபுணர் தெரிவித்தார்.

View this post on Instagram

A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)

வயது எதிர்ப்பு பானத்தின் நன்மைகள்

  • ஆய்வின் படி, ஆம்லாவில் டானின்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட பிற சேர்மங்களும்  உள்ளது. இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
  • திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வயதான செயல்முறையை மெதுவாக்கவும் உதவுகிறது.
  • மாதுளை உட்கொள்வது ஃப்ரீரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

நிபுணரின் கருத்துப்படி, இந்த பானத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்தலாம். எனினும், புதிய பொருள்களைத் தங்கள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக, நிபுணர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: 60 வயதிலும் ஃபிட்டா மாஸ் காட்டனுமா? உங்க உணவு தேர்வு இப்படி இருக்கணும்.! 

Image Source: Freepik

Read Next

7 நாள்கள் 7 பானங்கள்.. தைராய்டு ஆரோக்கியத்திற்கு சம்மரில் குடிக்க வேண்டிய பானங்கள் இதோ

Disclaimer