Refreshing summer drinks to support thyroid health naturally: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தைராய்டு பிரச்சனை அமைகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தைராய்டு பெரும்பாலான மக்கள் நினைப்பதை விட மிகப் பெரிய பங்கை வகிக்கிறது. தைராய்டு ஆனது கழுத்தில் உள்ள சிறிய, பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் "ஆற்றல் மேலாளர்" போன்றது. இது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மனநிலை மற்றும் எடையைப் பாதிக்கிறது. மேலும் இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
பெரும்பாலும் இது நன்றாக வேலை செய்யும் போது, அதை கவனிக்கவே முடியாது. ஆனால், இது செயல்படாமல் (ஹைப்போ தைராய்டிசம்) அல்லது அதிகமாக செயல்படாமல் (ஹைப்பர் தைராய்டிசம்) இருந்தால் உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றும். இதனால் சோர்வு, பதட்டம், எதிர்பாராத விதமாக எடை அதிகரிப்பு அல்லது இழப்பு அல்லது சருமம் மற்றும் முடியில் மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். இதில் நல்ல செய்தி என்னவெனில், தைராய்டு ஆரோக்கியம் என்பது எளிமையான, அன்றாட பழக்கவழக்கங்களுடன் ஆதரிக்கக்கூடியதாகும்.
தைராய்டு ஆரோக்கியத்திற்கு எளிய, வீட்டில் தயாரிக்கப்பட்ட சமையல் குறிப்புகளைக் கையாளலாம். அதன் படி, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைராய்டு ஆரோக்கியத்தை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் ஏழு எளிதாக தயாரிக்கப்பட்ட கோடைகால பானங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு + முடி உதிர்வு.. இரண்டுக்கும் ஒரே தீர்வு இந்த Magic Drinks தான்..
நிபுணரின் கருத்து
ஊட்டச்சத்து நிபுணர் பத்ரா அவர்கள், "இந்த எளிய, அறிவியல் ஆதரவு பானங்கள் மூலம் உங்கள் தைராய்டை இயற்கையாகவே ஆதரிக்கவும்" என்று அவர் தலைப்பில் எழுதினார்.
தேங்காய் நீர் & கடற்பாசி ஸ்மூத்தி
அயோடின், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த ஸ்மூத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கவும் உதவுகிறது. இவை குடல் ஆதரவைச் சேர்த்து வீக்கத்தைக் குறைக்கிறது.
செய்முறை: இந்த ஸ்மூத்தி தயார் செய்ய 150 மில்லி தேங்காய் தண்ணீர், 1/2 தேக்கரண்டி ஊறவைத்த நறுக்கிய கடற்பாசி, 1/2 வாழைப்பழம், 1 தேக்கரண்டி சியா விதைகள், 3-4 புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இதை புதிதாக எடுத்துக் கொள்ளலாம்.
வோக்கோசு - எலுமிச்சை மூலிகை தேநீர்
வோக்கோசு கல்லீரலை நச்சு நீக்கவும், T4-T3 மாற்றத்திற்கும் உதவுகிறது. அதே சமயம், எலுமிச்சை ஆக்ஸிஜனேற்றிகளை சேர்க்கிறது.
செய்முறை: 200 மில்லி சூடான நீரில் 1 தேக்கரண்டி வோக்கோசு மற்றும் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை தோலை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடிகட்டி, குளிர்ந்து, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, குளிர்வித்து எடுத்துக் கொள்ளலாம்.
ப்ரோக்கோலி முளைகள் மற்றும் ஆப்பிள் சைடர் பானம்
ப்ரோக்கோலி முளைகளில் உள்ள சல்ஃபோராபேன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. அதே சமயம், ஆப்பிள் சைடர் வினிகர் செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் வெள்ளரி நம்மை நீரேற்றமாக வைத்திருக்கிறது.
செய்முறை: 1 தேக்கரண்டி ப்ரோக்கோலி முளைகள் (அல்லது 1/2 தேக்கரண்டி தூள்), 50 மில்லி வெள்ளரி சாறு, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் 100 மில்லி தண்ணீரைக் கலக்க வேண்டும். பின்னர் இதை புதிதாக குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும் பானங்கள் இங்கே..
குளிர்ந்த மஞ்சள்-இஞ்சி பால்
இந்த அழற்சி எதிர்ப்பு பானம் அருந்துவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலை ஆற்ற உதவுகிறது.
View this post on Instagram
செய்முறை: 150 மில்லி பாதாம் பாலில், 1/2 தேக்கரண்டி மஞ்சள், 1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஒரு சிறிய இலவங்கப்பட்டை குச்சியை சேர்த்து சூடாக்க வேண்டும். பின் குளிர்வித்து விரும்பினால் இனிப்புக்கு வெல்லம் மற்றும் ஐஸ் சேர்த்து பரிமாறலாம்.
வெந்தயம் - வெள்ளரி தயிர் லஸ்ஸி
இந்த புரோபயாடிக் நிறைந்த பானம் செரிமானம், நீரேற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சமநிலையை ஆதரிக்க உதவுகிறது.
செய்முறை: 1/2 கப் தயிரை 1/2 கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இதில் 2 தேக்கரண்டி துருவிய வெள்ளரி, 1 தேக்கரண்டி வெந்தயம், 1/2 தேக்கரண்டி சீரகப் பொடி மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து கிளறலாம். பின் இதை குளிர்ச்சியாக பரிமாறலாம்.
இலவங்கப்பட்டை-தேங்காய் நீர் புத்துணர்ச்சி
இந்த பானம் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது T3 ஹார்மோன்களை ஆதரிக்கிறது மற்றும் நீரேற்றமாக வைத்திருக்கிறது.
செய்முறை: 150 மில்லி தேங்காய் நீரில் ஒரு இலவங்கப்பட்டை குச்சியை இரவு முழுவதும் ஊற்ற வேண்டும். பின், இதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி ஊறவைத்த துளசி (சப்ஜா) விதைகளைச் சேர்க்க வேண்டும். பிறகு இந்த பானத்தை குளிர்ச்சியாகப் பரிமாறலாம்.
கருஞ்சீரக விதைகள் - மாதுளை பானம்
இது செயலில் உள்ள T3 அளவை மேம்படுத்துகிறது. மேலும் தைராய்டு ஆன்டிபாடிகளைக் குறைக்க உதவுகிறது.
செய்முறை: 100 மில்லி மாதுளை சாற்றை 50 மில்லி தண்ணீரில் கலக்க வேண்டும். மேலும் இதில் 1/2 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட கருஞ்சீரக விதைகள் மற்றும் 4-5 புதினா இலைகளைச் சேர்க்கலாம். பின்னர் இதை குளிர்ச்சியாகப் பரிமாறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு பிரச்னையை நிர்வகிக்க இந்த பானங்களை முயற்சிக்கவும்..
Image Source: Freepik