இரவு தூங்கும் முன்பாக இத மட்டும் செய்யுங்க.. இந்த இரண்டு முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

Bedtime routine to reverses aging and inflammation: இரவு நாம் தூங்கும் முன்பாக செய்யும் சில பழக்கங்களின் உதவியுடன் வீக்கத்தைக் குறைப்பதுடன், வயது அதிகரிக்கும் பிரச்சனையையும் குறைக்கலாம். இதில் வீக்கம் குறைய மற்றும் வயது அதிகரிப்பைத் தடுக்க இரவில் தூங்கும் முன்பு செய்ய வேண்டிய சில பழக்கங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இரவு தூங்கும் முன்பாக இத மட்டும் செய்யுங்க.. இந்த இரண்டு முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்


Night time routine to reduce inflammation and slow aging: எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லாமல், நீண்ட காலம் ஆரோக்கியமாக மற்றும் இளமையாக வாழ்வது என்பது பலரின் விருப்பமாகும். இதற்கு பெரும்பாலானோர் தங்களது ஆரோக்கியமான காலை உணவுகளில் தங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்க வயதான எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை வாழ்வதற்கான உண்மையான ரகசியம், ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்வதற்கு முந்தைய இறுதி மணிநேரங்களில் மறைந்திருக்கும் பழக்கங்களைக் குறிக்கிறது.

நீண்ட கால ஆயுளைப் பெறவும், வீக்கத்தைக் குறைக்கவும் இரவு நேரத்தில் சில பழக்கங்களைக் கையாளலாம். இது குறித்து முன்னாள் கிளீவ்லேண்ட் கிளினிக்கின் Functional Medicine Physician, IFMCP மருத்துவர் அன்சூல் குப்தா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் காண்போம்.

மருத்துவர் பகிர்ந்த தகவல்

மருத்துவர் கூறியதாவது, “மிக மோசமான விஷயம் என்னவெனில், 90% மக்கள் மாலை நேரங்களில் தங்கள் ஆயுட்காலத்தைக் குறைக்கும் செயல்களைச் செய்கின்றனர். ஆம். இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியைத் தரும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துள்ளார். மேலும் “உலகளவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்த சமூகங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளாலும் ஆதரிக்கப்படுகிறது. இல்லை, இதற்கு விலையுயர்ந்த சப்ளிமெண்ட்ஸ் அல்லது எந்த பயோஹேக்கிங் கேஜெட்களும் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளும் தேவையில்லை.” என்பதை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நைட் தூங்கும் முன் டேட்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது தெரிஞ்சா நீங்களும் சாப்பிடுவீங்க

இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பின்பற்றும் ஒரு எளிய அறிவியல் சடங்குகளின் மூலம் ஆயுட்காலத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கலாம். அவர் கூறியதாவது,”இன்று நான் உங்களுடன் இந்த மாலை சடங்கைப் பகிர்ந்து கொள்கிறேன், இது எனது பல வாடிக்கையாளர்களின் வீக்கத்தைக் குறைக்கவும், தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வயதான எதிர்ப்பு நன்மைகளையும் வழங்கவும் உதவியது. இறுதியில், படுக்கைக்கு முன் உட்கொள்ளும் போது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், உங்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், உங்கள் உடல் பழுதுபார்க்கும் நிலைக்குச் செல்லவும் உதவும் இந்த எளிய வயதான எதிர்ப்பு பானத்தின் மூலம் நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன்.” என்று பகிர்ந்துள்ளார்.

மாலை நேர நடைமுறைகள் ஏன் மிகவும் முக்கியம்?

பலரும் ஆரோக்கியமான காலை நடைமுறைகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், புதிய ஆராய்ச்சியில் கூறப்படுவது என்னவெனில் உடலின் பழுதுபார்ப்பு மற்றும் குணப்படுத்துதலின் பெரும்பகுதி இரவில் நடக்கக்கூடியதாகும். இதில் இரவில் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இரவில் நம் உடலில் செல்கள் பகலில் ஏற்பட்ட சேதத்தை சுத்தம் செய்கிறது. மூளை அனைத்து நச்சுகளையும் வெளியேற்றும். இது நோயெதிர்ப்பு அமைப்பு மறுசீரமைக்கப்படுகிறது. மேலும் நீண்ட ஆயுள் மரபணுக்கள் சான்றளிக்கப்பட்ட ஒன்று மற்றும் FOX3 மரபணுக்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு மாலை நேர பழக்கங்களைக் கையாளலாம். இது பல்வேறு விஷயங்களில் செயல்படுகிறது. இதன் மூலம் இரவில் குணப்படுத்தும் நிலைக்குச் செல்ல முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: எடையைக் கட்டுப்படுத்த இரவு உணவுக்குப் பிறகு இந்த 4 விஷயங்கள செய்யுங்க போதும்!

வீக்கம் குறைய மாலை நேர பழக்க வழக்கங்கள்

படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்துவது

மருத்துவரின் கூற்றுப்படி, “இரவு 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்தும்போது, அவை வயதான எதிர்ப்பு கூறுகளின் ஆட்டோஃபேஜியைத் தூண்டுகிறது மற்றும் இரவு நேரங்களில் வீக்கத்தை ஏற்படுத்துவதற்கு காரணமான இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கிறது” என்று கூறியுள்ளார்.

அதே சமயம், இரவு உணவில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். எனவே, இரவு உணவு நேரத்தில் அதிக டிரிப்டோபான், புரதம், மெக்னீசியம் உள்ள உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். அதே சமயம், அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் வீக்கத்தை அதிகரிக்கலாம். எனவே பொதுவாக பூசணி விதைகள், பாதாம் மற்றும் இலை கீரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

நீல ஒளி வெளிப்பாட்டைக் குறைப்பது

வீடுகளில் நாம் பயன்படுத்தும் அனைத்து செயற்கை மின்னல்களிலும் நீல ஒளி காணப்படும். இந்த ஒளியானது மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு மெலடோனின் மிகவும் முக்கியமாகும். எனவே மடிக்கணினிகள், மொபைல் போன் போன்ற நீல ஒளியைத் தடுக்க வேண்டும்.

தூக்க சூழலை மேம்படுத்துவது

நீண்ட தூக்கத்தைப் பெற விரும்புபவர்கள் சரியான தூக்க சூழலை மேம்படுத்த வேண்டும். அவரின் கூற்றுப்படி, நம் உடலை குளிர்வித்து, நமது மைய உடல் வெப்பநிலையைக் குறைக்கும்போது தூக்கத்தின் தரம் மற்றும் கால அளவை மேம்படுத்தலாம் எனக் கூறுகிறார். எனவே படுக்கையறையின் வெப்பநிலையைக் குறைத்து குளிர்ச்சியாக்க வேண்டும். இதற்கு படுக்கைக்குச் செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு சூடான குளியல் எடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க தினமும் நைட் தூங்கும் முன் இத மட்டும் செய்யுங்க

இரவு நேரத்தில் பானம் அருந்துவது

உடலில் பழுதுபார்க்கும் நெறிமுறையைத் தூண்டவும், ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லவும் இரவு பானத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு 1 கப் பாதாம் பால் அல்லது தேங்காய் பால் எடுத்துக் கொள்ளலாம். பின்னர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் அரை டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியைப் பயன்படுத்த வேண்டும். பின்னர் ஒரு விருப்பமாக, அரை டீஸ்பூன் பச்சை தேனைச் சேர்க்கலாம்.

இதற்கு பாதாம் பால் அல்லது தேங்காய்ப் பாலை சூடாக்கி, மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து மெதுவாகக் கிளறி, கலவையை படுக்கைக்கு முன்னதாக இதை மெதுவாக உட்கொள்ளலாம். இந்த பானத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் சரியான அளவு மெக்னீசியம், டிரிப்டோபான், அழற்சி எதிர்ப்பு கலவைகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அடாப்டோஜெனிக் மூலிகையை வழங்குகிறது.

உண்மையில், உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்களை, ஒவ்வொரு மாலையும் சரியான சமிக்ஞையை வழங்கினால், உடல் தன்னை சரிசெய்து, தன்னை சரியாக நச்சு நீக்குகிறது. எனவே காலையில் எழுந்திருப்பது புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும், ஆரோக்கியமாகவும், இலகுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மாலை நேர பழக்கங்களைக் கையாள்வதன் மூலம் சில வாரங்களுக்குள் அற்புதமான முடிவுகளைப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Bed Drinks: தூக்கம் வரவில்லையா.? அப்போ இரவில் இதை மட்டும் குடிக்கவும்.!

Image Source: Freepik

Read Next

உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு சிறந்த இயற்கை சப்ளிமெண்ட்கள் எது தெரியுமா? மருத்துவர் சொன்னது

Disclaimer