Best natural remedies for inflammation in the body: வீக்கம் என்பது பல்வேறு நாள்பட்ட நோய்களைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. இதை நிவர்த்தி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கணிசமாக மேம்படுத்தலாம். இந்நிலையில், இயற்கை சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உணவுமுறை மாற்றங்கள் மூலம் வீக்கத்தைக் குறைப்பதற்கான நடைமுறை முறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் வீக்கத்தை நிவர்த்தி செய்வதன் மூலம் நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஏனெனில் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு வீக்கம் ஒரு மூல காரணமாக அமைகிறது.
வீக்கத்தைக் குறைப்பதற்கான இயற்கை சப்ளிமெண்ட்ஸ்கள் குறித்து மருத்துவர் அன்சூல் குப்தா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, “உணவு மாற்றங்களுக்குப் பிறகு வீக்கத்தை எதிர்த்துப் போராட ஒரு முறையாக இயற்கை சப்ளிமெண்ட்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தின் விளைவுகளைத் தணிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வீக்க மேலாண்மைக்கு அவசியமான குடல் ஆரோக்கியம் குறித்த கவனம் செலுத்துவது அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: லைஃப் லாங் மூட்டு வலி வராம இருக்க உங்க டயட்ல கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் இதோ
மேலும் அவரின் கூற்றுப்படி, “குடல் ஆரோக்கியம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சமாகக் கருதப்படுகிறது. பல நாள்பட்ட நோய்களுக்கான மூல காரணமான வீக்கத்தைக் கணிசமாகக் குறைக்க இயற்கை சப்ளிமெண்ட்ஸ்கள் உதவுகிறது. எனினும், உடல்நலப் பராமரிப்பில் திறம்பட பயன்படுத்துவதற்கு அதன் வடிவங்கள் மற்றும் அளவைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.” என்று கூறுகிறார்.
வீக்கம் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வீக்கத்தை நிவர்த்தி செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்த வழிவகுக்கிறது.
வீக்கத்தைக் குறைக்க உதவும் இயற்கை சப்ளிமெண்ட்ஸ்கள்
மருத்துவரின் கூற்றுப்படி, ஒமேகா-3, வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் போன்ற சப்ளிமெண்ட்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குர்குமின், போஸ்வெலியா மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்றவை பயனுள்ள அழற்சி எதிர்ப்பு சப்ளிமெண்ட்கள் ஆகும். இது தவிர, ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைப்பதற்கு குடல் ஆரோக்கியம் மற்றும் புரோபயாடிக்குகள் மிக முக்கியமானவையாகும்.
அவரின் கூற்றுப்படி, சப்ளிமெண்ட் துறையில் கட்டுப்பாடுகள் இல்லாததால் தயாரிப்பு தரத்தை ஆராய்வது மிகவும் முக்கியமானதாகும். பயனுள்ள சப்ளிமெண்ட்ஸ்களை உறுதி செய்ய, பயனர்கள் புகழ்பெற்ற பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
மருத்துவர் குப்தா அவர்கள் கூறியதாவது, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கவும் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. இது முதன்மையாக கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படுகிறது. இவை உகந்த ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாகும்.
போதுமான ஒமேகா-3 உட்கொள்ளலைப் பெற வாரம் 2 முதல் 3 முறை கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்வது அவசியமாகும். இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனினும், சில மீன்களில் அதிக பாதரச அளவுகள் உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கலாம். EPA மற்றும் DHA ஆகியவை ஒமேகா-3களின் மிகவும் நன்மை பயக்கும் வடிவங்கள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: வீக்கத்தைக் குறைக்க நீங்க தினமும் செய்ய வேண்டிய பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?
மெக்னீசியம்
இது 300 க்கும் மேற்பட்ட நொதி செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் மெக்னீசியம் குறைபாடு கொண்டவர்கள் ஆவர். அனைத்து மெக்னீசியம் சப்ளிமெண்ட்களும் பயனுள்ளதாக இல்லை.
இதில் மெக்னீசியம் கிளைசினேட் மற்றும் சிட்ரேட் போன்ற வடிவங்கள் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது. மருந்தளவு பரிந்துரைகள் பொதுவாக ஒரு நாளைக்கு 400 முதல் 600 மில்லிகிராம் வரை இருக்கலாம்.
வைட்டமின் டி
போதுமான வைட்டமின் டி பெறுவது உடலில் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியமாகும். எனினும், சூரிய ஒளி இல்லாததால் போதுமான அளவு வைட்டமின் டி பெறுவதில்லை. வைட்டமின் டி சப்ளிமெண்டை கொழுப்பு நிறைந்த உணவு அல்லது ஒமேகா சப்ளிமெண்டுடன் இணைப்பது உறிஞ்சுதலை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் டி-ஐ அதிகரிக்க வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் டி-யை செயல்படுத்துவதில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வைட்டமின் டி சப்ளிமெண்டுகளுடன் போதுமான மெக்னீசியம் உட்கொள்ளலை உறுதி செய்வது அவசியமாகும்.
மற்ற சப்ளிமெண்ட்கள்
- மஞ்சளில் உள்ள செயலில் உள்ள மூலப்பொருளான குர்குமின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும்.
- பண்டைய ஆயுர்வேத மருந்தான போஸ்வெல்லியா, கீல்வாதம் மற்றும் கிரோன் நோய் போன்ற நிலைகளில் வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
- சிவப்பு ஒயினில் காணப்படும் ரெஸ்வெராட்ரோல் என்ற ஆக்ஸிஜனேற்றிகள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரோபயாடிக்குகள்
- காலையில் ஒமேகா-3 மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை அதிகரிக்கிறது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
- மக்னீசியம் உட்கொள்ளல் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும், சில நொதிகளை செயல்படுத்தவும் படுக்கை நேரத்தில் எடுத்துக் கொள்வது சிறந்தது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கவும் உதவுகிறது.
- குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க இரவு உணவோடு புரோபயாடிக்குகளை உட்கொள்ளலாம். இவை வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
நல்ல வாழ்க்கை முறை முறை மாற்றங்களின் மூலம் நாள்பட்ட நிலைமைகளை நிர்வகிக்கலாம். எனினும், வீக்கத்திற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனவே அன்றாட வாழ்வில் புதிய மாற்றங்களைச் செய்வதற்கு முன்பாக மருத்துவர் அல்லது நிபுணரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மூட்டு வலியை இயற்கையாகவே போக்க இந்த ஹெர்பல்ஸ் உதவும்! இதை எவ்வாறு பயன்படுத்தலாம்?
Image Source: Freepik