
Natural beverage to fight inflammation and support a healthy gut: பொதுவாக வீக்கம் என்பது உடலின் திசுக்களில் நீர்மம் சேர்வதால் ஏற்படக்கூடிய அசாதாரண பெரிதாக்கத்தைக் குறிக்கிறது அல்லது வயிற்றில் ஏற்படக்கூடிய வாயு நிறைந்த உணர்வைக் குறிக்கலாம். இது குறிப்பிட்ட இடத்தில் அல்லது உடல் முழுவதும் பரவி காணப்படலாம். காயம், தொற்று, ஒவ்வாமை அல்லது சில உணவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் வீக்கம் ஏற்படலாம். இது தவிர, உடலுக்கு நல்ல செரிமானம் மிகவும் அவசியமனதாகக் கருதப்படுகிறது.
நல்ல செரிமானத்திற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர, புரோபயாடிக் நிறைந்த உணவுகளான தயிர் உட்கொள்வது, சீரான உணவை உட்கொள்வது, உணவை நன்கு மென்று சாப்பிடுவது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை நல்ல செரிமானத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், நல்ல செரிமானம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பது என இரண்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் சேர்க்க வேண்டிய பானங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Joint Pain Remedy: மூட்டு வலி காணாமல் போக இந்த ஒரு டீ குடிங்க போதும்!
வீக்கம் குறைய மற்றும் நல்ல செரிமானத்திற்கான பானம்
நிபுணரின் கூற்றுப்படி, “7 நாள்களில் வித்தியாசத்தை உணரலாம். வீக்கத்தைக் குறைக்க இந்த ஐந்து மூலப்பொருள்கள் கொண்ட ரகசிய பானத்தை முயற்சிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இனிமையான பானம் செரிமானத்தை ஆதரிக்கவும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கவும் ஒரு இயற்கையான வழியாக அமைகிறது.
தேவையான பொருள்கள்
- வெதுவெதுப்பான நீர் - 1 கப்
- புதிய இஞ்சி - ½ தேக்கரண்டி (அல்லது ¼ தேக்கரண்டி உலர்ந்தது)
- மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
- கருப்பு மிளகு - ஒரு சிட்டிகை
- இலவங்கப்பட்டை - ¼ தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி (விரும்பினால், சிறந்த உறிஞ்சுதலுக்கு)
பானம் தயாரிக்கும் முறை
- முதலில் தண்ணீரை சூடாக்க வேண்டும் (கொதிக்க வைக்க வேண்டாம்)
- பின் அதில் மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்றவை தண்ணீரில் கரையும் வரை சூடாக்க வேண்டும்.
- அதன் பிறகு, இந்த நீரை சிறிது குளிர்ந்தவுடன் நெய் சேர்க்கலாம்.
- பின்னர் இதை சூடாக குடிக்க வேண்டும் (இது மாலை அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு மீட்க ஏற்றது).
பானத்தின் நன்மைகள்
நிபுணரின் கருத்துப்படி, இந்த பானத்தில் சேர்க்கப்படும் பொருள்கள் முக்கிய நன்மைகளைத் தருகிறது.
மஞ்சள் (குர்குமின்)
இது ஒரு முக்கிய அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. இதன் இலக்குகள் NF-кВ (முக்கிய அழற்சி பாதை) ஆகும். இதில் உள்ள குர்குமின் குர்குமின் செல்லுலார் மட்டத்தில் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியமா இருக்க நைட் தூங்கும் முன் இந்த ட்ரிங்ஸ் மட்டும் குடிச்சிட்டு படுங்க
இஞ்சி
இது அழற்சிக்கு எதிரான சைட்டோகைன்களைக் குறைக்கிறது (IL-1B, TNF-a, COX-2). மேலும் இது செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவுகிறது.
கருப்பு மிளகு (பைப்பரின்)
இது குர்குமின் உறிஞ்சுதலை 2000% வரை அதிகளவு அதிகரிக்கிறது. ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்ப்பதன் மூலம் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
View this post on Instagram
சிலோன் இலவங்கப்பட்டை
இது பாலிபினால்கள் நிறைந்ததாகும். மேலும் இது இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்றிகளைச் சேர்க்கிறது. இது பானத்திற்கு இயற்கை இனிப்பைச் சேர்க்கிறது.
நெய் / தேங்காய் எண்ணெய் (விரும்பினால்)
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. குர்குமின் கொழுப்பில் கரையக்கூடியதாகும். இது உறிஞ்சுதல் மற்றும் விளைவை மேம்படுத்துகிறது.
இந்த பானம் உடலை அமைதிப்படுத்த உதவக்கூடிய ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த தேர்வாக அமைகிறது. எனவே வீக்கத்தைக் குறைக்க மற்றும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த இனிமையான பானத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு சிறந்த இயற்கை சப்ளிமெண்ட்கள் எது தெரியுமா? மருத்துவர் சொன்னது
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version