Doctor Verified

நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு தினமும் காலையில் நீங்க பின்பற்ற வேண்டிய வழக்கங்கள்

How to improve gut health naturally: குடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட வாழ்வில் தினமும் காலையில் சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். இதில் குடலை ஆரோக்கியமாக வைக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் காலை நேரத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு தினமும் காலையில் நீங்க பின்பற்ற வேண்டிய வழக்கங்கள்


Morning habits to support a healthy gut: நல்ல குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியம் ஆகும். ஏனெனில், மோசமான குடல் ஆரோக்கியத்தின் காரணமாக இதய பாதிப்பு, மூளை பாதிப்பு மற்றும் சருமத்தில் பாதிப்பு போன்ற பல்வேறு உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக வயிறு உப்புசம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இந்நிலையில் நல்ல குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும், நல்ல செரிமானத்தை மேம்படுத்தவும் பின்பற்ற வேண்டிய சில காலை பழக்கங்கள் குறித்து மருத்துவர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன் படி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு காலையில் செய்ய வேண்டிய சில பழக்க வழக்கங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

குடல் ஆரோக்கியத்திற்காக காலையில் செய்ய வேண்டிய பழக்கங்கள்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மருத்துவர் பகிர்ந்த காலை பழக்கங்களைக் காணலாம்.

காபிக்கு முன் தண்ணீர் அருந்துவது

“காலை நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது தூக்கத்திற்குப் பிறகு நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே முதலில் காஃபின் குடிப்பதற்கு முன்பாக, 1-2 கப் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்க வேண்டும்” என மருத்துவர் பகிர்ந்துள்ளார். இது தவிர, குடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையைப் பராமரிக்கவும், அல்சரைத் தடுக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சியா விதைகள் + தயிர் - குடல் ஆரோக்கியத்தை பலமடங்கு மேம்படுத்தும் சக்திவாய்ந்த கூட்டணி.. மருத்துவரின் விளக்கம்.!

காலை சூரிய ஒளியைப் பெறுவது

நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர் பரிந்துரத்த இரண்டாவது காலை பழக்கமாக காலை நேரத்தில் சூரிய ஒளியைப் பெறுவது ஆகும். இது உடல் கடிகாரத்தை மீட்டமைக்கவும், சிறந்த செரிமானத்திற்காக செரோடோனின் அளவை அதிகரிக்கவும் உதவுவதாக நிபுணர் பகிர்ந்துள்ளார். மேலும் விழித்தெழுந்த ஒரு மணி நேரத்திற்குள் 5-10 நிமிடங்கள் வெளியே செல்ல பகிர்ந்துள்ளார். ஏனெனில், சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை மேம்படுத்தி, குடல் நுண்ணுயிரிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

காலை சுவாசப் பயிற்சி

காலை நேரத்தில் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது “வேகஸ் நரம்பை செயல்படுத்துகிறது மற்றும் குடல்-மூளை அச்சை அமைதிப்படுத்துகிறது. காலை உணவுக்கு முன் 2-3 நிமிடங்கள் ஆழமான வயிற்று சுவாசம்செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளிவிடும் பழக்கம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை குறைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த பழக்கம் குடல்களை வலுப்படுத்த உதவுகிறது.

ப்ரீபயாடிக் பூஸ்ட்

காலை நேரத்தில் ப்ரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்வது நாளின் தொடக்கத்திலிருந்தே நல்ல பாக்டீரியாக்களை ஊட்டுகிறது. எனவே காலை உணவில் சிறிது பச்சை வாழைப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்க்கலாம். காலை நேரத்தில் பச்சை வாழைப்பழங்களை உட்கொள்வது குடல் பாக்டீரியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஓட்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

காலை உணவில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள்

காலை உணவாக புரதம், நார்ச்சத்து மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், குடல் நுண்ணுயிரிகளுக்கு எரிபொருளாகிறது. இதற்கு பெர்ரி, சியா அல்லது ஆளி விதையுடன் கிரேக்க தயிர் அல்லது காய்கறிகளுடன் முட்டைகள் + கேஃபிர்/லஸ்ஸி பானத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவுப்பொருள்கள் அனைத்தும் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கு இந்த 9 உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கோங்க.. மருத்துவர் சொன்னது

திரைகள் இல்லாமல் சாப்பிடுவது

நிபுணரின் கூற்றுப்படி, “சாப்பிடுவது பாராசிம்பேடிக் அமைப்பை செயல்படுத்துகிறது (செரிமானம்) ஸ்க்ரோலிங் அனுதாப அமைப்பைத் தூண்டுகிறது (சண்டை/பறப்பு)” எனக் குறிப்பிடுகிறார். மேலும், “குடல் மற்றும் மூளை ஒன்றாக வேலை செய்யட்டும் - முடிக்கும் வரை தொலைபேசியைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.

காலை உணவுக்குப் பிறகு நடப்பது

காலை உணவுக்குப் பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது “செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உணவுக்குப் பிறகு வீக்கம் குறைகிறது. அதிலும் 2-5 நிமிடங்கள் கூட வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார். பொதுவாக உணவுக்குப் பிறகு நடப்பது சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

தினமும் மலம் கழிக்கும் பரிசோதனை செய்வது

“மலம் ஒரு தினசரி குடல் சுகாதார அறிக்கை அட்டை எனவும், நிறம், வடிவம் மற்றும் எளிமையைப் பார்ப்பது மற்றும் பிரிஸ்டல் 3-4ஐ நோக்கமாகக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதாவது பிரிஸ்டல் மலம் விளக்கப்படம் ஆனது மலத்தின் வடிவம், வகை மற்றும் செரிமான ஆரோக்கியத்துடன் அதன் தொடர்பை விவரிக்கிறது. இதில் 7 வகைகள் உள்ளது. வகை 3 மற்றும் 4 இரண்டுமே ஆரோக்கியமான செரிமானத்தைக் குறிக்கிறது.

இந்த காலை பழக்கவழக்கங்கள் நாள் முழுவதும், குடலுக்கு ஏற்ற தொனியை அமைக்கிறது. இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியமா இருக்க மருத்துவர் சொன்ன இந்த பழக்க வழக்கங்களை 21 நாள்கள் பின்பற்றுங்க

Image Source: Freepik

Read Next

மாதவிடாய் வலி தாங்க முடியலையா? நிபுணர் கூறும் இயற்கை தீர்வுகள் இதோ..

Disclaimer