செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க நீங்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ

Best morning foods to improve gut health naturally: ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளின் மூலம் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளிட்ட சில நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கலாம். இதில் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைப்பதற்கு காலையில் சாப்பிடவேண்டிய சில ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க நீங்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ


Top breakfast choices to support a healthy digestive system: உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். இது உடலில் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பது, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் ஹார்மோன் சமநிலையை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது. கூடுதலாக, ஒரு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி உடல் பருமன், நீரிழிவு மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளிட்ட சில நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்நிலையில், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்கு சமநிலையான உணவை உட்கொள்வது ஆரோக்கியமான குடலைப் பராமரிக்க மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குறித்து, 'குடல் மருத்துவர்' என்று பிரபலமாக அறியப்படும் எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் குடலை நல்ல நிலையில் வைத்திருக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருக்க மழைக்காலத்தில் நீங்க சாப்பிடக்கூடாத உணவுகள்

குடல் ஆரோக்கியத்திற்காக சிறந்த காலை உணவு விருப்பங்கள்

சியா மற்றும் பெர்ரிகள் சேர்த்த ஓட்ஸ்

இரவில் ஊறவைத்த ஓட்ஸ் உடன் சியா மற்றும் பெர்ரிகளைச் சேர்ப்பது, நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை வளர்க்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்ததாகும். ஓட்ஸில் உள்ள அதிகளவிலான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அதே சமயம், சியா விதைகளில் புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் பெர்ரியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.

பாதாம் பால் மற்றும் சியா புட்டிங்

சியா புட்டிங்கில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மேலும், பாதாம் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான அமைப்பில் மென்மையான உணர்வைத் தருகிறது. இது குடலுக்கு உகந்த உணவுக்கு ஒரு சிறந்த தளமாக அமைகிறது.

பருப்பு தோசையுடன் தேங்காய் சட்னி

தோசை மாவு புளிக்க வைக்கப்படுவதால் இது குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும், பருப்பில் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது. அதே சமயம், குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் தேங்காய் சட்னியில் உள்ளன.

புளிப்பு ரொட்டியுடன் வெண்ணெய் பழம்

புளிக்க வைத்து தயார் செய்யப்படும் புளிப்பு ரொட்டியுடன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த வெண்ணெய் பழத்துடன் இணைப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை செரிமானத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த குடல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.

மாதுளையுடன் கூடிய எளிய தயிர்

குடல் நுண்ணுயிரியைப் பராமரிக்க உதவும் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக தயிர் அமைகிறது. இதில் மாதுளை சேர்ப்பது இயற்கையான இனிப்பை வழங்குகிறது. இது அதிக ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது செரிமான ஆரோக்கியத்தை மேலும் ஆதரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: செரிமான பிரச்சனையை சரி செய்ய அடிக்கடி ENO குடிப்பீங்களா? அப்போ கண்டிப்பா இதை படியுங்க!

முளைத்த மூங் சாலட்

முளைத்த மூங் பருப்பில் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் நொதிகள் உள்ளது மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஜீரணத்தை எளிதாக்கலாம்.

வால்நட்ஸ், ஆளி விதை மற்றும் இலவங்கப்பட்டையுடன் சூடான ஓட்ஸ்

இந்த ஆரோக்கியமான காலை உணவு விருப்பம் செரிமான அமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பல குடல்-மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi (@doctor.sethi)

முழு தானிய ரொட்டியில் வேர்க்கடலை வெண்ணெயுடன் வாழைப்பழம்

இந்த ஆரோக்கியமான காலை உணவு விருப்பத்தில் புரதம், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ப்ரீபயாடிக்குகள் போன்றவை உள்ளன.

கீரையுடன் டோஃபு ஸ்க்ராம்பிள்

டோஃபு என்ற தாவர அடிப்படையிலான புரத மூலம் எளிதில் செரிமானம் அடையக்கூடியதாகும். மேலும், கீரையை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

பெர்ரி மற்றும் கேஃபிர் ஸ்மூத்தி

பெர்ரி மற்றும் கேஃபிர் ஸ்மூத்தியை அன்றாட உணவில் சேர்ப்பது செரிமானத்தை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்களின் சக்தி மையத்தை வழங்க உதவுகிறது.

ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை சரியாகத் தொடங்குவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலும், இவை உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மான்சூன் சீசனில் உங்க குடல் ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய புரோபயாடிக் உணவுகள்

Image Source: Freepik

Read Next

கொலஸ்ட்ராலா.? கவலை வேண்டாம்.. உடனே உங்க டயட்டில இத சேருங்க..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version