காலை உணவு என்பது நம் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் முக்கியமான உணவாகும். ஆனால், ஆரோக்கியமான குடலுக்குப் பொருத்தமான காலை உணவுகள் எவை என்பது குறித்து பெரும்பாலானோர் தெளிவாக அறிந்திருக்கமாட்டார்கள். இதற்கான விடையை, AIIMS மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தெரிவித்துள்ளார்.
இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி போன்ற தென்னிந்திய பாரம்பரிய உணவுகள் மட்டுமல்லாமல், உலகளவில் பரவலாக பயன்படும் சில உணவுகளும் குடல் நலனுக்குப் பெரிதும் உதவுகின்றன என அவர் கூறியுள்ளார்.
மருத்துவரின் விவரம்
குடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த காலை உணவுகள்
1. இட்லி, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி
* Probiotics, நார்ச்சத்து, தாவர புரதம் நிறைந்தது.
* குடல் பாக்டீரியாவை வளர்க்கும் பாரம்பரிய தென்னிந்திய உணவு.
2. டோஃபு ஸ்க்ராம்பிள் மற்றும் வதக்கிய காய்கறிகள்
* தாவர புரதம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்தது.
* அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை எளிதாக்கும்.
3. கிரேக்க தயிர், பெர்ரி மற்றும் சியா விதைகள்
* Probiotics, antioxidants, Omega-3 நிறைந்தது.
* குடல் நுண்ணுயிர் சமநிலையை பாதுகாக்கும், வீக்கத்தைக் குறைக்கும்.
4. ஓட்ஸ், ஆளிவிதை மற்றும் வாழைப்பழம்
* கரையக்கூடிய நார்ச்சத்து, Probiotics அதிகம்.
* இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
5. ஆம்லெட், மல்டிகிரைன் டோஸ்ட்
* மெலிந்த புரதம், complex carbs, வைட்டமின்கள் நிறைந்தது.
* நீண்ட நேரம் பசியைத் தணித்து, குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
6. முட்டை, குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட கோழி, முழு கிரைன் டோஸ்ட்
* புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள்.
* அவகேடோவுடன் சேர்த்தால் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும்.
7. முழு தானிய அவகேடோ டோஸ்ட்
* நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் நிறைந்தது.
* குடல் நுண்ணுயிர் பன்முகத்தன்மையை மேம்படுத்தும்.
8. காய்கறிகள் மற்றும் வேர்க்கடலையுடன் போஹா
* நார்ச்சத்து மற்றும் தாவர புரதம் நிறைந்தது.
* லேசானது, செரிமானத்திற்கு ஏற்றது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது.
View this post on Instagram
இறுதியாக
“சிறந்த குடல் காலை உணவில் புரதம், probiotics, prebiotics மற்றும் பாலிபினால்கள் அடங்கியிருக்க வேண்டும்” என்று டாக்டர் சௌரப் சேத்தி வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பு
இந்த பதிவு, தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடல் நல பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version