Which supplement is best for longevity: ஒவ்வொருவரின் முதுமையும் இயற்கையான ஒன்று. எனினும் இன்றைய கால உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை இந்த செயல்முறையை வேகமாக்குவதில் முக்கிய பங்களிக்கிறது. இதில் மக்கள் பலரும் இந்த நீண்டகால வயதான செயல்முறையை மெதுவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இன்றைய கால தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியின் சமீபத்திய முன்னேற்றங்கள் முதுமை செயல்முறையை மெதுவாக்குவதை நெருக்கமாக்குகிறது.
உடல் வயதாவதைத் தடுக்க முடியாவிட்டாலும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் வயது தொடர்பான நோய்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கலாம். இது சில வயதான செயல்முறைகளை மெதுவாக்கலாம். இதற்கு உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சில நேரங்களில் வயதான எதிர்ப்பு மாத்திரைகளை உட்கொள்வது ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதில் நீண்ட ஆயுளை அதிகரிக்க உதவும் சில சப்ளிமெண்ட்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Anti-Ageing Fruits: நீக்க எப்பவும் இளமையா இருக்கணுமா? அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க!
முதுமையைக் குறைக்க சப்ளிமெண்ட்ஸ் உதவுமா?
ஹெல்த் வலைதளத்தில் குறிப்பிட்ட படி, முதுமை என்பது உடல் மற்றும் உயிரியல் செயல்பாடுகளில் ஏற்படும் இயற்கையான சரிவு ஆகும். நீண்ட காலம் வாழக்கூடிய மக்கள் உள்ளனர். அதே சமயம், நாள்பட்ட சுகாதார நிலைமைகளுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வயதான காலத்தில் ஏற்படும் செல்லுலார் மாற்றங்களில் செல்லுலார் தொடர்பு சிக்கல்கள், செல்லுலார் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அடங்குகிறது. இந்த செல்லுலார் மாற்றங்கள் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், சமீபத்திய ஆண்டுகளில், ஆராய்ச்சியாளர்கள் நீண்ட ஆயுளை மேம்படுத்துவதற்கும், நாள்பட்ட மற்றும் வயது தொடர்பான சுகாதார நிலைமைகள் ஏற்படுவதைக் குறைப்பதற்கும் வழிகளை மதிப்பீடு செய்துள்ளனர். இதில் பல ஆய்வுகளில் குறிப்பிட்ட சில வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கூடுதலாகச் சேர்ப்பது நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை ஆதரிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
நீண்ட ஆயுளை அதிகரிக்க உதவும் சப்ளிமெண்ட்ஸ்கள்
வைட்டமின் டி
இது இயற்கையாகவே உணவு மற்றும் நேரடியாக சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடியதாகும். மேலும் இது சப்ளிமெண்ட்ஸ் வகையிலும் கிடைக்கிறது. வைட்டமின் டி ஆனது உயிரணு வளர்ச்சி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது நீண்ட ஆயுளைத் தருவதாகவும் கூறப்படுகிறது. குறைந்த அளவு வைட்டமின் டி ஆனது வயதான மக்களில் விரைவான முதுமை, டிமென்ஷியா மற்றும் அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளைத் தருகிறது. மேலும் இது இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, முன்னர் சேதமடைந்த டிஎன்ஏ சேதத்தைத் தடுப்பது மற்றும் சரிசெய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
மக்னீசியம்
உடலுக்குத் தேவையான பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்களில் மக்னீசியமும் ஒன்றாகும். இது உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்களில் உள்ள ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது தசை மற்றும் நரம்பு செயல்பாடு, இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் பங்கு வகிக்கிறது. மேலும், வயதாகும்போது மெக்னீசியம் குறைபாடு ஏற்படுவது பொதுவானதாகும். இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.
மக்னீசியம் சத்துக்கள் செல்லுலார் தொடர்பு, மரபணு நிலைத்தன்மை மற்றும் ஆரோக்கியமான புரதங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது.முழு தானியங்கள், பச்சை இலை காய்கறிகள் போன்ற இயற்கையாகவே மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, மெக்னீசியம் மட்டும் உள்ள தயாரிப்பு அல்லது பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இணைந்த வடிவிலும் சப்ளிமெண்ட்ஸ் கிடைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Anti-Aging Tips: உங்க வயசா விட 10 வயது இளமையா தெரியனுமா? தினமும் காலையில் இதை செய்யுங்க!
குர்குமின்
மஞ்சளில் குறிப்பாகக் காணப்படும் ஒரு இயற்கை தாவர கலவையே குர்குமின் ஆகும். இது அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த குர்குமின் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், டிஎன்ஏ பழுது செல்கள் இறப்பு உள்ளிட்ட செல்லுலார் வயதான செயல்முறைகளில் பங்கு வகிக்கும் புரதங்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. குர்குமினை தனியாகவோ அல்லது மஞ்சள் சப்ளிமெண்ட்டாகவோ சேர்க்கலாம். எனினும், குர்குமினை பாதுகாப்பான அளவில் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் இது வயிற்றுப்போக்கு, தலைவலி, சொறி, குமட்டல் மற்றும் மஞ்சள் நிற மலம் போன்றவற்றிற்கு பங்களிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நியாசின் மற்றும் நிகோடினமைடு
நியாசின் அல்லது வைட்டமின் பி3 என்பது கோழி, மீன், மாட்டிறைச்சி மற்றும் தானியங்கள் போன்ற சில உணவுகளில் காணப்படக்கூடிய ஒரு அத்தியாவசிய வைட்டமினைக் குறிக்கிறது. இதை தனியாகவோ அல்லது பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் இணைத்தோஎடுத்துக் கொள்ளலாம். உடல் நியாசினை நிகோடினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு (NAD) மற்றும் டிரிப்டோபனாக மாற்றுகிறது. இந்த NAD செல்லுலார் தொடர்பு, ஆற்றல் உற்பத்தி மற்றும் செல்லுலார் வெளிப்பாட்டைப் பராமரிப்பது உள்ளிட்டவற்றிற்குத் தேவைப்படுகிறது.
நியாசின் அல்லது நிகோடினமைடு உடலில் ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த செல்லுலார் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் நாள்பட்ட நோய்களுக்கான ஆபத்தைக் குறைக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Vegan Diet: 8 வாரம் வேகன் டயட் இருந்தா உயிரியல் வயது குறையும்! ஆய்வு கூறுவது என்ன?
Image Source: Freepik